Published:Updated:

கோலாகலமாய் நடந்தேறிய திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!

கலசம்
கலசம்

காலை சரியாக 9.45 மணிக்கு கோயில் கோபுரங்களின் கலசங்கள் அனைத்திலும் ஒருசேர புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது.

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருத்தலத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மஹா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

தலபுராணத்தின்படி, பிறந்தால் இறந்தால் கண்டால் நினைத்தால் முக்தி தருகிற திருத்தலம் திருவான்மியூர். அகத்தியர், வால்மீகி, சம்பந்தர், நாவுக்கரசர் வழிபட்ட பெருமையுடைய தலம். இந்தத் தலத்தில் இந்தாண்டு கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கோயில் திருப்பணிகள் யாவும் நிறைவுபெற்று கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடங்கின.

`பெருவுடையாரே...!'-  விண்ணதிர கோஷங்கள் முழங்க நடைபெற்ற பெரிய கோயில் குடமுழுக்கு
கோயில்
கோயில்

கடந்த 2-ம் தேதி தொடங்கிய யாகசாலை பூஜைகள் முடிவடைந்து இன்று காலை கயிலாய வாத்தியங்களும் மேள தாளங்களும் முழங்க, வேதமந்திரங்களும் திருமுறைகளும் ஒலிக்க கலசங்களில் புனித நீரைச் சுமந்துகொண்டு சிவாச்சாரியார்கள் கோபுரங்களின் உச்சியை அடைந்தனர். சுவாமி, அம்பாள் கோபுரங்கள், ராஜகோபுரங்கள் உள்ளிட்ட அத்தனை கோபுரங்களிலும் அமைந்துள்ள கலசங்களில் புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. காலை சரியாக 9.45 மணிக்கு அனைத்துக் கோபுரக் கலசங்களிலும் ஒருசேர புனித நீர் அபிஷேகிக்கப்பட்டதை கண்ணாரக் கண்ட பக்தர்கள் அனைவரும் உச்சி குளிர்ந்து மெய்சிலிர்த்துப் போயினர்.

`ஆயிரம் ஆண்டு அதிசயம்; இருமொழிகளில் குடமுழுக்கு!'-  தஞ்சைப் பெரிய கோயில் விழா கோலாகலம் #Video

`ஓம் நமசிவாய', 'மருந்தீசனுக்குப் போற்றி' என பக்தி முழக்கமிட்டு வணங்கி பக்தர்கள் பரவசமடைந்தனர். கும்ப அபிஷேகத்துக்குச் சற்றுநேரம் முன்னதாகக் கிழக்குத் திசையிலிருந்து வந்த கருடன் மூலவர் விமானத்துக்கு மேலே வானத்தை மூன்று முறை வட்டமடித்து வடக்கு நோக்கிப் பறந்தது. கலசங்களுக்குத் தீபாராதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மூலவர் சந்நிதிகளிலும் புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த பக்தர்கள் மீது புனிதநீர் ஸ்ப்ரே மூலம் தெளிக்கப்பட்டது.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்
கும்பாபிஷேகம் காணவிருக்கும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் குறித்த 20 தகவல்கள்!

விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை தரிசித்து மகிழ்ந்து புனிதநீர் தீர்த்தம் பெற்றுக்கொண்டார். விழாவையொட்டி நூற்றுக்கணக்கான சிறப்புக் காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். மருத்துவ வசதிகள், ஆபத்துகால ஏற்பாடுகள் ஆகியவை தயார் நிலையில் இருந்தன. அதிகாலையிலிருந்தே கோயிலுக்கு வெளியே காத்திருந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனமும் புனித நீர் தீர்த்தமும் பெற்றுச்சென்றனர்.

பின் செல்ல