Published:Updated:

யாகபுரியில் பிரமாண்ட சுவாதி யாகம்! நீங்களும் சங்கல்பிப்பது எப்படி?

சுவாதி யாகம்
சுவாதி யாகம்

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) மற்றும் மஞ்சள் ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

யாகபுரி. யக்ஞபுரம் என்றெல்லாம் போற்றப்படும் திருத்தலம் இஞ்சிமேடு. இங்கு மூலவராக ஸ்ரீவரதராஜ பெருமாள் தாயார் பெருந்தேவியோடு எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார். அதுபோலவே செஞ்சு லட்சுமி சமேத கல்யாண நரசிம்மராக, திருமகளை மடியில் எழுந்தருளச் செய்து சேவை சாதிக்கிறார் நரசிம்மர்.

பரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீராமர், ஶ்ரீசுதர்சனர் ஆகிய மூர்த்தங்களும் இங்கு விசேஷம். ஶ்ரீராமபிரான் தன் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் வில்லின் மேல்புறத்தில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி எழுந்தருளியிருப்பது வேறு எங்கும் காணக்கிடைக்காத அரிய தரிசனம். ஶ்ரீராமபிரானின் திருச்சந்நிதியில் சிறிய திருவடியாம் அனுமன் அஞ்சலி அஸ்தத்தில் ஶ்ரீராமனைத் தொழுதவாறு எழுந்தருளியுள்ளார்.

ஸ்ரீவரதராஜ பெருமாள்
ஸ்ரீவரதராஜ பெருமாள்

வேத நாயகனாகவும் யாக தேவனாகவும் விளங்கும் ஸ்ரீநரசிம்மரின் திருவடியில் ஶ்ரீகருடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாா்.அதுபோலவே தன் தந்தை இரண்யனுக்கும் நற்கதி அளிக்க வேண்டும் என்று பிரகலாதன், நரசிங்கப் பெருமானைத் தொழுதவாறு எழுந்தருளியிருப்பது அற்புதமானத் திருக்காட்சி எனலாம். ஶ்ரீகல்யாண லட்சுமி நரசிம்மருக்கு ஒவ்வொரு சுவாதி நட்சத்திர தினத்தன்றும் 'ஶ்ரீசுவாதி மஹா யாகம்' இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. அன்றைய தினம் பெருமானுக்குத் திருமஞ்சனமும், விசேஷ ஆராதனைகளும் நடைபெறுகின்றன. வெள்ளிக்கவசம் தரித்து, பூக்குவியல்கள் மத்தியில் சிறப்பு அலங்காரத்தில் கோடி சூா்யப் பிரகாசனாக காட்சி தரும் நரசிம்ம பெருமானைக் காணக் கண்கோடி வேண்டும் என்பார்கள் அன்பர்கள்.

நட்சத்திரங்களில் மிகவும் ஒளிபொருந்தியது சுவாதி. ராகு பகவான் இந்த நட்சத்திரத்தின் அதிபதி. இந்த நட்சத்திர நாளின் பிரதோஷ வேளையில்தான் நரசிம்ம மூர்த்தி அவதரித்தார். சுவாதி நட்சத்திரத்தின் பெருமைகளில் ஒன்றாக நரசிம்ம ஜயந்தி விளங்குகிறது. ஒவ்வொரு சுவாதி நாளும் நரசிம்மருக்கு விசேஷம் என்பர். சகல நரசிம்மர் சந்நிதிகளிலும் சுவாதி நாள் அன்று விசேஷ பூஜைகள், யாகங்கள் நடைபெறும். சுவாதி நாளில் நரசிம்ம மூர்த்திக்கு பானக நிவேதனம் செய்து, துளசி, வெண்மை வஸ்திரம் சாத்த சகல சங்கடங்களும் விலகும் என்பது நம்பிக்கை. இதனால் வரும் சுவாதி நாள் அன்று (14-8-2021)இஞ்சிமேடு எனும் யக்ஞபுரியில் ஸ்ரீகல்யாண நரசிம்மருக்கு விரிவான திருமஞ்சனமும், விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளன. இன்னும் சிறப்பாக யாகங்களில் மகத்தானது மிகவும் விரிவானது என்று போற்றப்படும் இந்த மகா சுவாதி யாகத்தில் 9 யாகங்கள் சிறப்பாக நடைபெற உள்ளன.

சுதர்சன மகா யாகம்
சுதர்சன மகா யாகம்

சதுஸ்தான அர்ச்சனம் என்று போற்றப்படும் கும்ப, பிம்ப, யாக, மண்டல ரூபமாக நரசிம்ம மூர்த்தியை நான்கு திருக்கோலங்களில் யாகசாலைக்கு எழுந்தருளச் செய்வார்கள். அதன் பிறகு நான்கு சோடஷ பூஜைகள் நடத்தி மகா சுவாதி யாகம் தொடங்கும். இதில் லட்சுமி நரசிம்ம யாகம், சுதர்சன மகா யாகம், பூவராக மகா யாகம்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லட்சுமி ஹயக்ரீவ யாகம், தன்வந்திரி மகா யாகம், பாக்கியலட்சுமி மகா யாகம், வைணதேய ஆஞ்சநேய யாகம், ஸ்ரீராம யாகம், ஸ்ரீசந்தான கோபால யாகம் போன்ற 9 யாகங்கள் நிறைவுற்றதும் சகல சந்நிதிகளிலும் அலங்கார ஆராதனைகள் நடைபெறும்.

இஞ்சிமேடு ஸ்ரீவரதராஜ பெருமாள்
இஞ்சிமேடு ஸ்ரீவரதராஜ பெருமாள்

இந்த பூஜையில் சங்கல்பித்துக் கொள்வதால் உண்டாகும் நன்மைகள் அநேகம் என்பார்கள். செஞ்சு லட்சுமி சமேத கல்யாண நரசிம்மரின் அருளால், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜரின் திருவருளால், சீதாலட்சுமி சமேத ராமபிரான் திருவருளால் இந்த பெருமை மிக்க சுவாதி பூஜையில் கலந்து கொண்டால் நிச்சயம் கடன் தொல்லை நீங்கி செல்வம் பெருகும். வியாபாரம் சீராகும். மங்கல காரியங்கள் தடையின்றி விரைவாக நடைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை. வீண் சண்டைகள், வழக்குகள் முடிவுறும், நீண்டகால நோய் தீரும். சகல விதமான பிரச்சனைகளுக்கும் இந்த யாகத்தால் தீர்வு கிட்டும். உறவுகள் சீராகும். தீய பழக்கங்களால் அவதிப்படுவோர் மீண்டுவிடுவர். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி சந்தோசம் பிறக்கும். மேலும் சுவாதி நட்சத்திரக்காரர்களுக்குரிய தலமாகவும் இது இருப்பதால் சுவாதி நட்சத்திரக்காரர்கள் இங்கு இந்த பூஜையை செய்வது நன்மைகளை அளிக்கும்.

ஸ்ரீராமர்
ஸ்ரீராமர்

சக்தி விகடன் வாசகர்கள் இந்த யாகத்தின் பெரும் பலன்களை அடையவென்றே சக்தி விகடனும் GRT நிறுவனமும் இஞ்சிமேடு ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலய நிர்வாகமும் இணைந்து வரும் சுவாதி திருநாளில் 14-8-2021 காலை 8.30 மணி முதல் இந்த புனித பூஜையை நடத்த உள்ளது. இந்த மகா சங்கல்ப பூஜையில் கலந்து கொண்டு எல்லா வேண்டுதல்களும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுகிறோம்.

வாசகர்களின் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீசுவாதி மஹா ஹோமம்
ஶ்ரீசுவாதி மஹா ஹோமம்

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) மற்றும் மஞ்சள் ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

அடுத்த கட்டுரைக்கு