கேரள மாநிலத்தின் புகழ்மிக்க திருக்கோயில், குருவாயூரப்பன் ஆலயம். `தென்னிந்தியாவின் துவாரகை’ என்று போற்றப்படும் இந்தத் தலத்தில் ஸ்ரீகுருவாயூரப்பன் எழுந்தருள காரணமானவர் மம்மியூரில் அருள்புரியும் மகாதேவர் என்கின்றன புராணங்கள்.

தன் அவதார நோக்கம் முடிந்து வைகுண்டம் செல்ல தயாரானார் கிருஷ்ண பரமாத்மா. அவரைப் பிரியவேண்டுமே என்ற எண்ணத்தால் எழுந்த கவலையால் கலங்கினார் உத்தவர். அவரின் கலக்கத்தை நீக்கியருளும் பொருட்டு, தனது சிலா வடிவத்தை அவரிடம் அளித்து, ‘`இந்த விக்கிரகத் திருமேனியில் எழுந்தருளி கலியுகத்தில் பக்தர்களுக்கு அருள்செய்வேன்’' என்று வாக்கு அளித்தார் கிருஷ்ணன்.

அத்துடன், ``துவாரகையை வெள்ளம் சூழும் காலத்தில் இந்த விக்கிரகத் திருமேனியை உரிய இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்'' என்று குரு பகவானுக்குக் கட்டளையிட்டார். கிருஷ்ணர் வைகுண்டம் சென்றதுமே, துவாரகையை வெள்ளம் சூழ்ந்தது. கிருஷ்ணரின் திருமேனி வெள்ளத்தில் மிதந்தது. குரு பகவான், வாயு பகவானின் துணையோடு அதை மீட்டார். இருவரும் அந்தத் திருமேனியை பிரதிஷ்டை செய்ய இடம் தேடினர். பாலக்காடு அருகே பரசுராமரை தரிசித்து, தாங்கள் செல்லவேண்டிய இடத்துக்கு வழி காட்டு மாறு வேண்டிக்கொண்டனர். பரசுராமரும் அவர்களுக்கு ஆசி வழங்கி வழிகாட்டினார்.

பயணத்தின் நடுவே ஓரிடத்தில், பசுமையான சூழலையும் தாமரைத் தடாகத்தையும் கண்டு மனம் மயங்கினர். அந்த இடத்தில் சிவ சாந்நித்தியம் நிறைந்திருந்ததைக் கண்டனர். ஆம், அங்கே மகாதேவரான சிவபெருமான் திருக்கோயில் கொண்டிருந்தார். மிக ரம்மியமான - புனிதம் நிரம்பிய அந்த இடத்தில்தான் கிருஷ்ணருக்குக் கோயில் அமைய வேண்டும் என்று குருவும் வாயுவும் விரும்பினர்.

மகாதேவனின் சந்நிதியில் அதற்கான அனுமதியை வேண்டி நின்றனர். அப்போது, பார்வதி சமேதராகக் காட்சியளித்த மகாதேவர், அவர்களின் விருப்பம் நிறைவேற ஆசி வழங்கினார். குருவும் வாயுவும் இணைந்து அங்கே கிருஷ்ணருக்கு ஓர் ஆலயம் எழுப்பினர். ஆகவே அந்தத் தலத்துக்கு குருவாயூர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. அங்கு எழுந்தருளிய கிருஷ்ணரும் குருவாயூரப்பன் எனும் பெயரை ஏற்றார்.

குருவுக்கும் வாயுவுக்கும் குருவாயூரப்பன் ஆலயம் அமைக்க அனுமதியும் ஆசியும் வழங்கிய மகாதேவன் மம்மியூரில் கோயில்கொண்டார். இன்றும் குருவாயூரப்பனை வழிபடச் செல்லும் பக்தர்கள், அவரை வழிபட்டுவிட்டு மம்மியூர் மகாதேவர் ஆலயத்துக்கும் சென்று வழிபடு கிறார்கள். அப்போதுதான் குருவாயூர் யாத்திரை முழுமையடையும் என்பது ஐதிகம்.

சிவபெருமான் ருத்ரராக இங்குள்ள தடாகத்தின் அருகே கடுந்தவம் புரிந்தால் ஏற்பட்ட மகிமையைக்கொண்ட ஊர் ஆதலால், இத்தலத் துக்கு மகிமையூர் என்று பெயர். அதுவே மருவி, `மம்மியூர்' என்றானதாம். ஈசன் தவமியற்றிய தடாகம் ருத்ர தீர்த்தமாகப் போற்றப்படுகிறது.

மகாதேவன் ஆலயத்தின் வாசல் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தினுள் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்திதேவரை தரிசிக்கலாம். தொடர்ந்து மகாதேவரின் சந்நிதியை அடைந்தால், தீப ஒளியில் பொன்னிற மேனியராய்ப் பிரகாசிக் கிறார் மூலவர் மம்மியூர் மகாதேவர்.

மகிமைகள் மிகுந்த இந்த மம்மியூர் மகாதேவனை தரிசித்து வழிபட்டால், வேண்டும் வரங்கள் விரைவில் கிடைப்பதோடு, பிறவிப் பிணியும் தீரும் என்பது ஐதிகம். இவரின் சந்நிதிக்கு இடதுபுறம், தனிச்சந்நிதியில் மகாவிஷ்ணு நின்றகோலத்தில் காட்சி கொடுக்கிறார். இந்த ஆலயத்தில் கணபதி, சுப்ரமணியர், சாஸ்தா, பகவதியம்மன், நாகம்மன் ஆகியோரின் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

இங்கு நாள்தோறும் மாலை 6:45 மணிக்கு ‘ரிக் வேத தாரை’ எனும் சிறப்பு வேத பாராயணமும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. தினமும் ரிக்வேத பாராயணம் நடைபெறும் தலங்களில் இதுவும் ஒன்று. அதேபோல் விசேஷ நாள்களில் ‘ஏகாதச ருத்ராபிஷேகமும்’ நடத்தப்படுகிறது. விஜயதசமி திருநாளில் இந்தத் திருக்கோயிலில் ஏடெடுக்கும் வைபவம் மிகச் சிறப்பாக நடை பெறுகிறது.

எப்படிச் செல்வது? கேரள மாநிலம், திருச்சூரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது குருவாயூர். சென்னை யிலிருந்து ரயில் வசதி உண்டு. கோவையிலிருந்து பாலக்காடு, திருச்சூர் வழியே குருவாயூரை அடையலாம். காலை 6 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.