Published:Updated:

மாசிமகம்: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற முத்துப் பல்லக்கு வீதியுலா!

முத்துப் பல்லக்கு வீதியுலா

குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் மாசி மகப் பெருந்திருவிழாவினை முன்னிட்டு, முத்துப்பல்லக்குத் திருவீதி உலா கோலாகலமாக நடைபெற்றது.

Published:Updated:

மாசிமகம்: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற முத்துப் பல்லக்கு வீதியுலா!

குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் மாசி மகப் பெருந்திருவிழாவினை முன்னிட்டு, முத்துப்பல்லக்குத் திருவீதி உலா கோலாகலமாக நடைபெற்றது.

முத்துப் பல்லக்கு வீதியுலா

கரூர் மாவட்டம், குளித்தலை காவிரிக் கரை அருகே கடம்பவனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில், காசிக்கு அடுத்தபடியாக நதிக்கரையில் வடக்கு நோக்கி அமைந்த புகழ் பெற்ற சிவஸ்தலம் ஆகும்.

இங்கு வந்து வணங்கினால், காசிக்குச் சென்று வணங்கியதற்குச் சமம் என்பது ஐதிகம். மேலும், இந்தக் கோயில் முருகன், விஷ்ணு, பிரம்மன் ஆகியோரால் பூஜிக்கப்பட்டும், திருநாவுக்கரசர், அப்பர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடப்பட்ட சிவஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் மாசி மகப் பெருந்திருவிழாவினை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

சுவாமி
சுவாமி

அதனைத் தொடர்ந்து, தினந்தோறும் சுவாமி அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் யாழி, கருடன் அன்னம், குதிரை, கஜ, இந்திர விமானம் வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா கண்டருளினர். இந்நிலையில், மாசி மகத் திருவிழாவின் 11-ம் நாள் நிகழ்ச்சியாக முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

சோமஸ்கந்தர் பெரியநாயகி அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முத்துப் பல்லக்கில் எழுந்தருளினார். பக்தர்கள், 'ஓம் நமச்சிவாயா, ஹர ஹர மஹாதேவா' என கோஷமிட்டனர். அப்போது வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில், குளித்தலையைச் சுற்றியுள்ள பகுதிச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.