Published:Updated:

மனச்சுமைகள் நீக்கும் மனோன்மணீஸ்வரர்!

மனோன்மணீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
மனோன்மணீஸ்வரர்

இறைவன் மகாதேவர், மகாலிங்கேஸ்வரர் போன்ற திருப்பெயர்களுடன் அருளும் தலங்கள் அனைத்தும் அளவற்ற மகத்துவம் கொண்டவை.

மனச்சுமைகள் நீக்கும் மனோன்மணீஸ்வரர்!

இறைவன் மகாதேவர், மகாலிங்கேஸ்வரர் போன்ற திருப்பெயர்களுடன் அருளும் தலங்கள் அனைத்தும் அளவற்ற மகத்துவம் கொண்டவை.

Published:Updated:
மனோன்மணீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
மனோன்மணீஸ்வரர்

ன்று எண்ணற்ற பிரச்னைகளின் காரணமாகப் பலரும் மன அழுத்தத்துக்கு ஆட்படுகின்றனர். மனத்தைப் பெரும் சுமை ஒன்று அழுத்துவதைப்போன்ற உணர்வில் தவித்து, அதிலிருந்து மீள ஒரு வழி கிடைக்குமா என்று ஏங்குகின்றனர். மனச்சுமையை அகற்றிக் கொள்ள ஏதேனும் ஒரு வழி கிடைக்காதா என்று தேடி அலைகின்றனர்.

அவர்களுக்கெல்லாம் அடைக்கலம்போல் அமைந்திருக்கும் ஆலயம்தான் அகரம் அருள்மிகு மனோன்மணி அம்பாள் சமேத அருள்மிகு மகாதேவர் ஆலயம்.

மனோன்மணீஸ்வரர்
மனோன்மணீஸ்வரர்

இறைவன் மகாதேவர், மகாலிங்கேஸ்வரர் போன்ற திருப்பெயர்களுடன் அருளும் தலங்கள் அனைத்தும் அளவற்ற மகத்துவம் கொண்டவை. அதேபோல் இந்த ஆலயமும் அளவற்ற மகிமைகளைத் தன்னகத்தே கொண்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குறிப்பாக அஷ்டமா ஸித்திகளில் லகிமா என்னும் ஸித்தி வழிபட்ட ஆலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. லகிமா என்றால் காற்றைப் போல் லேசாக இருத்தல் என்று பொருள். அந்த வகையில் மனோன்மணி சமேத மகாதேவரை தரிசித்து வழிபட்டால், மனச்சுமைகள் நீங்கி, மனம் லேசாவதுடன், தெளிவாகச் சிந்திக்கும் திறனும் அதிகரிக்கும்.

மனோன்மணி என்றால் மனத்தின் உள்ளே மணியாகத் தோன்றி அருள்பவள் என்றுபொருள். லலிதா சகஸ்ரநாமம் போற்றும் ஆறு ஆதார தேவதைகளும் மனோன்மணியுள் அடக்கம் என்கின்றனர் ஞானியர். மனோன்மணி அம்பிகை வைராக்கியத்தை அருள்பவள்.

மனோன்மணி அம்பாள் சித்தர்களின் வழிபடு தெய்வம். மனோன்மணி அம்பிகையை சித்தர்கள் வாலையாக வழிபடுகின்றனர்.

மனோன்மணீஸ்வரர்
மனோன்மணீஸ்வரர்

எங்கெல்லாம் அம்பாள் மனோன்மணி என்ற திருப்பெயருடன் கோயில்கொண்டு அருள்கிறாளோ, அந்த ஆலயங்களில் எல்லாம் சித்தர்கள் சூட்சும வடிவில் வந்து வழிபடுவதுடன், அம்பாளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்வதாகவும் ஐதிகம்.

மகாதேவருடன் அருளும் அம்பிகை மனோன் மணியை தரிசித்து வழிபடும் பக்தர்களின் மனங் களை ஆட்கொண்டு அருளும் அம்பிகை, அவர்களை நல்வழிப்படுத்துவாள். அம்பிகையை வழிபட மனநலம் கூடும்; மனக்குழப்பங்கள் விலகும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

சுமார் 1400 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், பிற்காலத்தில் முற்றிலும் சிதிலமடைந்துபோனது காலத்தின் கோலமோஅல்லது மனிதர்களின் அலட்சியமோ... அந்த மகாதேவருக்கே வெளிச்சம்!

மனோன்மணீஸ்வரர்
மனோன்மணீஸ்வரர்

பல வருடங்களுக்கு முன்பு ஊர்ப் பெரியவர் ஒருவர் கனவில் தோன்றிய சிவனார், சுற்றிலும் பசுமை போர்த்திய வயல்வெளியில் தாம் புதையுண்டு இருப்பதாகவும், தம்மை வெளியில் எடுத்து ஓர் ஆலயம் எழுப்பும்படிக் கூறினார். பெரியவரும் தாம் கண்ட கனவை ஊர் மக்களிடம் தெரி வித்தார்.ஊர்மக்களின் ஆதரவுடன் இளை ஞர்கள் ஒன்று சேர்ந்து இடிபாடுகளை அகற்றத் தொடங்கினர்.

எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்பும் விநாயகரை வழிபடுவது அவசியம். ஆனால், இங்கோ இடிபாடுகளை அகற்றத் தொடங்கியதுமே இரண்டு விநாயகர் சிலைகள் வெளிப்பட்டன. அப்போதே ஊர்மக்களின் மனங்களில் ஆனந்தம் பெருகியது. தாங்கள் தொடங்கிய காரியம் விநாயகர் அருளால் வெற்றிகரமாக முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்பட்டது.தொடர்ந்து இடிபாடுகளை அகற்றியபோது எம்பெருமானின் விஸ்வரூப சிவலிங்கத் திருவுருவம் கிடைக்கப் பெற்றது.

ஆம்... சுமார் எட்டு அடி உயர சிவலிங்கத் திருமேனி அது. பிரம்ம பாகம் 2.6 அடி; விஷ்ணு பாகம் 2.6 அடி; சிவபாகம் 2.6 அடி என்று மிகப் பெரிய சிவலிங்கத் திருமேனி அது! ஆனால், ஆவுடையார் இல்லை. ஆவுடையார் இல்லாத அந்த சிவலிங்கத் திருமேனியை ஒரு வேப்பமரத்தின் நிழலில் பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து வந்தனர். சுமார் 30 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது.

சில வருடங்களுக்கு முன்பு ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து ஆலயம் எழுப்ப வேண்டும் என்று திருப்பணிகளைத் தொடங்கினர். சிவலிங்கத் திருமேனி கிடைத்த அதே இடத்தில் அன்பர் ஒருவர் வழங்கிய ஆவுடையாருடன் சிவலிங்கத் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு சிவ பெருமானுக்கு மட்டும் ஒரு கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துடன் ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் திருநெல்வேலியைச் சேர்ந்த சிவனடியார் ஒருவரின் உபயத்தில் மகாமண்டபமும் கட்டப்பட்டது. தொடர்ந்து மனோன்மணி அம்பிகை மற்றும் பரிவார தெய்வங்களின் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

மரகதப் பாய் விரித்தாற்போன்று பசுமை போர்த்திக் காட்சியளிக்கும் வயல்வெளியின் நடுவில், எளிமையாக இருந்தாலும் கம்பீரமாகக் காட்சி தருகிறது ஐயனின் திருக்கோயில்.

ஐயன் மகாதேவரையும், பக்தர்களின் மனங்களையெல்லாம் ஆட்கொண்டு அருளும் மனோன்மணி அம்பிகையையும் தரிசித்து வழிபடுபவர்களின் மனச் சுமைகள் எல்லாம் நீங்கி, ஆனந்தம் பிறக்கும் என்று நம்பிக்கையுடன் சொல்கின்றனர் பக்தர்கள்.

கல்வெட்டில் ஆலயம் பற்றிய செய்தி:

லயத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டை ஆய்வு செய்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் அவருடைய மாணவர் அருண்ராஜ் என்பவரும் தெரிவித்ததாக சில செய்திகளை ஊர்மக்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். ‘கோயிலிலிருந்த கல்வெட்டுத் தகவல்களின்படி அந்தக் கோயில் ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகக் கூறினர். மேலும், அந்தக் கல்வெட்டில் அகரம் கிராமத்துக்கு அருகிலுள்ள புதுமாவிலங்கை கிராமம், சோழர்கள் காலத்தில் புதுமாயிலங்கை என்று அழைக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக சிவபெருமான் மகாதேவ புதுமாயிலங்கை நக்கர் என்று அழைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். கல்வெட்டின்படி பாசாலி நாட்டின் மணையில் கோட்டத்தில் புதுமாயிலங்கை இருந்ததாகவும், அந்த மணையில் கோட்டமே தற்போது மணவூர் என்று அழைக்கப்படுவதாகவும் கூறினர்’ என்றனர்.

கல்வெட்டு
கல்வெட்டு

ஜேஷ்டா தேவி பிரதிஷ்டை...

ஆலயத்தின் இடிபாடுகளை அகற்றியபோது ஜேஷ்டாதேவியின் சிலை ஒன்றும் கிடைத்தது. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு ஜேஷ்டா தேவி வழிபாடு குறைந்துவிட்டது. எனவே, ஜேஷ்டா தேவியின் உருவம் கிடைத்த இந்த ஆலயம், நிச்சயம் பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று உறுதியாகச் சொல்ல முடியும் என்கின்றனர் ஊர் மக்கள்.

அஷ்ட ஸித்திகள் வழிபட்ட சிவாலயங்கள்

கிமா ஸித்தி வழிபட்ட அகரம் மகாதேவர் ஆலயத்தைப் போன்றே, மற்ற ஏழு ஸித்திகளும் வழிபட்ட சிவாலயங்கள் சுற்றிலுமுள்ள கிராமங்களில் அமைந்துள்ளன.

அனிமா - அருள்மிகு அகத்தீஸ்வரர், மேல்மணம் புதூர்

மஹிமா - அருள்மிகு அகத்தீஸ்வரர், புதுமாவிலங்கை

கரிமா - அருள்மிகு வசிஷ்டேஸ்வரர், சத்தரை

பிராப்தி - அருள்மிகு சோளீஸ்வரர், செஞ்சி பனம்பாக்கம்

வாசித்துவம் - அருள்மிகு கயிலாசநாதர், செஞ்சி பனம்பாக்கம்

பிராகாம்யம் - அருள்மிகு இஷ்ட ஸித்திலிங்கேஸ்வரர், சிற்றம்பாக்கம்

ஈசத்துவம் - அருள்மிகு அஷ்ட ஸித்தி லிங்கேஸ்வரர், பேரம்பாக்கம்

எட்டு ஸித்திகளும் ஒன்று சேர்ந்து வழிபட்ட தலம் - அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில், மணவூர்

வித விதமாய் அபிஷேகம்

சென்னை குரோம்பேட்டை செங்கச்சேரி அம்மனுக்கு பௌர்ணமியன்று மருதாணி இலையால் அபிஷேகம் செய்யப்படுகிறது. திருப்பழனம் பழனத்தப்பர் ஐப்பசி பௌர்ணமி நாளன்று காய்கறி அபிஷேகம் ஏற்கிறார். திருநெய்த்தானம் நெய்யாடியப்பருக்கு நெய் அபிஷேகம் செய்தபின் வெந்நீரால் அபிஷேகம் நடக்கிறது. தில்லைக் காளிக்கு நல்லெண்ணெயால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. உறையூர் வெக்காளி அம்மனுக்கு வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாம்பழங்களால் அபிஷேகம் விமரிசையாக நடத்தப்படுகிறது.

- எம்.ராகவன், சென்னை - 4