Published:Updated:

பட்டம் ஏற்கும் சொக்கநாதர்!

சொக்கநாதர்
பிரீமியம் ஸ்டோரி
சொக்கநாதர்

ஆவணி மூல விழா

பட்டம் ஏற்கும் சொக்கநாதர்!

ஆவணி மூல விழா

Published:Updated:
சொக்கநாதர்
பிரீமியம் ஸ்டோரி
சொக்கநாதர்

பெண் சுமக்கும் ஈசனார் மண் சுமந்த பெருமைக்கு உரிய ஒரே நகரம் மாமதுரை. மதுரையில் மீனாளுக்கும் சொக்கநாதருக்கும் எந்நாளுமே விழாக்கோலம் தான் என்பார்கள் பக்தர்கள். இதனால் ‘ஏறிய பல்லக்கை விட்டு இறங்காத பெருமாட்டி’ என்றுகூட மீனாளைப் பெருமையாக மதுரைவாசிகள் கூறுவார்கள்.

மாதம்தோறும் விழாக்கள் வந்தாலும் ஈசனார் புரிந்த அத்தனை திருவிளையாடல்களையும் நினைவுறுத்தும் வண்ணம் நடைபெறும் ஆவணி மூலத்திருவிழா விசேஷமானது. எளியோருக்காக இறைவனே இறங்கி வந்து நடத்திய நெகிழ்ச்சியான லீலைகள் அவை.

ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு நட்சத்திரம் விசேஷம் என்றால், ஆவணியில் மூல நட்சத்திரம் விசேஷம் என்பர் பெரியோர். இது அறிவியலோடு தொடர்பு கொண்டது என்றும் கூறலாம். ஆவணி மூல நாளில் என்ன சீதோஷ்ண நிலை உள்ளதோ, அதுவே அந்த ஆண்டு முழுக்க இருக்கும் என்பது ஆண்டாண்டுகளாக இருந்து வரும் மக்கள் நம்பிக்கை.

இதனால்தான் அந்த ஆண்டின் போக்கையே நிர்ணயிக்கும் ஆவணி மூல நாளில் ஈசனுக்கு விழா எடுத்து நடத்தும் வழக்கம் வந்தது. இதில் மதுரையம்பதியில் ஈசன் நடத்திய லீலைகளே விழாவானது எனலாம். சித்திரைத் திருவிழாவில் மீனாளுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் என்றால், ஆவணி மூல விழாவில் சொக்கநாதருக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்.

இந்த ஆண்டு கடந்த 5.8.2021 அன்று கொடியேற்றத்தோடு தொடங்கியது ஆவணி மூலத்திருவிழா. வரும் 20-ம் தேதி வரை இவ்விழா நடைபெறும். விழாவின் முக்கிய அம்சமாக ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று கருங்குருவிக்கு உபதேசம் அளித்தல்; 12-ம் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல்; 13-ம் தேதி நவரத்னங்கள் விற்ற லீலை; 14-ம் தேதி தருமிக்குப் பொற்கிழி அளித்தல், 15-ம் தேதி உலவாக் கோட்டை அருளியது; 16-ம் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை ஆகிய வைபவங்கள் நடைபெறும்.

ஆகஸ்ட் 17-ம் தேதி காலையில் வளையல் விற்ற லீலையும், இரவு சொக்கநாதருக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. தொடர்ந்து 18-ம் தேதி நரியைப் பரியாக்கிய லீலையும், 19-ம் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலையும், 20-ம் தேதி விறகு விற்ற லீலையும் நடைபெற உள்ளன.

இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடு காரணமாக சகல வைபவங்களும் ஆலய வளாகத்துக்குளேயே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரில் தரிசிக்க இயலாவிடினும், சொக்கநாதரின் அருளாடல்களை அனுதினமும் படித்து, அவனருளால் அவன் தாள் வணங்கி வரம் பெறுவோம்.

-எம்.சரவணன், மேலூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism