சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

'தடையின்றி நடக்கட்டும் கும்பாபிஷேகம்!'

கீழ்சித்தாமூர் சிவாலயம்
பிரீமியம் ஸ்டோரி
News
கீழ்சித்தாமூர் சிவாலயம்

திருப்பணி முழுமைப் பெற காத்திருக்கும் கீழ்சித்தாமூர் சிவாலயம்

திருமணம், குழந்தைப்பேறு, வேலை வாய்ப்பு, தேக ஆரோக்கியம் என நம் சித்தம் விரும்பும் வரங்களைக் கேட்டதும் அருளும் ஈசன் அருள்பாலிக்கும் அற்புதத் தலம்தான் சித்திவனம். திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இவ்வூர் தற்போது கீழ் சித்தாமூர் என்று வழங்கப்படுகிறது.

கீழ்சித்தாமூர் சிவாலயம்
கீழ்சித்தாமூர் சிவாலயம்

`சித்தர்களால் வழிபடப்பட்டவர் என்பதால் இவ்வூர் இறையனாருக்குச் சித்தீஸ்வரர் என்று திருப்பெயர் வந்தது’ என்கிறார்கள் பக்தர்கள். அம்பாள் அருள்மிகு சிவகாமியம்மை.

இந்தக் கோயிலில், சுயம்புலிங்கத் திருமேனியராக, சுமார் 8 அடி உயரம் - சதுர வடிவ ஆவுடை யுடன் பிரமாண்ட உருவினராய் அருள்கிறார் சித்தீஸ்வரர். ஆலயத்தின் முன்பக்கத்தில் அம்பாள் சிவகாமி அம்மையை தரிசிக்கலாம். கல்லில் வடிவமைக்கப்பட்ட திரிசூலமும் அபூர்வமான லகுலீஸ்வரர் சிற்பமும் இந்தக் கோயிலின் விசேஷ அம்சங்கள் என்கிறார்கள்.

`லகுலீஸ்வரர்’ எனும் பெயர் ஈசனின் 28-வது திருநாமம் என்கிறது சைவம். ஈசன் மீது அதீத பக்தி கொண்ட அகோரிகள் வழிபடும் தெய்வம் லகுலீஸ்வரர். குஜராத் மாநிலத்தில் தோன்றிய இந்த வழிபாடு விரிவடைந்து, பல்லவர் காலத்தில் தமிழ்நாட்டில் பிரபலமானது என்பார்கள். தமிழகத்தில் சித்தாமூர் மற்றும் ஆலகிராமம் ஆகிய இரண்டு ஊர்களில் மட்டுமே இந்தச் சிற்பம் அமைந்துள்ளது என்கிறார்கள், ஆய்வாளர்கள். மட்டுமன்றி `இந்தச் சிற்பங்கள் இருக்கும் ஆலயங்கள், குறைந்தது 1300 ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாக இருக்கும்’ என்பது அவர்களின் கருத்து.

நந்தி
நந்தி
சித்தீஸ்வரர்
சித்தீஸ்வரர்

அவ்வண்ணமே மிகத் தொன்மையும் பல்லவர் காலத்தில் புகழ் பெற்றும் திகழ்ந்ததாம் இந்த ஆலயம். ஆனால் காலத்தின் கோலம் மெள்ள மெள்ள சிதிலமுற் றது. 20 வருடங்களுக்கு முன்பு, பல்லவர்கள் அமைத்த அடித்தளத்தின் மீதே புதிய கட்டுமானம் தொடங்கப்பட்டது. ஆனால், பல்வேறு சூழல்கள் மற்றும் நிதிப் பற்றாக்குறை யால் கட்டுமானப் பணிகள் தடைப்பட்டன.

எனினும், பிரதோஷம், மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம் போன்ற வைபவங் கள் விமரிசையாக நடைபெற்று வந்தன. ஆலயத்தின் பணிகள் விரைவில் பூர்த்தியாக வேண்டும் என்று உள்ளூர் அன்பர்களும் பக்தர்களும் தினமும் அந்த ஈசனிடம் வேண்டு தல் வைத்து வந்தனர். இந்நிலையில் திருப் பணிகள் மீண்டும் தொடங்கி, கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வருகின்றன.

செல்வவிநாயகர், நர்த்தன கணபதி, பாலசுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, திருமால், சண்டிகேஸ்வரர், துர்கை, நந்தி உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்களின் திருமேனிகள் தயாராயின. அன்பர்களும் நம்பிக்கையோடு 3.2.23 அன்று திருக்குட நன்னீராட்டு வைபவம் நடத்துவது என்று பெரியோர்கள் வழிகாட்டுதலுடன் நாள் குறித்தார்கள். ஆனால், மீண்டும் நிதிப் பற்றாக் குறை! தரைப் பூச்சு, வண்ண வேலைப்பாடுகள் முதலான பணிகள் முடிவுறாமல், கும்பாபிஷேக வேலைகள் தடைப்பட்டு நிற்கின்றன.

கீழ்சித்தாமூர் சிவாலயம்
கீழ்சித்தாமூர் சிவாலயம்

``கருணை உள்ளம் கொண்ட அன்பர்கள் உதவினால் நிச்சயம் இந்த ஆலயத்தின் குட முழுக்கு விரைவில் நடந்தேறும்’’ என்று வேண்டுகோள் வைக்கிறார்கள், இந்த ஆலயத் தைப் புனரமைக்கும் அடியார்கள். திருப் பணியை முன்னின்று தொடங்கிய அன்பர் ஆறுமுகத்திடம் பேசினோம்.

‘என் தந்தையார் காலத்திலேயே இந்த ஆலயம் சிதைந்துபோய் வழிபட முடியாத நிலையிலேயே இருந்தது. அவ்வப்போது, இயன்றவரை ஆலயத்தைச் சீர்செய்தும் வழிபட்டும் வந்துள்ளார்கள். நான் வளர்ந்த பிறகு, எப்படியாவது இந்தக் கோயிலைப் புனரமைக்கவேண்டும் என்று விரும்பினேன்.

`சாபமோ என்னவோ... இந்தக் கோயில் இப்படியிருக்கு. இந்தப் பணிகளை நீ கையில் எடுக்காதே. தேவையில்லாத கஷ்டங்கள் வரலாம்’ என்று பலரும் பயமுறுத்தினார்கள். ஆனால் எனக்குள் வைராக்கியம்... ஈசன் தொண்டில் எந்தக் கஷ்டம் வந்தாலும் பார்த் துக் கொள்ளலாம் என்று ஆலயப் பணியைத் தொடங்கிவிட்டேன். ஆரம்பத்தில் பல கஷ்டங்கள் வரவே செய்தன. ஈசனின் அரு ளால் சகலத்தையும் எதிர்கொண்டோம்.

மெள்ள மெள்ள கோயில் எழும்பிவந்த நிலையில், பெருந்தொற்று காலத்தில் பணிகள் முற்றிலும் தடைப்பட்டன. ‘உன் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடாதா...’ என்று அனுதினமும் அந்த ஆண்டவனிடமே புலம்பி வந்தோம் நானும் நண்பர்களும்.

சிவனருள் கைகூடியது. பலரும் பலவிதத்தில் உதவினார்கள். பணிகள் மீண்டும் தொடங்கின. முக்கால் வாசி பணிகள் நிறைவடைந்துவிட்டன. சிவ பக்தர்கள் உதவி செய்தால், பாக்கிப் பணி களும் பூர்த்தியாகி விடும். சிவாலயத் திருப் பணிக்கு அன்பர்கள் வழங்கும் செல்வம், அவர்களின் எதிர்கால சந்ததியை வாழ்வாங்கு வாழவைக்கும் என்கின்றன ஞானநூல்கள். ஆகவே, அன்பர்கள் மனமுவந்து எங்கள் ஆலயப் பணிக்கு உதவவேண்டும். குறிப்பிட்ட தேதியில் ஆலயக் கும்பாபிஷேகம் நிகழ, நம் ஈசன் கம்பீரமாய்க் கருவறைக்குள் எழுந்தருள வேண்டும். இதுவே எங்களின் ஆசையும் விருப்பமும்’’ என்கிறார் ஆறுமுகம்.

அவரின் விருப்பம் நிச்சயம் நிறைவேறும். சித்தீஸ்வரரின் அருளால் ஆலயம் பொலிவு டன் எழும்பும்; அங்கே ஆண்டவன் அழகு மிளிர குடிகொள்வார் (தொடர்புக்கு: கே.ஆறுமுகம் - 81108 38788).