Published:Updated:

ஸ்ரீஐயப்பன் ஆராதனை: மகரஜோதியில் மாபெரும் கொண்டாட்டம்; சபரிமலை பிரசாதங்களோடு சங்கல்பிக்கலாம்!

ஸ்ரீஐயப்பன் ஆராதனை

ஸ்ரீஐயப்பன் ஆராதனை: சென்னை பம்மல் பகுதியில் ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் (14-1-2023) மகரஜோதி நாளில், சனிக்கிழமை அன்று காலை 5 மணி முதல் இரவு வரையில் ஸ்ரீஐயப்ப ஆராதனைகள் நடைபெற உள்ளன.

ஸ்ரீஐயப்பன் ஆராதனை: மகரஜோதியில் மாபெரும் கொண்டாட்டம்; சபரிமலை பிரசாதங்களோடு சங்கல்பிக்கலாம்!

ஸ்ரீஐயப்பன் ஆராதனை: சென்னை பம்மல் பகுதியில் ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் (14-1-2023) மகரஜோதி நாளில், சனிக்கிழமை அன்று காலை 5 மணி முதல் இரவு வரையில் ஸ்ரீஐயப்ப ஆராதனைகள் நடைபெற உள்ளன.

Published:Updated:
ஸ்ரீஐயப்பன் ஆராதனை
சென்னை பம்மல் பகுதியில் ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் (14-1-2023) மகரஜோதி நாளில், சனிக்கிழமை அன்று காலை 5 மணி முதல் இரவு வரையில் ஸ்ரீஐயப்ப ஆராதனைகள் நடைபெற உள்ளன.

இந்த ஆண்டு சக்தி விகடன் வாசகர்களின் நன்மைக்காக சபரிமலையில் இருந்து ஸ்ரீஐயப்பனுக்கு அபிஷேகம் விசேஷ நெய்யும் விபூதியும், பம்மல் ஆலயத்தில் அளிக்கப்படும் ரட்சையும் அளிக்கப்பட உள்ளது. இந்தக் கொண்டாட்டத்தை சக்தி விகடனும் திருக்கோயில் நிர்வாகமும் ELJAY ஹியரிங் கேர் நிறுவனமும் இணைந்து நடத்த உள்ளது.

ஸ்ரீஐயப்பன்
ஸ்ரீஐயப்பன்

ஒரு மகர சங்கராந்தி நாளில் தான் ஸ்ரீஐயப்பனின் திருவுருவம் முதன்முதலாக பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கிறது புராணம். யோகவடிவில் அமர்ந்த ஸ்ரீஐயப்பனை உலகோர் வழிபட காரணமானவர் பரசுராமர். சபரிமலை காசியை போன்ற புனித தலம். தர்ம சாஸ்தாவால் அனுப்பப்பட்ட பரசுராமர் கடலுக்கு அடியே இருந்த கேரள நிலத்தை சபரிமலையின் உயரத்திற்கு எழுப்பி, ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் திருவுருவத்தை சிலையாக செதுக்கி மகரசங்கராந்தி நாளன்று பிரதிஷ்டை செய்தார் என்று புராணங்கள் கூறும். மகிமைமிக்க சபரிமலை ஆலயத்தைப் போலவே பல திருப்பங்களுடன் எழுந்ததே சென்னை பம்மல் ஸ்ரீஐயப்பன் கோயிலும் என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.

சென்னை பம்மல் பகுதியில் ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் (14-1-2023) மகரஜோதி நாளில், சனிக்கிழமை அன்று காலை 5 மணி முதல் இரவு வரையில் ஸ்ரீஐயப்ப ஆராதனைகள் நடைபெற உள்ளன. தொண்டைமண்டல சபரிமலை என்றே போற்றப்படும் இந்த ஸ்ரீஐயப்பன் ஆலயம் 2008-ம் ஆண்டு கேரள தாந்த்ரீக முறைப்படியே கட்டப்பட்டு அதே முறைப்படியே வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீஐயப்பன்
ஸ்ரீஐயப்பன்

காலை 5.30 மகாகணபதி ஹோமம், 6 மணிக்கு ஐயப்பனுக்கு அஷ்ட அபிஷேகம் நடைபெறும். விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர். இது இங்கே வெகு விசேஷமாக செய்யப்படுகிறது. பிறகு

3 மணி அளவில் இங்குள்ள பவானி அம்மன் கோயிலில் இருந்து திருவாபரணப் பெட்டி கொண்டுவரப்பட்டு மாலை 6 மணி அளவில் சபரிமலையில் செய்யப்படுவதைப் போன்றே அலங்காரங்கள் செய்யப்படும். பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு வரும் திருவாபரணப் பெட்டியைப் போன்றே இங்கும் செய்யப்பட்டு, அதை விரதமிருக்கும் பக்தர்கள் சுமந்து கொண்டு வருவார்கள்.

ஸ்ரீஐயப்பன்
ஸ்ரீஐயப்பன்

மாலை 6 மணிக்கு மேல் ஐயப்பன் கோயிலுக்கு பின்புறம் இருக்கும் சிவன் மலையில் மகர ஜோதி ஏற்றப்படும். சபரிமலையில் பொன்னம்பல மேட்டில் ஸ்ரீசக்ரத்தின் மீது ஜோதி தோன்றுவது போல, இங்கும் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதில் கோலங்கள் போட்டு அலங்கரித்து அங்கே மகர ஜோதியை ஏற்றப்படும். சபரிமலையில் ஜோதி தோன்றும் அதே வேளையில் இங்கும் ஐயப்பன் ஜோதியாக எழுவான். அந்த வேளையில் இங்குள்ள திடலில் பிரமாண்ட வாணவேடிக்கைகள் நடைபெறும். பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தொண்டை மண்டலத்து சபரிமலை என்று போற்றப்படும் சென்னை பம்மல் ஸ்ரீஐயப்பன் கோயிலுக்கு வந்து வளமும் நலமும் பெற்றவர்கள் அநேகம். திருமண வரம், பிள்ளைப்பேறு, வேலை வாய்ப்பு, வெளிநாட்டு யோகம், நிலபுலன்கள் என இங்கு வந்து வேண்டினால் சகலமும் கிட்டும் என்கிறார்கள். அதேபோல நோய்நொடிகள், தோஷங்கள், வம்பு-வழக்குகள், அச்சம் போன்ற தீமைகள் யாவும் இங்கு வந்து விலகின என்று சாட்சி சொல்வோரும் பலருண்டு.

பம்மல் ஸ்ரீஐயப்பன் ஆலயம்
பம்மல் ஸ்ரீஐயப்பன் ஆலயம்

இங்குள்ள நாகர் சந்நிதி விசேஷமானது. இங்கு ஒவ்வொரு மாத ஆயில்ய நட்சத்திர நாளிலும் நூறும் பாலும் என்ற விசேஷ பூஜையை நடத்துகிறோம். இங்கு வந்து வழிபட்டால் நாக தோஷம் நீங்கும். ராகு-கேது தோஷங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை. திருமால் ஸ்ரீகிருஷ்ண அவதாரம் எடுத்த பிறகு மனித அவதாரம் எடுத்தது ஸ்ரீஐயப்பன் அவதாரம்தான் என்று புராணங்கள் கூறும். கலியுகத்தின் கடவுள் வடிவான ஐயப்பனை சரண் அடைந்தால் எந்த ஜீவனும் கவலை கொள்வதில்லை என்பதே பலரின் நம்பிக்கை. எனவே சகலரும் இந்த பூஜையில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து பலன் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்ரீஐயப்ப ஆராதனை
ஸ்ரீஐயப்ப ஆராதனை

இந்த ஆண்டு சக்தி விகடன் வாசகர்களின் நன்மைக்காக சபரிமலையில் இருந்து ஸ்ரீஐயப்பனுக்கு அபிஷேகம் விசேஷ நெய்யும் விபூதியும், பம்மல் ஆலயத்தில் அளிக்கப்படும் ரட்சையும் அளிக்கப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்தை சக்தி விகடனும் திருக்கோயில் நிர்வாகமும் ELJAY ஹியரிங் கேர் நிறுவனமும் இணைந்து நடத்த உள்ளது.

வரும் மகர ஜோதி நாளில் இந்த விசேஷ பூஜையில் சங்கல்பம் செய்து கொள்ள சகலரையும் அழைக்கிறோம் வாருங்கள். ஐயன் ஐயப்பனின் அருளால் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று வாழ பிரார்த்திக்கிறோம்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஆராதனையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஆராதனைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆராதனை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஆராதனை வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு சபரிமலையில் ஸ்ரீஐயப்பனுக்கு அபிஷேகம் செய்த நெய், விபூதி மற்றும் திவ்யரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஆராதனை வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஆராதனை வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஆராதனை வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.