Published:Updated:

திருப்பதி திருமலை ஶ்ரீநிவாச திருக்கல்யாணம்!

திருப்பதி திருக்கல்யாணம்
பிரீமியம் ஸ்டோரி
திருப்பதி திருக்கல்யாணம்

ஆலயங்கள் விசேஷங்கள்

திருப்பதி திருமலை ஶ்ரீநிவாச திருக்கல்யாணம்!

ஆலயங்கள் விசேஷங்கள்

Published:Updated:
திருப்பதி திருக்கல்யாணம்
பிரீமியம் ஸ்டோரி
திருப்பதி திருக்கல்யாணம்

பக்தர் நிகழ்த்திய முதல் கல்யாண உத்ஸவம்!

தினமும் (விழாக்காலங்கள் தவிர) திருமலை திருப்பதியில் உள்ள சம்பங்கி பிராகாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஶ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடைபெறும். 16-ம் நூற்றாண்டில் இருந்தே இந்த திருமணம் நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.

ஶ்ரீநிவாச கல்யாணம்
ஶ்ரீநிவாச கல்யாணம்

தினமும் மதியம் 12 மணிக்கு இந்த திருமண வைபவம் தொடங்கும். மலையப்ப சுவாமிக்கும் தாயார்களுக்கும் இடையில் திரை போடப்பட்டு மந்திரங்கள் முழங்கும். பிறகு திரை அகற்றப்பட்டு மங்கல ஹோமங்கள் நடைபெறும். வேதவிற்பன்னர்கள் கூடி தாயார்களுக்கும் சுவாமிக்கும் திருமணம் செய்து வைப்பார்கள். இந்த வைபவத்தில் கலந்து கொண்டு தரிசித்தால், திருமண வரம் கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்ச்சியில் உபயதாரராக பதிவு செய்தவர்களுக்கு 2 லட்டுகள், 5 வடைகள், ஒரு பட்டு அங்கவஸ்திரம், ரவிக்கைத் துணி ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும்.

விஜயநகர ஆட்சிக் காலத்தில்தான் உற்சவ மூர்த்தியான `மலை குனிய நின்ற பெருமாளுக்கு' திருக்கல்யாண உற்சவம் ஆரம்பிக்கப் பட்டது என்கிறது வரலாறு (இந்த பெயரே மருவி மலைகுனிய நின்றான் என மருவியது; பிறகு மலையப்பனாக மாறியது என்பர்).

கி.பி.1546-ம் ஆண்டு திருமலையில் பணியாற்றிய தாலபாக்கம் திருமலை அய்யங்கார் என்பவரால் இந்தக் கல்யாண உற்சவம் முதன்முதலாக ஆரம்பிக்கப் பட்டது என்று இங்குள்ள கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. இவர், விழாவின் செலவுகளுக்காக ஐநூறு கட்டி வராகன் தொகையைத் தானமாக கொடுத்தாராம். அதாவது, முதன் முதலாகக் கோயிலுக்குப் பணம் கட்டி திருப்பதி பெருமாளுக்குத் திருக்கல்யாண வைபவம் செய்தவர் இவரே என்கிறது வரலாறு.

பெள்ளித் திருநாள் எனத் தெலுங்கிலும், திருக்கல்யாண விழா என தமிழிலும், வைவாகோத்சவம் என சம்ஸ்கிருதத்திலும் சொல்லப்படும் இந்த வைபவம், அப்போது பங்குனி மாதம் 5 நாள்கள் திருமாமணி மண்டபத்தில் நடந்ததாம்.

மட்டுமன்றி, இந்த விழாவின் பிரசாதங்களாக வடை, மனோகரம், இனிப்பு அவல், பொறி இருந்த தாகவும், கல்யாண விழாவில் ‘பஞ்ச வண்ணப் பிடி’ எனும் 5 வர்ணங்களில் உருவான அன்னமும் தயாரிக் கப்பட்டதாகவும் கல்வெட்டு கூறுகிறது.

வேண்டுதல் பொம்மைகள் தென்னம்பாக்கம் கோயில்
வேண்டுதல் பொம்மைகள் தென்னம்பாக்கம் கோயில்

வேண்டுதல் சிலைகள்!

புதுச்சேரியிலிருந்து சுமார் 16 கி.மீ தொலைவில், தமிழக எல்லையில் இருக்கிறது தென்னம்பாக்கம். இங்கே இயற்கை எழிலோடு திகழ்கிறது, அழகு முத்து ஐயனார் கோயில். இங்கு ஆயிரக்கணக்கான மனித உருவச் சிலைகளைக் காணலாம்.

சுமார் 360 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமத் துக்கு வந்த அழகர் சித்தர், இந்தப் பகுதி மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு நோய்களைக் குணமாக்கியிருக்கிறார். பின்னர், இங்கிருந்த கிணற்றிலேயே சமாதி அடைந்து விட்டார். அழகு முத்து ஐயனார் கோயிலின் பின்புறம், அந்தக் கிணற்றின் மேலேயே சித்தருக்கு ஓர் எளிய கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு வந்து குழந்தைப் பாக்கியம், திருமணம், வேலை வாய்ப்பு என எந்தக் காரியத்தை நினைத்து மனித உருவில் சிலை செய்து வைத்தாலும் வேண்டுதல் விரைவில் நிறைவேறுமாம்!எல்லா காலங்களிலும் நிலைத்திருக்கும் விநாயகர்!

விநாயகர் ஈசனுக்கும் சக்திக்கும் அவதரித்த மூத்தப் பிள்ளை என்று அனைவரும் அறிந்திருக்கலாம். ஆனால் எல்லா காலமும் சதா இயங்கிக் கொண்டிருக்கும் ஆதிமூலமும் அவர்தான் என்கின்றன ஞான நூல்கள். இவர் 4 யுகங்களிலும் தாமே விரும்பி அவதரித்தார் என்றும் கூறப்படுகிறது. கிருத யுகத்தில் காஸ்யபருக்கும் அதிதிக்கும் பிள்ளையாக அவதரித்து மகாகடர் என்ற திருநாமம் கொண்டு தர்மத்தை நிலைநாட்டினார். திரேதாயுகத்தில் மயூரேசர் என்ற திருநாமம் கொண்டு அம்பிகையின் அருளால் அவதரித்து அதர்மத்தை அழித்தார். துவாபரயுகத்தில் பராசரர், அவர் மனைவி வத்ஸலாவால் கஜானனன் என்ற திருநாமத்துடன் தோன்றி தர்மத்தை வளர்த்தார். கலியுகத்தில் ஈசனுக்கும் பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து, நம் இன்னல்களைப் போக்கி வருகிறார் விநாயகர் என்று கணேச புராணம் கூறுகின்றது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வேண்டுதல் சிலைகள்!

புதுச்சேரியிலிருந்து சுமார் 16 கி.மீ தொலைவில், தமிழக எல்லையில் இருக்கிறது தென்னம்பாக்கம். இங்கே இயற்கை எழிலோடு திகழ்கிறது, அழகு முத்து ஐயனார் கோயில். இங்கு ஆயிரக்கணக்கான மனித உருவச் சிலைகளைக் காணலாம்.

சுமார் 360 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமத் துக்கு வந்த அழகர் சித்தர், இந்தப் பகுதி மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு நோய்களைக் குணமாக்கியிருக்கிறார். பின்னர், இங்கிருந்த கிணற்றிலேயே சமாதி அடைந்து விட்டார். அழகு முத்து ஐயனார் கோயிலின் பின்புறம், அந்தக் கிணற்றின் மேலேயே சித்தருக்கு ஓர் எளிய கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு வந்து குழந்தைப் பாக்கியம், திருமணம், வேலை வாய்ப்பு என எந்தக் காரியத்தை நினைத்து மனித உருவில் சிலை செய்து வைத்தாலும் வேண்டுதல் விரைவில் நிறைவேறுமாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism