Election bannerElection banner
Published:Updated:

மயிலத்தில் பங்குனி உத்திரத் திருவிழா... மார்ச் 27-ம் தேதி திருத்தேர்!

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா
மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா

மயிலத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த ‘சுப்பிரமணிய சுவாமிகள்’ ஆலயத்தில் ஆண்டுதோறும் 12 நாள்கள் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் (19.3.2021 – 29.3.2021) ஆகிய தேதிகளில் இனிதே நடைபெற்ற உள்ளது.

முருகப்பெருமானுக்குக் கொண்டாடப்படும் புகழ்பெற்ற திருவிழாக்களில் பங்குனி உத்திரத் திருவிழாவும் ஒன்று. பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு சிறப்பிக்கும் இத்திருவிழா, மயிலத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த ‘சுப்பிரமணிய சுவாமிகள்’ ஆலயத்தில் ஆண்டுதோறும் 12 நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் (19.03.2021 – 29.03.2021) ஆகிய தேதிகளில் இனிதே நடைபெற்ற உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறப்புவாய்ந்த ஆலயங்களில் ஒன்று ‘மயிலம் சுப்பிரமணிய சுவாமிகள் திருக்கோயில்’. திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த கோயில்.

சூரபத்மன் முருகனுக்கு எதிராகப் பல தந்திரங்களைப் பயன்படுத்தியும் போரில் தோற்றான். தோல்வியுற்ற சூரபத்மன், தன் தவற்றினை உணர்ந்து “முருகப்பெருமானே உங்களுடைய வாகனமாக என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” என கண்ணீர் மல்க வேண்டினான்.

மயிலம் முருகன் கோயில்
மயிலம் முருகன் கோயில்

அவனுடைய வேண்டுதலை ஏற்றுக்கொண்ட முருகப்பெருமான், "நீ மயில் வடிவத்தை எடுக்க உறுதியுடன் தவத்தை மேற்கொள்வாயாக" எனக் கூறி மறைகிறார்.

அதன்படி சூரபத்மனும் தவம்புரிந்து மயில் வடிவம் பெறுகிறான். அப்போது முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார். அவரிடம், “இறைவா நான் மயில் வடிவமாக இருந்து தவம் புரிந்த இந்த மலைக்கு 'மயூராசலம்' எனப் பெயர் வழங்க வேண்டும். அதோடு தாங்களும், எந்நாளும் இங்கு வீற்றிருந்து அன்பர்களுக்கு அருள்புரிய வேண்டும்” எனும் கோரிக்கைகளை வைத்தான் சூரபத்மன்.

அதற்கு முருகப்பெருமானோ, "எதிர்காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு வந்து தவம் புரிவார். அப்போது உன் ஆசை நிறைவேறும்" எனக் கூறி மறைகிறார். சூரபத்மனும் மயில்வடிவ மலையாக மாறிக் காத்திருந்ததாக கூறுகிறது தல வரலாறு. ‘மயூராசலம்’ என அழைக்கப்பட்ட இந்த இடம் நாளடைவில் மயிலம் என மாறியுள்ளது. பொதுவாக முருகன் கோயில்களில் உள்ள மயில் தெற்கு நோக்கியபடியோ அல்லது நேர் திசையிலோ இருப்பது வழக்கம்.

ஆனால், இந்த ஆலயத்தில் உள்ள மயில், வடக்கு நோக்கிபடி காணப்படுகிறது. இது சூரபத்மன் வழிபட்ட திசையை குறிப்பதாக கூறப்படுகிறது. யாருக்கும் வணங்காத கந்தனின் வேல் இங்கு தவம் புரிந்த பாலசித்தரின் தவத்தை கண்டு வணங்கியதாகக் கூறப்படுகிறது. இதன் நினைவாக, இன்றளவும் இங்கு நடைபெறும் சஷ்டி விழாவில் சூரசம்ஹாரத்திற்கு முருகன் புறப்படும் போது பாலசித்தரிடமிருந்தே முருகப்பெருமான் வேல் வாங்கிச் செல்கிறார். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் முருகனுடைய வேலாயுத பூஜையில், வேலாயுதத்திற்கு அர்ச்சனை செய்து வழிபடும் பக்தர்களின் கடன் பிரச்னைகள் அகலும் என்றும், இந்த ஆலயத்தில் காட்சி தரும் முருகப்பெருமானின் படைத்தளபதி வீரபாகுவை செவ்வாய்தோறும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் பக்தர்கள நம்புகிறார்கள்.

இந்த ஆலயத்தில் நடைபெறும் 12 நாள் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது திருமணக்கோலத்தில் தினமும் ஒவ்வொரு வாகனத்திலும் முருகப்பெருமான் காட்சித்தருவார். அதாவது, மயில், யானை, ஆட்டுக்கிடாய், நாகம், பூதம் போன்ற வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சித்தருவார். பங்குனி உத்திரத் தேரோட்டம் இங்கு விமர்சையாகக் கொண்டாடப்படும்.
மயிலம் முருகன் கோவில்
மயிலம் முருகன் கோவில்

அன்றைய தினத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கூடியிருப்பர். பல்வேறுப்பட்ட வேண்டுதல்களுடன் பக்தர்கள் பலர் அலகு குத்தியும், காவடி எடுத்தும் மலையைச் சுற்றிவந்து தேரடியில் நிறைவு செய்வர். வியாபாரம் செய்வோர், விவசாயிகள், மக்கள் எனப் பலரும் மிளகாய், தானியம், பூக்கள், எலுமிச்சை போன்ற பொருட்களைக் கொண்டுவந்து தேரடியில் கொட்டி வழிபடுவர்.

மயிலத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் இந்த பங்குனி உத்திர திருவிழா. இந்த வருடமும் கீழ்காணும் தேதிகளில் இனிதே நடைபெற்ற உள்ளது.

பங்குனி 6 (19.3.2021) – கொடியேற்றம்,

பங்குனி 10 (23.3.2021) – தங்கமயில் வாகன உற்சவம் (இரவு),

பங்குனி 13 (26.3.2021) – திருக்கல்யாணம் (இரவு),

பங்குனி 14 (27.3.2021) – திருத்தேர்,

பங்குனி 15 (28.3.2021) – காலையில் பங்குனி உத்திரம் - தீர்த்தவாரி, இரவு தெப்பல் உற்சவம்.

பங்குனி 16 (29.3.2021) – முத்துப்பல்லக்கு உற்சவம் (இரவு).

தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை வணங்கி, நல் அருளை பெறுவோம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு