Election bannerElection banner
Published:Updated:

திருவள்ளூர்: தீர்த்தீஸ்வரர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி மாத பிரம்மோற்சவ விழா!

திரிபுரசுந்தரி அம்பாளுடன் உற்சவர் தீர்த்தீஸ்வரர்
திரிபுரசுந்தரி அம்பாளுடன் உற்சவர் தீர்த்தீஸ்வரர்

பங்குனி மாத பிரமோற்சவ விழா வேத மந்திரங்கள் முழங்க, தீர்த்தீஸ்வரர் முன்னிலையில் கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஈசனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றுச் சென்றனர். 

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகரில் அமைந்துள்ளது தீர்த்தீஸ்வரர் திருக்கோயில். 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அம்பாள் திரிபுரசுந்தரி சமேதரராக இவ்வாலயத்தில் அருள்பாலிக்கும் ஈஸ்வரருக்கு வருடா வருடம் பங்குனி மாத பிரமோற்சவ விழா நடத்தப்பட்டு வருகிறது. 10 நாள்கள் மிகவும் விமர்சையாக நடைபெறும் இந்த விழாவில் உற்சவர் தீர்த்தீஸ்வரர் தினம் காலை மாலை என இரு வேளைகளும் வித விதமான வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்கிறார்.

அந்த வகையில், இந்தாண்டிற்கான பங்குனி மாத பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்
கொடியேற்றம்
நேற்று காலை 7.30 மணியளவில் சுவாமி தீர்த்தீஸ்வரர் அம்பாள் திரிபுரசுந்தரி தாயாருடன் கொடிமரம் முன்பாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலர்களாலும், தங்க வைர ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்த இறைவனைக் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

பங்குனி மாத பிரம்மோற்சவ விழா வேத மந்திரங்கள் முழங்க, தீர்த்தீஸ்வரர் முன்னிலையில் கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஈசனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றுச் சென்றனர். கொடியேற்றத்தைத் தொடர்ந்து, உற்சவர் தீர்த்தீஸ்வரர் அம்பாள் திரிபுரசுந்தரியாருடன் திருக்கோயில் பிராகாரத்தைச் சுற்றி உலா வந்தார்.

வரும் 19-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த பிரம்மோற்சவ விழாவில் உற்சவப்பெருமான் பூத வாகனம், மயில் வாகனம், புஷ்ப பல்லக்கு எனப் பலவகையான வாகனங்களில் வீதி உலா புரிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

கொடியேற்றம்
கொடியேற்றம்
விழாவில் முக்கிய நிகழ்வாக வரும் 11-ம் தேதி இரவு மகா சிவராத்திரியும், 13-ம் தேதி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி தரிசனமும், 16-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறவிருக்கிறது. 10 நாள்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழா வரும் 18-ம் தேதி அன்று தீர்த்தவாரியுடன் நிறைவடைகிறது.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு