Published:Updated:

மும்மூர்த்திகளாய் அருளும் முருகன்... அருவியில் தீர்த்தவாரி காணும் இலஞ்சிக்குமாரர்!

முருகப்பெருமானை வழிபடுவது மும்மூர்த்திகளையும் வழிபடுவதற்கு சமம். இதை விளக்கும் விதமாக முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கும் தலம் தென்காசி இலஞ்சிக்குமாரர் ஆலயம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ளது இலஞ்சிக்குமாரர் ஆலயம். தவவேள்விகளில் சிறந்த கபிலர், காசிபர், துா்வாசர் ஆகிய மூவரும் திருக்குற்றால மலையில் கூடி சிருஷ்டி தத்துவத்தின் விளக்கங்கள் குறித்து ஆலோசனை நடத்தினா். அப்போது இப்பூவுலகம் உள் பொருளா, இல் பொருளா என்னும் விவாதம் எழுந்தது. கபிலா், `உலகம் இல் பொருளே' என்றார். காசிபரும் துா்வாசரும் `உலகம் உள் பொருளே' என்று வாதிட்டனா்.

`முத்தொழில்களை மேற்கொள்ளும் இறைவனன்றி இல்பொருள் தோன்றாது. எனவே, உலகம் உள்பொருளே. இப்பொருள் பரப்பிரம்மத்தில் அடங்கும்' என காசிபரும் துா்வாசரும் எடுத்துரைக்க, கபிலரும் ஏற்றுக் கொண்டாா். எனினும் பிரச்னை அத்துடன் முடிவுக்கு வரவில்லை.

இலஞ்சிக்குமாரர்
இலஞ்சிக்குமாரர்

அடுத்து, “உள்பொருளான உலகின் உண்மைப் பொருள் யாா்?” என்ற வாதம் தொடங்கியது. இந்தக் கேள்விக்கு நிறைவான ஒரு பதில் கிடைக்கவில்லை. ஆகவே, துர்வாச முனிவர் முருகனை வேண்டித் துதித்தார். அக்கணமே, மலைக்கு நாயகனான முருகப் பெருமான் அங்கே குமாரக் கடவுளாகத் தோன்றி `தாமே முத்தொழில் புரியும் மூா்த்தி. தாமே உண்மையான பரம்பொருள்' என்பதை உணர்த்தி முனிவர்களின் ஐயத்தைப் போக்கி அருளினார். இப்படி முருகப்பெருமான் முனிவர்களுக்குக் காட்சி அளித்த தலமே இப்போது இலஞ்சிகுமாரர் திருக்கோயிலாக விளங்குகிறது.

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்; 1,008 வடைகளால் மாலை! - புரட்டாசி சிறப்பு பூஜை

தாமரைப் பூக்கள் நிறைந்திருக்கும் நீர்த் தடாகத்துக்கு `இலஞ்சி' என்று திருப்பெயர். அருணகிரிநாதர் இத்தல இறைவனை இலஞ்சி விசாகப் பெருமாளே எனப் போற்றுகிறார் அருணகிரியார். இந்த இறைவனுக்கு வரதராஜர் என்ற திருப்பெயரும் உண்டு. வரதராஜர் எனும் திருப்பெயர் திருமாலுக்கு மட்டுமன்றி முருகப்பெருமானுக்கும் உண்டு.

இத்தலத்தில் அருளும் சிவபெருமானும் சாந்நித்தியம் மிகுந்தவர். இங்குள்ள லிங்கத் திருமேனி அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். பொதிகை மலைச்சாரலில், தென்காசிக்கு அருகில் சித்ரா நதி தீரத்தில் வெண்மணலால் ஆன ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வெண்மணலுக்கு வடமொழியில் `இருவாலுகம்' என்று பெயா். எனவே வெண்மணலால் அகத்தியா் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்திருமேனிக்கு `இருவாலுக ஈசன்' என்ற பெயர். அம்பிகைக்கு இருவாலுக ஈசர்க்கினியாள் என்று திருப்பெயர்.

இருவாலுக ஈசன்
இருவாலுக ஈசன்
இத்தலத்தின் சிறப்புகள் அநேகம். அவற்றுள் கந்த சஷ்டியில் ஐந்து திருக்கோலங்கள் குறித்தும் இங்கு நடைபெறும் மாதுளை முத்துக்களால் செய்யப்படும் வேல் பரிகாரம் குறித்தும் அருவியில் தீர்த்தவாரிகாணும் அற்புத வழக்கம் குறித்தும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு