Published:Updated:

குழந்தைகளைக் காக்கும் கொல்லங்கோடு பத்திரகாளி - 48 அடி உயர வில்லில் மீன பரணி தூக்க நேர்ச்சை வழிபாடு!

கொல்லங்கோட்டில் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை

குழந்தைகளைக் காக்கும் தெய்வமாகக் கொல்லங்கோட்டம்மனை பக்தர்கள் வழிபடுகிறார்கள். பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடையும் முன் தூக்க நேர்ச்சை வழிபாடு நடத்துவது வழக்கம்.

குழந்தைகளைக் காக்கும் கொல்லங்கோடு பத்திரகாளி - 48 அடி உயர வில்லில் மீன பரணி தூக்க நேர்ச்சை வழிபாடு!

குழந்தைகளைக் காக்கும் தெய்வமாகக் கொல்லங்கோட்டம்மனை பக்தர்கள் வழிபடுகிறார்கள். பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடையும் முன் தூக்க நேர்ச்சை வழிபாடு நடத்துவது வழக்கம்.

Published:Updated:
கொல்லங்கோட்டில் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பழைமை வாய்ந்த கொல்லங்கோடு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் கேரள எல்லையில் அமைந்துள்ளது. கொல்லங்கோடு கண்ணனாகம் ஜங்ஷனுக்கு மேற்கே வட்டவிளையில் பத்திரகாளி அம்மன் மூலக் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் ஆண்டு முழுவதும் அம்மன் காட்சி தருவார். கண்ணனாகத்துக்குக் கிழக்கே வெங்கஞ்சியில் திருவிழா காலங்களில் மட்டும் அம்மன் காட்சி அருளுவார். கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் மீனபரணிக் கொடை விழா கடந்த 26-ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்குவதற்கு முன்பு மூலக் கோயிலில் இருந்து திருவிழா நடக்கும் பகுதிக்கு அம்மன் எழுந்தருளினார்.

கொல்லங்கோடு கோயிலில் தூக்க நேர்ச்சை வழிபாடு
கொல்லங்கோடு கோயிலில் தூக்க நேர்ச்சை வழிபாடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொரு வருடமும் மீன பரணி (பங்குனி மாத பரணி நட்சத்திரம்) அன்று நடைபெறும் தூக்க நேர்ச்சைத் திருவிழா மிகப் பிரசித்தி பெற்றதாகும். குழந்தைகள் இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடி இன்றி வாழ வேண்டியும் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் தூக்க நேர்ச்சை வழிபாடு நடத்துவதாக வேண்டுதல் செய்வது வழக்கம். அம்மன் அருளால் குழந்தை பாக்கியம் பெற விரும்பும் தம்பதிகளும், பிணி தீர பச்சிளம் குழந்தைகளும் மீன பரணி அன்று தூக்க நேர்ச்சை செலுத்துவது வழக்கம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குழந்தைகளைக் காக்கும் தெய்வமாக கொல்லங் கோட்டம்மனை பக்தர்கள் வழிபடுகிறார்கள். பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடையும் முன் தூக்க நேர்ச்சை வழிபாடு நடத்துவது வழக்கம். 48 அடி உயரமுள்ள இரண்டு தூக்க வில்களில் விரதம் இருக்கும் தூக்கக்காரர்கள் அந்தரத்தில் தொங்கியபடி குழந்தைகளைக் கைகளில் ஏந்தி அம்மன் எழுந்தருளி இருக்கும் பச்சை பந்தல் மற்றும் கோயிலை ஒரு முறை சுற்றி வந்து தூக்க நேர்ச்சையை நிறைவு செய்கின்றனர். இந்த வழிபாடுதான் தூக்க நேர்ச்சை என அழைக்கப்படுகிறது. குழந்தைகளை வில்லில் தூக்கிச்செல்லும் பக்தர்களைத் தூக்கக்காரர்கள் என அழைக்கப்படுகின்றனர். தூக்கக்காரர்கள் கோயிலில் தினமும் வழிபாடு செய்து நமஸ்கரித்து கடும் விரதம் இருப்பார்கள்.

தூக்க நேர்ச்சை
தூக்க நேர்ச்சை

இந்த வருடத் தூக்க நேர்ச்சை இன்று காலை துவங்கியது. முதலில் அம்மன் தூக்கம் நடைபெற்றது. தொடர்ந்து 1,098 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெற்றது. இந்தத் தூக்க நேர்ச்சை வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பல்லாயிர காணக்காண பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று காலையில் துவங்கிய இந்தத் தூக்கம் நாளை அதிகாலை வரை நடைபெற உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism