Published:Updated:

மதுரை கோபுரக் கொலு!

மதுரை கோபுரக் கொலு!
பிரீமியம் ஸ்டோரி
News
மதுரை கோபுரக் கொலு!

நவராத்திரி தரிசனம்... அம்பிகை வருவாள்!

நவராத்திரி நாயகியாம் அம்பிகைக்கு ஒன்பது நாள்களும் வீட்டில் வைப்பது படிக் கொலு என்றால், திருக்கோயில்களில் நிரந்தரக் கொலுவாகக் காட்சி அளிப்பவை, சிற்பங்கள் நிறைந்த அழகுக் கோபுரங்களாகும். புராணங்களை, கோயிலின் திருக்கதைகளை - சிறப்புகளை எளிதில் பக்தர்களுக்குத் தெரிவிக்க, அவற்றை அவர்களின் மனத்தில் ஆழமாய்ப் பதியவைக்க, முன்னோர்கள் மேற்கொண்ட முயற்சியே கோபுரங்களின் சிற்பக் காட்சிகள் எனலாம். அவ்வகையில் அழகுக் கோபுரங்கள் என்றதும் நம் நினைவுக்கு வருவது, ஆலவாய் தலமாம் மதுரையம்பதிதான். மதுரையின் கோபுரங்கள் - சிற்ப அற்புதங்களால் நிறைந்தவை. அவற்றில்தான் எத்தனை விதவிதமான சிற்பங்கள்.

குறிப்பாக நான்மாடக்கூடலின் ஆடி வீதிகளில், நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய, நான்கு கோபுரங்களிலும் அமைந்துள்ள சுதைச் சிற்பங்கள் அழகு நிறைந்தவை. அவற்றில் சில காட்சிகள் இங்கே உங்களுக்காக!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
யாளி முகத் தோற்றத்துடன் திகழும் கோபுரத்தின் 
உச்சி முனைப் பகுதியில்... 
நம் கருத்தைக் கவரும் அழகுச் சிலைகள்!
யாளி முகத் தோற்றத்துடன் திகழும் கோபுரத்தின் உச்சி முனைப் பகுதியில்... நம் கருத்தைக் கவரும் அழகுச் சிலைகள்!
மதுரை கோபுரக் கொலு!
மதுரை கோபுரக் கொலு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எண்ணற்ற கரங்களும் சிரங்களுமாய் மகா சதாசிவ மூர்த்தம்... அற்புத தரிசனம்!

எண்ணற்ற கரங்களும் சிரங்களுமாய் மகா சதாசிவ மூர்த்தம்... 
அற்புத தரிசனம்!
எண்ணற்ற கரங்களும் சிரங்களுமாய் மகா சதாசிவ மூர்த்தம்... அற்புத தரிசனம்!
மதுரை கோபுரக் கொலு!
மதுரை கோபுரக் கொலு!
மச்சமும் கூர்மமுமாக மகாவிஷ்ணுவின் 
அழகு மிளிரும் அவதாரக் கோலம்!
மச்சமும் கூர்மமுமாக மகாவிஷ்ணுவின் அழகு மிளிரும் அவதாரக் கோலம்!
அகங்காரம்  அழிக்க அசுர வதம்... தட்ச சம்ஹாரத்தில் வீரபத்திரர்!
அகங்காரம் அழிக்க அசுர வதம்... தட்ச சம்ஹாரத்தில் வீரபத்திரர்!
மாலவன் தன் தங்கையை அங்கயற்கண்ணியை சுந்தரருக்குத் தாரை வார்க்கும் கோலம்!
மாலவன் தன் தங்கையை அங்கயற்கண்ணியை சுந்தரருக்குத் தாரை வார்க்கும் கோலம்!
சத்ரு
சம்ஹார மூர்த்தியராக
மறக் கருணை பொழியும்
வீரபத்திரரும் நரசிம்மரும்!
சத்ரு சம்ஹார மூர்த்தியராக மறக் கருணை பொழியும் வீரபத்திரரும் நரசிம்மரும்!
ஞானப் பழமாம் முருகனை பழநியம்பதி பெற்ற திருக்கதை சிற்பக் காட்சியாய்...
ஞானப் பழமாம் முருகனை பழநியம்பதி பெற்ற திருக்கதை சிற்பக் காட்சியாய்...
கோபுர மாடத்தில் 
அழகுச் சொக்கரும், 
அன்னை மீனாளும்... - அம்மையும் அப்பனும் 
ரிஷபாரூட திருக்கோலத்தில் 
திருவுலா புறப்பட்டனர் போலும்!
கோபுர மாடத்தில் அழகுச் சொக்கரும், அன்னை மீனாளும்... - அம்மையும் அப்பனும் ரிஷபாரூட திருக்கோலத்தில் திருவுலா புறப்பட்டனர் போலும்!
ஏகபாத மூர்த்தியும், காளியை நாணுறச் செய்த ஆடல் மூர்த்தியும்...
ஏகபாத மூர்த்தியும், காளியை நாணுறச் செய்த ஆடல் மூர்த்தியும்...