Election bannerElection banner
Published:Updated:

கல்யாண தோஷங்கள் நீக்கும் முருகன் திருக்கல்யாண வைபவம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

தோரணமலை முருகன்
தோரணமலை முருகன்

அகத்தியர் போற்றிய திருத்தலம் இது. அகத்தியர் தங்கியிருந்து மருத்துவ ஆய்வும் சேவையும் செய்த இடம் இது. மேலும் அவரின் சீடரான தேரையர் 700 ஆண்டுகள் வாழ்ந்து, மலைமீதுள்ள முருகப் பெருமானை வழிபட்டு அருள்பெற்றுள்ளார். அவர் இத்தலத்திலேயே ஜீவசமாதி அடைந்துள்ளார் என்கிறார்கள்.

நம் தாய்-தந்தைக்கு சஷ்டியப்தபூர்த்தி நடத்திப் பார்ப்பது போல, உலகத்துக்கே தாயாகவும் தந்தையாகவும் விளங்கக்கூடிய தெய்வங் களுக்குத் திருமணம் நடத்தி வைத்துப் பார்ப்பது நெஞ்சுக்கு இனிமையான வைபவமாகப் போற்றப்படுகிறது.

இல்லறத்தில் ஏற்படும் பல்வேறு குறைகளைக் களைந்து கொள்ளவும், இல்லறத்தின் பெருமையை எல்லோரும் புரிந்து கொள்ளவுமே இதுபோன்ற தெய்வத் திருமணங்கள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரம் முதலான விழாவைபவங்களின் போது எண்ணற்றக் கோயில் களில் தெய்வத் திருமணங்கள் நடந்தேறும்.

திருப்பதி முதலான சிற்சில தலங்களின் வேண்டுதலின் பொருட்டும் கல்யாண உற்சவம் செய்து வைப்பார்கள். இந்த வைபவத்தில் கலந்துகொள்வதாலும், சங்கல்பித்து வேண்டிக்கொள்வதாலும் தோஷங்கள் நீங்கி கல்யாணம் கைகூடும் என்கின்றன ஞானநூல்கள்.

தோரணமலை
தோரணமலை

அதுமட்டுமா? தெய்வத் திருமணங்களை நடத்தி வைப்பதால், செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம் முதலான கல்யாணத்துக்குத் தடை ஏற்படுத்தும் தோஷங்களின் பாதிப்புகள் விலகும்; மனத்துக்கு இனிய வாழ்க்கைத் துணை அமையும்; இல்லறத்தில் தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; மனப் பிரச்னையால் பிரிந்திருக்கும் தம்பதியரும் பிணக்குகள் நீங்கி ஒன்று சேர்வார்கள், இல்லத்தில் மங்கல காரியங்கள் சுபிட்சமாக நடந்தேறும் என்பது நம்பிக்கை.

அந்த வகையில், சக்தி விகடன் சார்பில் தென் தமிழநாட்டில் சித்தர் பெருமக்கள் போற்றிக் கொண்டாடும் தோரணமலை முருகன் திருக் கோயிலில் முருகன் திருக்கல்யாண வைபவத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

வாசகர்களின் குடும்ப நன்மைக்காகவும், அவர்கள் இல்லத்தில் மகன் அல்லது மகளுக்குத் திருமணம் சார்ந்த சுபகாரி யங்கள் எவ்வித தடங்களுமின்றி மிக அற்புதமாக நடந்தேற வேண்டியும், ஜாதகத்தில் கிரகக் குறைபாடுகளால் திருமணம் தள்ளிப்போகும் அன்பர்களுக்கு அந்தக் குறை நீங்கி சிறப்பான மணவாழ்க்கை அமைய வேண்டியும், எல்லோரின் இல்லங்களிலும் சகல சுபிட்சங்களும் பொங்கிப்பெருக வேண்டியும் உரிய பிரார்த்தனைச் சங்கல்பத்துடன் தோரணமலை கோயிலில் முருகன் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.

தோரணமலை
தோரணமலை

சித்தர்கள் போற்றும் தோரணமலை!

குற்றாலத்துக்கு அருகில் இருக்கும் தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது தோரணமலை. இதன் உச்சியில் மட்டுமல்ல, அடிவாரத்திலும் முருகன் கோயில்கொண்டிருக்கிறான்.

மேற்குமலைத் தொடரிலிருந்து சற்று விலகி அமைந்துள்ள இந்த மலை யானையைப் போன்று காட்சியளிப்பதால், `வாரண மலை’ என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் தோரணமலை என்றானதாம்.

அகத்தியர் போற்றிய திருத்தலம் இது. அகத்தியர் தங்கியிருந்து மருத்துவ ஆய்வும் சேவையும் செய்த இடம் இது. மேலும் அவரின் சீடரான தேரையர் 700 ஆண்டுகள் வாழ்ந்து, மலைமீதுள்ள முருகப் பெருமானை வழிபட்டு அருள்பெற்றுள்ளார். அவர் இத்தலத்திலேயே ஜீவசமாதி அடைந்துள்ளார் என்கிறார்கள்.

ராமபிரானும் இங்கு வந்து வழிபட்டுள்ளார் என்று தலவரலாறு கூறுகிறது. இந்த மலையில் உள்ள 64 சுனைகளும் ஆயுளை நீட்டிக்கச் செய்யும் அற்புத ஜீவ ஊற்றுகள்.

தோரணமலையில் திருக்கல்யாண வைபவம்!

கல்யாணம் என்றால் மங்கலம் என்று பொருள். திருமணம் முதலான சகல மங்கல வரங்களையும் அருளும் முருகப்பெருமான் விரும்பி குடியிருக்கும் தலம் இந்தத் தோரணமலை.

சித்திரை முதல் நாள், அகத்திய மாமுனிவருக்கு ரிஷப வாகனத்தில் ஈசனும், அம்பிகையும் திருமணக் காட்சி தந்தருளிய புண்ணிய தினம் எனப்போற்றப்படுகிறது. இவ்வாறு அகத்தியர் கல்யாணக் கோலம் காணும் பேறுபெற்ற தலங்களில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. ஆகவே, இன்றும் திருமண வரம் அருளும் பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது இந்த மலை. அதுமட்டுமா?

வள்ளிமலையில் வள்ளியம்மையை திருமணம் புரிந்து கொண்ட முருகப்பெருமான், அங்கு பல காலம் வாழ்ந்திருந்தார். பிறகு அங்கிருந்து கிளம்பி ஞானமலை சென்று தங்கினார். பிறகு திருத்தணியில் வாழ்ந்தப் பின் அங்கிருந்துக் கிளம்பி பொதியமலைக்குச் செல்ல அங்கு வள்ளியையும், முருகப்பெருமானையும் அவரது முதல் மனைவி தெய்வயானை அன்புடன் வரவேற்றாள் என்கிறது புராணம்.

தோரணமலை
தோரணமலை

எனவே தலம், மூர்த்தி, தீர்த்தம், மலை வளம், சித்தர்களின் கூடல், மூலிகைக் காடுகள் என சகல சிறப்புகளும் வாய்ந்த தோரணமலை கல்யாண வரம் அருளும் க்ஷேத்திரமாகவும் திகழ்கிறது.

வருடம்தோறும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் தோரணமலை முருகன் கோயிலில் பொங்கல் வழிபாடு, கிராமியக் கலைநிகழ்ச்சிகள் என்று விழாகளைகட்டும். வேளாண்மை செழிப்பதற் கான சிறப்பு பூஜைகளும் விவசாயிகளுக்கான பாராட்டு வைபவங்களும் விழாவின் சிறப்பம்சங்களாகும். இந்த வருடம் வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் (14.4.21) சக்தி விகடன் வாசகர்களுக்காக, முருகப்பெருமான் திருக் கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.

மனத்துக்கு இனிய வாழ்க்கையை அருளும் திருக்கல்யாணம்

வள்ளி - தெய்வயானை சமேத முருகப்பெருமானின் திருக் கல்யாணத்தில் பெயர் நட்சத்திரத்துடன் சங்கல்பப் பிரார்த்தனை செய்துகொள்வது பெரும் பாக்கியம். இந்த வைபவத்தின் பலனாக திருமணத்துக்கு தடையாக உள்ள ராகு தோஷம், களத்திர தோஷம், கால சர்ப்ப தோஷம் யாவும் நீங்கும்.

அதுமட்டுமா கந்தனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் வீட்டுப் பெண்களின் மாங்கல்ய பலமும் கூடிவிடும் என்பார்கள் பெரியோர்கள். எனவே, அபூர்வமான இந்த மங்கலவைபவத்தில் நீங்களும் சங்கல்பித்துக்கொண்டு, முருகப்பெருமானின் திருவருளால் கல்யாண வரமும், மங்கல வாழ்வும், மாங்கல்யபலமும் பெற்றுச் சிறக்கலாம்.

திருக்கல்யாணம்
திருக்கல்யாணம்

வாசகர்கள் கவனத்துக்கு...

தோரணமலை முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவத்துக்கு வாசகர்களே உபயதாரர்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணமாக ரூ.500 மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், அவர்களின் பெயர் - நட்சத்திர சங்கல்பத்துடன் முருகன் திருக்கல்யாண வைபவ பிரார்த்தனையில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விபூதி, குங்குமம், மங்கல ரட்சை, முருகப்பெருமான் படம் ஆகியவை (30.4.2021 தேதிக்குள்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி இந்தத் திருக்கல்யாண வைபவம் நிகழவுள்ளது. ஆகவே, வாசகர்கள் நேரில் தரிசிக்க இயலாத நிலையில், இந்த வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். (சங்கல்ப முன்பதிவு விவரங்களுக்கு: 97909 90404)

நீங்களும் சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு