Published:Updated:

காசி மாநகர் அற்புதங்கள்: 600 கோடி செலவில் 239 ஆண்டுகளுக்குப் பின் மிளிரும் விஸ்வநாதர் ஆலய வளாகம்!

காசி விஸ்வநாதர்

வாரணாசி, பிரதமரின் மோடியின் சொந்தத் தொகுதி. கடந்த ஜூலை மாதம் நிகழ்ந்த கும்பாபிஷேகத்தை ஒட்டி கோயில் வளாகத்தைப் புதுப்பிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன. அந்தப் பணிகள் தற்போது முடிவடைந்து நாளை பிரதமர் மோடி வளாகத்தைத் திறந்துவைக்கிறார்.

காசி மாநகர் அற்புதங்கள்: 600 கோடி செலவில் 239 ஆண்டுகளுக்குப் பின் மிளிரும் விஸ்வநாதர் ஆலய வளாகம்!

வாரணாசி, பிரதமரின் மோடியின் சொந்தத் தொகுதி. கடந்த ஜூலை மாதம் நிகழ்ந்த கும்பாபிஷேகத்தை ஒட்டி கோயில் வளாகத்தைப் புதுப்பிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன. அந்தப் பணிகள் தற்போது முடிவடைந்து நாளை பிரதமர் மோடி வளாகத்தைத் திறந்துவைக்கிறார்.

Published:Updated:
காசி விஸ்வநாதர்
இந்து தர்மத்தின் ஞான ஆன்மிக மையம் என்று போற்றப்படும் நகரம் காசி. ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க நினைக்கும் புண்ணியத் தலம். புராணங்கள், இதிகாசங்கள், வரலாறு ஆகிய மூன்றும் போற்றிப்புகழும் திருநகரம். சிவபெருமான் பார்வதி ஆகிய இருவரின் பொற்பாதங்களும் பதிந்த புண்ணிய பூமி காசி என்பது நம்பிக்கை, இங்கு காத்து நிற்கும் காலபைரவரே பெரும்பதி. இங்குதான் உலக உயிர்களின் பசிப்பிணித் தீர்க்கும் அம்பிகையாக தேவி அன்னபூரணியாய் அருளும் செய்கிறாள்.
காசி
காசி

மோட்சம் தரும் ஏழு தலங்களுள் ஒன்று காசி. மற்றவை அயோத்தி, மதுரா, ஹரித்வார், காஞ்சி, அவந்தி, துவாரகா ஆகியவை. ‘கஸ்’ என்றால் ‘ஒளிர்தல்’ என்று பொருள். இந்த நகரின் தெற்கே அஸி நதியும், வட கிழக்கே வருணை நதியும் கங்கையுடன் கலப்பதால் இந்தத் தலம் ‘வாரணாசி’ என்றும் அழைக்கப்படுகிறது.

கிருத யுகம் - திரிசூல வடிவம், திரேதா யுகம் - சக்கர வடிவம், துவாபர யுகம் - தேர் வடிவம், கலி யுகம் -சங்கு வடிவம் என்று காசி நகரம் விளங்குவதாக காசி ரகசியம் நூல் கூறுகிறது. பகவான் மகாதேவ், தனது திரிசூலத்தின் மீது நின்று, காசியைப் படைத்தார் என்பது ஐதிகம்.

ஈசன் இங்கு தங்கி அருளுவதால் ‘ருத்ர வாசம்’ என்றும் ஞானம் வளர்க்கும் பூமி என்பதால் `ஞானபுரி என்கிற பிரம்மவர்த்தனா’ என்றும் ஸ்காந்த புராணம் கூறுகிறது. வெள்ளைக்காரர்களால் ‘பனராஸ்’ என்று குறிப்பிடப்பட்டதும் இந்த நகரமே.

"முந்தைய ஜன்மங்களில் ஏராளமான ஆலயங்களுக்குச் சென்று வழிபட்ட உயிர்களுக்கு மட்டுமே இந்த ஜன்மத்தில் காசி நகரின் கதவுகள் திறக்கும்" என்கிறது சிவமகா புராணம். இங்கு மரணம் அடையும் உயிர்களைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, அவர்களின் செவியில் தாரக மந்திரத்தை உரைத்துக் கரையேற்றுவாராம் ஈசன்.

காசி
காசி

இத்தகைய பல சிறப்புகளையுடைய காசியில் கங்கைக் கரையை ஒட்டி 87 படித்துறைகள் அமைந்துள்ளன. அவற்றுள் மணிகர்ணிகா படித்துறை, தசஅஷ்வமேத படித்துறை, அரிச்சந்திரன் படித்துறை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இங்கு இருக்கும் காசி விஸ்வநாதர் கோயில் யுகங்கள் கடந்தும் இருக்கும் அற்புதத் திருத்தலம் என்கிறார்கள். அப்படிப்பட்ட புனிதத் தலம் அந்நியப் படையெடுப்புகளால் பலமுறை தகர்க்கப்பட்டிருக்கிறது. இதுவரை வரலாற்றில் பதிவானவரை மூன்று முறை இடிக்கப்பட்டுள்ளது இந்தக் கோயில் என்று சொல்கிறார்கள்.

ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த ஆலயம் புதுப்பொலிவோடு மீண்டு எழுந்து நிலைத்திருக்கிறது.

அக்பரின் ஆட்சிக்காலத்தில் அவரின் அமைச்சராக விளங்கிய தோடர்மாலின் உதவியுடன் நாராயண பட் என்பவர்தான் இந்தக் கோயிலை எடுத்துக் கட்டினார். ஆனால் மீண்டும் 1669-ம் ஆண்டு, ஔரங்கசீப் படையெடுப்பின்போது இக்கோயில் தகர்க்கப்பட்டு அங்கு ‘ஞான பாபி’ என்னும் மசூதி கட்டப்பட்டது என்கின்றன வரலாற்று நூல்கள்.

1779-ம் வருடம், இந்தூர் மகாராணி அகல்யா பாய் ஹோல்கர், ஞான பாபி மசூதிக்கு அருகிலேயே தற்போது இருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலைக் கட்டி எழுப்பினார். அதன் பின் இந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெறாமலும் புதுப்பிக்கப்படாமலும் இருந்தது. 239 ஆண்டுகளுக்குப்பின் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதிதான் காசி விஸ்வநாதர் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காசி விஸ்வநாதர் ஆலய வளாகம்
காசி விஸ்வநாதர் ஆலய வளாகம்

வாரணாசி, பிரதமரின் மோடியின் சொந்தத் தொகுதி. இந்தக் கும்பாபிஷேகத்தை ஒட்டி கோயில் வளாகத்தைப் புதுப்பிக்க 600 கோடி ரூபாய் செலவில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஜூலை மாதம் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் பிறபணிகளும் தற்போது முடிந்து ஆலய வளாகம் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றது.

இதில், கங்கை நதிக்கரையையும் கோயிலையும் இணைக்கும் லலிதா படித்துறையில் இருந்து விஸ்வநாதர் கோயில் வரை 320 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் தங்கும் மையம் ஆகியனவும் இந்தத் திட்டத்தின் படி புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.

இந்த வளாகத்தை நாளை (டிசம்பர் 13) பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். இதில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்துமதம் சார்ந்த துறவிகள், மடாதிபதிகள், தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்தத் தொடக்கவிழாவைக் காண நேரலை ஒளிபரப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.