Published:Updated:

`21 ஆலயங்கள்' - நாகையில் மகாசிவராத்திரி சிவாலய ஓட்டம்

நாகை காரோணம் சிவாலயம்
நாகை காரோணம் சிவாலயம்

மகாசிவராத்திரி சிவாலய ஓட்டம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பிரசித்தி பெற்ற 21 சிவாலயங்களை ஒரே நாளில் சிவாலய ஓட்டமாக பக்தர்கள் இன்று தரிசனம் செய்கிறார்கள்.

நாகை காரோணம் சிவாலய ஓட்டம்
நாகை காரோணம் சிவாலய ஓட்டம்

ஒவ்வொரு யுக முடிவிலும் மகாபிரளயம் ஏற்பட்டு பூலோகம் முழுவதும் நீரால் சூழப்பட்டு உயிரினங்கள் அனைத்தும் அழியும். முன்னொரு காலத்தில் அப்படி ஒரு பிரளயத்தின் முடிவில் உயிரினங்கள் அனைத்தும் அழிந்தன. அப்போது பார்வதி தேவியானவர் பெருவெள்ளம் ஓய்ந்து மீண்டும் உயிரினங்கள் தோன்றவும், மனிதகுலம் தழைக்கவும் ஓர் இரவு முழுவதும் விழித்திருந்து நான்கு கால பூஜை செய்து பரம்பொருளை வழிபட்டார். அதனால் மீண்டும் பூமியில் உயிரினங்கள் தோன்றின. அப்படி பார்வதிதேவி பரமனைப் பூஜித்த தினமே மகாசிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

Vikatan

நாகப்பட்டினத்தில் சமயக்குரவர்கள் மூவராலும் பாடல் பெற்ற ஸ்ரீ காயாரோகண சுவாமி மையப்படுத்தி நகருக்குள் 12 சிவாலயங்கள் உள்ளன. இந்த சிவாலயங்களில் அனைத்திலும் மகாசிவராத்திரி நாளில் பல்லாயிரக்கணக்கானோர் வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில் நாகை ஸ்ரீ விஸ்வரூப விநாயகர் குழு சார்பில் இன்று நாகை மற்றும் சுற்றியுள்ள 21 சிவாலயங்களை தரிசிக்க ஏற்பாடு செய்துள்ளனர். நாகையில் ஆதி சிவத்தலங்களில் ஒன்றான இளமங்கை சமேத ஸ்ரீ சட்டைநாதர் கோயிலிலிருந்து இன்று காலை 7 மணிக்கு இந்த சிவாலய ஓட்ட வாகனப் பயணம் தொடங்கியது .

சிவன்
சிவன்

வடக்கு பொய்கைநல்லூர் ஸ்ரீ நந்தி நாதேஸ்வர சுவாமி கோயில், வீரன் குடிகாடு ஸ்ரீ நல்லூர்நாதர் சுவாமி கோயில், தெற்கு பொய்கை நல்லூர் ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் கோயில், பாப்பாக்கோயில் ஸ்ரீ கடம்பவனநாதர் கோயில், அந்தனப்பேட்டை ஸ்ரீ அண்ணாமலையார் கோயில், புத்தூர் ஸ்ரீ ருத்ரபுரீஸ்வரர் சுவாமி கோயில், பொருள்வைத்தசேரி ஸ்ரீ சுந்தரேஸ்வர சுவாமி கோயில், சிக்கல் ஸ்ரீநவநீதீஸ்வரர் சுவாமி கோயில், குற்றம்பொருத்தான்இருப்பு ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயில், சங்கமங்கலம் ஸ்ரீ சாந்தபுரீஸ்வரர் கோயில், பழையனூர் ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயில்,புலியூர் ஸ்ரீ வியாக்ராபுரீஸ்வரர் கோயில், இளம்கடம்பனூர் ஸ்ரீ துளசிமடையார் கோயில், பெருங்கடம்பனூர் ஸ்ரீ நான்மறையூர் கோயில், பாலையூர் ஸ்ரீ இமயநாதர் சுவாமி கோயில், வடகுடி திருமேனிஅழகர் கோயில், தெத்தி ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் சுவாமி கோயில் நாகூர் ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், தெத்தி ஸ்ரீசுந்தரேஸ்வர சுவாமி கோயில், வெளிப்பாளையம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் சுவாமி கோயில், ஆகிய ஆலயங்களை தரிசனம் செய்து, இறுதியில் நாகை ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன் சமேத ஸ்ரீ காயாரோகண சுவாமி கோயிலில் வந்து பயணம் நிறைவடைகிறது.

மகாசிவராத்திரியன்று முறையாக விரதம் இருந்து, இரவு முழுதும் கண்விழித்து இறைவனின் நாமத்தைச் சொல்லி வழிபடுவதால் அளவற்ற நன்மை கிடைக்கும். நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நல்ல மக்கட்பேறு பெறலாம். தீரா நோய்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். இனிப் பிறவா தன்மையும் பெறலாம் என்பது ஐதிகம்.

அடுத்த கட்டுரைக்கு