Published:Updated:

லதா மங்கேஷ்கர் குடும்பத்துக்கு `மங்கேஷ்கர்' எனப் பெயர் வரக் காரணமாக இருந்த கோயில் பற்றித் தெரியுமா?

ஸ்ரீமங்கேஷி சிவன் கோயில்

லதா மங்கேஷ்கரின் மூதாதையரோடு நெருங்கியத் தொடர்பு கொண்டது இந்தக் கோயில். உண்மையில் அவர்களின் குலதெய்வம் என்று கூட சொல்லலாம். கோவாவைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் லதாவின் மூதாதையர்கள்.

லதா மங்கேஷ்கர் குடும்பத்துக்கு `மங்கேஷ்கர்' எனப் பெயர் வரக் காரணமாக இருந்த கோயில் பற்றித் தெரியுமா?

லதா மங்கேஷ்கரின் மூதாதையரோடு நெருங்கியத் தொடர்பு கொண்டது இந்தக் கோயில். உண்மையில் அவர்களின் குலதெய்வம் என்று கூட சொல்லலாம். கோவாவைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் லதாவின் மூதாதையர்கள்.

Published:Updated:
ஸ்ரீமங்கேஷி சிவன் கோயில்
கோவாவுக்கு சுற்றுலா சென்றவர்கள் எல்லோரும் 'மங்கேஷி சிவன்' கோயிலைப் பார்த்திருக்கலாம். அங்கு சென்றதுமே நம்மிடம் கைடுகள் அந்த ஆலயத்தைப் பற்றிச் சொல்கிறார்களோ இல்லையோ, லதா மங்கேஷ்கர் பற்றிய தகவல்களைச் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் மங்கேஷி கோயில் என்று கூட சொல்வதில்லை. மங்கேஷ்கர் கோயில் என்றே சொல்வார்கள். இதனால் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும் லதா மங்கேஷ்கருக்கு ஏன் கோயில் என்று குழம்பிப் போவார்கள்.
மங்கேஷி கோயில்
மங்கேஷி கோயில்

லதா மங்கேஷ்கரின் மூதாதையரோடு நெருங்கியத் தொடர்பு கொண்டது இந்தக் கோயில். அவர்களின் குலதெய்வம் என்று கூட சொல்லலாம். கோவாவைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் லதாவின் மூதாதையர்கள். 1900-களுக்கு முன்பாக வடக்கு கர்நாடகா, கோவா மக்களில் பலரும் மராட்டியத்துக்கு புலம் பெயர்ந்தபோது இவர்களும் மராட்டியம் சென்றதாகத் தெரிகிறது. லதா மங்கேஷ்கரின் தந்தை தீனநாத் மங்கேஷ்கர் ஒரு இசைக் கலைஞர். இவருடைய தந்தை கணபதி பட் கோவாவின் மங்கேஷி கிராமத்தில் ஸ்ரீமங்கேஷி சிவன் கோயிலில் அர்ச்சகராக இருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

லதாவின் தந்தை தீனநாத் மங்கேஷ்கர், நர்மதா என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு லத்திகா என்ற மகள் பிறந்தார். ஆனால் லத்திகா சிறு வயதிலேயே இறந்து விட, அந்த துக்கத்தில் தாய் நர்மதாவும் மறைந்தார். இதனால் தீனநாத் மங்கேஷ்கர், நர்மதாவின் சகோதரி ஷெவந்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள், ஒரு ஆண் மகன் பிறந்தார். லதா, மீனா, ஆஷா, உஷா, ஹிருதய நாத் என்பவர்களே அவர்கள்.

லதா மங்கேஷ்கர்
லதா மங்கேஷ்கர்
RAJESH NIRGUDE

அதில் லதாவே இந்தியா புகழும் லதா மங்கேஷ்கர் என்ற இசைக்குயில். 80 ஆண்டு கால இசைப் பயணத்தில் சினிமா இசையோடு இவர் பக்தி இசையிலும் பெரும் பங்கு அளித்தவர். மராத்தியிலும் இந்தியிலும் இவர் பாடிய தெய்விகப் பாடல்கள் காலத்தைக் கடந்தவை. மீரா பஜன்களை மனம் உருகிப் பாடியதால் இவர் '20-ம் நூற்றாண்டின் மீரா!' என்றே போற்றப்பட்டார். உண்மையில் திரைப் பாடல்களை விடவும் இவர் காயத்ரி மந்திரம், கணபதி ஸ்துதி போன்ற பக்தி பாடல்களையே விரும்பினார். அவற்றை எப்போதும் முணுமுணுத்தும் வந்தார். அவருடைய காந்தர்வக் குரல் ஆன்மிகப் பாடல்களுக்கே மிக மிகப் பொருத்தமாகவும் இருந்தது. திருமணமே செய்து கொள்ளாத அவரது வாழ்க்கை ஆன்மிகத்தில் அதிகம் நாட்டம் கொள்ள வைத்தது எனலாம்.

காசியில் பல சமஸ்கிருத மாணவர்களுக்கு இவர் உதவிகள் புரிந்துள்ளார். அவர்களுடையப் படிப்புக்கு பெரும் உதவிகள் செய்துள்ளார். இவருடைய உதவியால் வடநாட்டு ஆலயங்கள் பலவும் புனரமைக்கப்பட்டன. சரி, இப்போது மங்கேஷ்கர் என இவர்கள் குடும்பத்துக்கே பெயர் தந்த ஈசனின் ஆலயத்தைப் பற்றிக் காண்போம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சக்தியிடம் சூதாட்டம் ஆடி சகலத்தையும் இழந்த சிவபெருமான் இங்கு வந்து தவத்தில் இருந்தார் என புராணங்கள் கூறுகின்றன. அப்போது இங்கு வந்த தேவி ஈசனைத் துதித்து அவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தார். ஒருநாள் விளையாட்டாக ஈசன், புலி உருவில் வந்து பார்வதி தேவியை பயமுறுத்தினார். அப்போது பயந்துபோன தேவி, 'த்ராஹிமாம் கிரிஷா!' (மலைகளின் தெய்வமே என்னைக் காப்பாற்று!) என்று அலறினார். உடனே ஈசன் தேவியை ஆறுதல்படுத்தி ஏற்றுக் கொண்டார். 'மாம் கிரிஷா' என்பதுவே மருவி 'மங்க்ரிஷா, மங்கேஷி என்றானதாகச் சொல்கிறார்கள். இதனால் இங்கு ஈசன் மங்கேஷி என்ற திருநாமத்தோடு அருள்கிறார்.

ஸ்ரீமங்கேஷி சிவன் கோயில்
ஸ்ரீமங்கேஷி சிவன் கோயில்

ஆரம்பத்தில் இந்தக் கோயில் கோவாவின் மட்காவில் உள்ள குஷஸ்தாலி கோர்டலிம் என்ற கிராமத்தில் இருந்தது என்றும், அது 1543-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்களால் பாழானது என்றும் சொல்கிறார்கள். பிறகு மராட்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும், 1890-ம் ஆண்டிலுமாக இரு முறை புனரமைக்கப்பட்டது. 1973-ம் ஆண்டில் மிக நவீனமாகவும் கோயிலின் கோபுரத்தின் மேல் தங்கக் கலசம் வைக்கப்பட்டும் இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. இன்றும் கோவாவில் அதிகம் பார்க்கப்படும் இந்து ஆலயம் எனப் போற்றப்படும் இந்த சிவாலயம் மிக அழகாகவும் நியதியோடும் பராமரிக்கப்படுகிறது. இங்குள்ள திருக்குளமும் தியான மண்டபமும் சிறப்பானவை. இங்கு கணபதி, பைரவர், பார்வதிக்கு என தனி சந்நிதிகளும் உள்ளன. இங்கு நடைபெறும் ராமநவமி, அட்சய திருதியை, அனந்த் விருத்தோத்ஸவா, தசரா, ஹோலி, தீபாவளி, பல்கி விழா போன்றவை சிறப்பானதாகும்.

மங்கேஷி கோயில், கோவா மாநிலத்தின் போண்டா வட்டத்தில் பிரியோல் என்ற நகரம் தாண்டி மங்கேஷி கிராமத்தில் உள்ளது. கோவாவின் தலைநகர் பனாஜியிலிருந்து 21 கி.மீ தொலைவிலும், மட்காவிலிருந்து 26 கி.மீ தொலைவிலும் உள்ளது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism