Published:Updated:

தொடர் மழை, நிலச்சரிவு, கவலையில் பக்தர்கள்... என்ன ஆச்சு திருப்பதிக்கு?! #Tirupati

திருப்பதி
News
திருப்பதி

திருமலை திருப்பதியில் கனமழை பெய்ததை அடுத்து இன்று காலை அந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. திருமலைக்குச் செல்லும் மலைப்பாதையில் மேலே செல்லும் வழியில் ஒரு ராட்சசப் பாறை உருண்டு மக்கள் பயணிக்கும் சாலையில் விழுந்துள்ளது.

திருமலை திருப்பதி, இந்திய மக்களின் மூச்சோடு கலந்த பெயர். ஆன்மிகத் தலங்களில் முதன்மையான தலம். சாதாரணமானவர் முதல் செல்வந்தர்வரை ஆண்டுக்கு ஒருமுறையாவது சென்று வழிபட்டுவர விரும்பும் தெய்வம் திருப்பதி வேங்கடவன். திருப்பதி சென்று திரும்பியதும் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்கள் ஏற்பட்டு வாழ்வில் வெற்றிப்பாதையை நோக்கிப் பயணத்தவர்கள் அநேகர்.

திருப்பதி
திருப்பதி
TTD PHOTO

அப்படி மக்களின் மனதோடும் ஆன்மாவோடும் பிணைந்திருக்கும் திருப்பதிக்கு சமீப நாள்களில் பல்வேறு சோதனைகள். பத்து நாள்களுக்கு முன்பு பெய்த கனமழையும் அதன் பின் உண்டான காட்டாற்று வெள்ளமும் பக்தர்களிடையே பேசுபொருளானது. மாபெரும் பிரளயமே தோன்றிவிட்டதோ என்ற அச்சம் தோன்றியது. அந்த அச்சம் மறைந்து சுமுகமான நிலை திரும்புவதற்குள் மற்றுமொரு அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருமலை திருப்பதியில் நேற்று (நவம்பர் 30) இரவு நல்ல மழை பெய்தது. அதன் விளைவு இன்று காலை (டிசம்பர் -1 ) அந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. திருமலைக்குச் செல்லும் மலைப்பாதையில் மேலே செல்லும் வழியில் ஒரு ராட்சசப் பாறை உருண்டு மக்கள் பயணிக்கும் சாலையில் விழுந்துள்ளது. அதிர்ஷ்ட வசமாக யாரும் அதில் சிக்க வில்லை. சற்று முன் கடந்த வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்து நின்றுவிட்டனர். அதைத் தொடர்ந்து நிலச் சரிவும் ஏற்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செய்திக்குறிப்பு, இதுவரை ஐந்து அல்லது ஆறு இடங்களில் இதுபோன்ற நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

திருப்பதி
திருப்பதி
TTD PHOTO

இதனால் திருமலைக்குச் செல்லும் பாதை பயணம் செய்ய இயலாத அளவுக்கு சில இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இந்தப் பாதையை சீர் செய்த திருப்பதி திருமலை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஊழியர்கள், துறை சார்ந்த வல்லுநர்களோடு சேர்ந்து பணி ஆற்றி வருகின்றனர்.

அதே வேளையில் திருமலையில் இருப்பவர்கள் மற்றும் திருமலைக்குச் செல்பவர்களின் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருமலையிலிருந்து இறங்கும் வழியே பயண வழியாக இருப்பதால் அப்பாதையிலேயே ஏறவும் இறங்கவும் வேண்டியிருக்கிறது. அதாவது ஒரு மணி நேரம் மேலே வாகனங்கள் அனுப்பப் படுகின்றன. அடுத்த ஒரு மணி நேரம் கீழே செல்லும் வாகனங்கள் பயணிக்க அனுமதிக்கப் படுகின்றனவாம். இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றன.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் அனைத்தையும் ஒழுங்கு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி ஐ. ஐ. டியிலிருந்து ஒரு நிபுணர்கள் குழு திருப்பதி வருகிறது. இந்தக் குழு எதிர்காலத்தில் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்னும் அறிவுறுத்தலை வழங்கும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சேர்மன் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று புதிதாக இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்த போதும் அந்தப் பாதையைச் சீர்செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன்.

திருமலை திருப்பதி நிலச்சரிவு
திருமலை திருப்பதி நிலச்சரிவு
TTD PHOTO
திருப்பதி பக்தர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கும் புனித பூமி. அதைப் பாதுகாக்க வேண்டியது தேவஸ்தானம் மற்றும் அரசின் கடமை. அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுத்து போக்குவரத்தைச் சீர் செய்வதோடு சகஜ நிலமை திரும்பிடவும் உதவ வேண்டும் என்பதுதான் பக்தர்களின் கோரிக்கையாக இருக்கிறது.