Published:Updated:

சமயபுரத்தாள் கோயிலில் ராஜகோபுர கும்பாபிஷேகம்

ஶ்ரீசமயபுரம் மாரியம்மன்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசமயபுரம் மாரியம்மன்

- சிவ. சதீஸ்குமார் -

சமயபுரத்தாள் கோயிலில் ராஜகோபுர கும்பாபிஷேகம்

- சிவ. சதீஸ்குமார் -

Published:Updated:
ஶ்ரீசமயபுரம் மாரியம்மன்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசமயபுரம் மாரியம்மன்

வானிலிருந்து இறங்கி வந்து அறம் செய்யும் மழைதான் அமிர்தம் என்கிறார் திருவள்ளுவர். இந்த மழையின் பெயரால் நாம் வழிபடும் தெய்வம்தான் மாரியம்மன். இந்த அம்பிகை அருள்புரியும் தலங்களில் ஒன்று சமயபுரம். கண்ணனூர், கண்ணபுரம், விக்கிரபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் சிறப்பு பெற்ற சமயபுரத்தில் - அம்பாளின் ஆலயத்தில், ராஜகோபுரத் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

சமயபுரத்தாள் கோயிலில் ராஜகோபுர கும்பாபிஷேகம்

னைத்து ஜீவராசிகளுடைய சிற்பங்களையும் தன்னகத்தே கொண்டு, அனைத்து உயிர்களும் ஆண்டவனின் படைப்புதான் என்ற ஆன்மநேயத்தை அறிவித்து, சுவாமியின் பார்வையில் சகலரும் சகலமும் சமம்தான் என்பதைக் காட்டி நிற்பது ராஜகோபுரம்.

திருவருளின் விசாலப் பகுதியாக விளங்கும் கோயிலுக்குள்ளே, எத்தனை முதன்மை மூர்த்திகள் உள்ளனர் என்பதைக் காட்டும் விலாசமாகவும் திகழ்வது ராஜகோபுரம். கலசங்களின் எண்ணிக்கை, உள்ளே இருக்கும் முதன்மை மூர்த்திகளின் எண்ணிக்கையைப் பொருத்தே அமையும். ஆகம நுட்பப்படி இறையின் திருப்பாத அம்சம் ராஜகோபுரம் என்பர்.

அவ்வகையில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் கிழக்கு நோக்கியவாறு ஏழு நிலை இராஜகோபுரம் 101 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 324 அலங்காரச் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சிற்பங்களால் அழகுபெற்றுத் திகழும் புதிய கோபுரத்தில், பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதைக் குறிக்கும் சிற்பக் காட்சிகளும் அமைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது. கோபுரத்தின் முதல் நிலை வடக்குப் பகுதியில் கரும்புத் தொட்டில் பிரார்த்தனைக் காட்சி, முதல்நிலை தெற்குப்புறத்தில் அக்னிச் சட்டி, அலகு குத்துதல் போன்ற பிரார்த்தனைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சமயபுரத்து அம்மனின் பச்சைப்பட்டினி விரத வைபவத்தில் பழங்கள் வைத்து திருவமுது படைத்தல், சித்திரைத் தேர் திருவிழா நிறைவு பெற்றதும், அம்மனுக்கு திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயத்திலிருந்து இந்த அம்மனுக்கு அபிஷேகப் பொருள்களை சீர் வரிசையாக வழங்குவது, திருவரங்கப் பெருமாள் அளிக்கும் சீர்வரிசை ஆகியவற்றைச் சித்திரிக்கும் சிற்பக்காட்சிகளும் உள்ளன.

ராஜகோபுரத்தின் ஏழு செப்புக்கலசங்களுக்கான கருங்காலி மரத்தைப் பொதிகை மலையிலிருந்து கொண்டு வந்து, இழுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய், முந்திரி எண்ணெய் கொண்டு பதப்படுத்தி கலசம் பொருத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திருப்பணிகள் தற்போது நிறைவு பெற்று, வரும் 6.7.2022 புதன்கிழமை காலை 6:45 மணிக்கு மேல் 7:25 மணிக்குள் ராஜ கோபுரத்தின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறவுள்ளது. இந்த வைபவத்தில் சகலரும் கலந்துகொண்டு, சமயபுரத்தாளின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று மகிழ்வோம்.