Published:Updated:

நாரதர் உலா: பொலிவு பெறுமா குலசேகரப் பெருமாள் கோயில்!

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா

`குலசேகர ஆழ்வார் கேரளத்தை உள்ளடக்கிய சேர நாட்டின் சக்ரவர்த்தியாக இருந்திருக்கிறார். அவரின் குடும்பவழி வந்துதான் திருவிதாங்கூர் ராஜ வம்சம்.

நாரதர் உலா: பொலிவு பெறுமா குலசேகரப் பெருமாள் கோயில்!

`குலசேகர ஆழ்வார் கேரளத்தை உள்ளடக்கிய சேர நாட்டின் சக்ரவர்த்தியாக இருந்திருக்கிறார். அவரின் குடும்பவழி வந்துதான் திருவிதாங்கூர் ராஜ வம்சம்.

Published:Updated:
நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா
“தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே... என்ற மன்னிப்பு வேண்டும் பதிகத்தைப் பாடியபடி நுழைந்தார் நாரதர். அவர் மனத்தில் ஏதோ வருத்தம் என்பதைப் புரிந்துகொண்ட நாம், வந்தவருக்கு தேநீரும் சீடையும் கொடுத்து உபசரித்தோம்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உபசரிப்பில் கவனம் செலுத்தாதவராக பேச ஆரம்பித்தார்.

“இந்த ஊரடங்கு வந்து ஆலயங்கள் எல்லாம் மூடப்பட்டிருக்க, பெருந் திருவிழாக்கள் பலவும் நடைபெறாமல் இருப்பது ஒருபுறம் என்றால், ஆள் நடமாட்டமில்லாத நிலையில் ஊர்ப்புறத்தைவிட்டு தனித்திருக்கும் ஆலயப் பகுதிகள், சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவிடக்கூடாதே என்பதுதான் பக்தர்களின் ஆதங்கமாக இருக்கிறது...''

நாரதர் உலா: பொலிவு பெறுமா குலசேகரப் பெருமாள் கோயில்!

கொளஞ்சியப்பர் ஆலய விவகாரத்தை மனத்தில் வைத்துதான் நாரதர் ஆதங்கப்படுகிறார் என்பது நமக்குப் புரிந்தது; அமைதி காத்தோம். அவரே தொடர்ந்தார்... ``சமீபத்தில்கூட விருத்தாசலத்தில் அருகிலுள்ள அருள்மிகு கொளஞ்சியப்பர் கோயில் சார்ந்த பகுதியில், சிலர் மது அருந்தியபடி மாமிசம் சாப்பிடும் வீடியோ வெளியானது. இதைக் கண்டு பலரும் வேதனைப்பட்டார்கள்.

நாரதர் உலா: பொலிவு பெறுமா குலசேகரப் பெருமாள் கோயில்!

அங்கு மட்டுமல்ல, நான் சென்று வந்த பல மாவட்டங்களிலும் பல ஆலயப் பகுதிகளின் நிலைமையும் இப்படித்தான். இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில், ஆலயங்களைத் திறக்கச் செய்து, கட்டுப்பாடுகளுடன் கூடிய தரிசனத்துக்கு வழி செய்ய வேண்டும். அரசு இனியும் தாமதிக்கக் கூடாது என்பதே ஆன்மிக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்களின் விருப்பமாக உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டும்.'' என்ற நாரதர், ஓரிரு கணங்கள் கண்ணைமூடி ஏதோ யோசித்தபின், ``குமரி தீரத்திலிருந்து ஒரு தகவல்...'' என்றார்.

``கன்னியாகுமரி மாவட்டத்திலா?''

``ஆமாம். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது குலசேகர பெருமாள் ஆலயம். அதுகுறித்த தகவல்தான்...'' என்றவர் அதுபற்றி விவரித்தார்.

நாரதர் உலா: பொலிவு பெறுமா குலசேகரப் பெருமாள் கோயில்!

``திருவிதாங்கூர் மன்னர்கள் வழிபட்ட தொன்மையான ஆலயம் இது. திருவிதாங்கூர் ராஜ வம்சத்தினர் தங்குவதற்காக திருவட்டாறு கோயிலைச் சுற்றி ஓடும் பரளி ஆற்றின் கரையில் சிறிய கொட்டாரம் (சிறு அரண்மனை) அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கொட்டாரத்தில் தங்கும் மன்னர்கள், அதிகாலையில் எழுந்து பரளி ஆற்றின் `ராமர் தீர்த்தம்' படித்துறையில் நீராடிவிட்டு, முதலில் குலசேகர பெருமாள் கோயிலில் வாளுடன் வந்து வழிபடுவார்கள். அதன் பின்னரே ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வழிபாடு செய்வார்கள் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

இத்தகு சிறப்பு வாய்ந்த இந்தக் கோயில் 25 ஆண்டுகளாக பெரியளவிலான பூஜைகள், திருவிழாக்கள் எதுவும் இல்லாமல் புகழ்மங்கி திகழ்கிறது. காரை சுண்ணாம்பு முதலியவற்றால் கட்டப்பட்டுள்ள கருவறை விமானம் கும்பக் கலசம் இல்லாமல் வெறுமனே காட்சி அளிக்கிறது. அவ்வளவு ஏன்... இந்தக் கோயிலின் சுவாமியின் மூல விக்கிரகத்தின் அடிப் பகுதியிலிருந்த அஷ்டபந்தனம் கரைந்து போயுள்ளது. அதனால் விஷ்ணு விக்ரஹம் ஆடுவதாகவும், அதன் காரணமாக சுவாமிக்கு அபிஷேகம் செய்வது இல்லை எனவும் ஆதங்கப்படுகிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

அருகிலிருக்கும் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் உள்ள அர்ச்சகர் ஒருவர், எப்போதாவது ஒருமுறை இந்தக் கோயிலைத் திறந்து நைவேத்தியம் செய்துவிட்டு, உடனே நடை சாத்திவிட்டுச் செல்வாராம்!

குலசேகரப் பெருமாள் கோயில் குறித்து மலையாள எழுத்தாளர் சுகுமாரன் நாயர் நம்மிடம் பேசினார், `குலசேகர ஆழ்வார் கேரளத்தை உள்ளடக்கிய சேர நாட்டின் சக்ரவர்த்தியாக இருந்திருக்கிறார். அவரின் குடும்பவழி வந்துதான் திருவிதாங்கூர் ராஜ வம்சம். அதனால்தான் திருவிதாங்கூர் ராஜாக் களுக்கு குலசேகர கிரீடபதி என்ற பெயரும் இருப்பதாக கூறுகிறார்கள்.

நாரதர் உலா: பொலிவு பெறுமா குலசேகரப் பெருமாள் கோயில்!

குலசேகரப் பெருமாள் கேரள சக்கரவர்த்தி யாக இருந்ததால், அவரது பெயரில் திருவட்டாறில் அமைக்கப்பட்டது குலசேகரப் பெருமாள் கோயில் என்பது நம்பிக்கை. திருவிதாங்கூர் மன்னர்கள் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பூஜைகள் நடத்துவதற்கு முன்பு குலசேகர பெருமாள் கோயிலில் பூஜைகள் நடத்துவார்கள்.

குலசேகரப் பெருமாள் கோயில் கருவறை கோபுரம் கோகர்ண கோபுரம் என அழைக்கப் படுகிறது. பல அடுக்குகளாக உயர்ந்துள்ள இந்தக் கோபுரத்தின் ஒவ்வொரு தட்டுகளிலும் பல சித்திர வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. இன்று எல்லாமே பாழடைந்து பரிதாப நிலையில் உள்ளன' என்றார் அவர்'' என்ற நாரதரிடம், ``இதுகுறித்து கோயில் நிர்வாகத் தரப்பில் விசாரித்தீர்களா'' என்று கேட்டோம்.

நாரதர் உலா: பொலிவு பெறுமா குலசேகரப் பெருமாள் கோயில்!

``ஆமாம், திருவட்டார் கோயில் ஸ்ரீகாரியம் (மேலாளர்) மோகன் குமாரிடம் பேசினோம்.

‘குலசேகரப் பெருமாள் கோயிலில் ஒரு நேரம் நைவேத்தியம் நடக்கிறது. அபிஷேகம் நடப்பதில்லை. அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடத்துவதற்காகக் கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிந்ததும் விரைவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக தந்திரியிடம் நாள் குறிக்கக் கேட்டுள்ளோம். கும்பாபி ஷேகம் முடிந்ததும் தினசரி பூஜைகள் நடத்தப்படும்’ என்றார் மோகன்குமார்.

எது எப்படியோ குலசேகரப் பெருமாள் கோயில் விரைவில் பொலிவு பெற வேண்டும்.'' என்று நிறைவு செய்தார் நாரதர். ``நிச்சயம் அதற்கு அந்தக் குல சேகரப் பெருமாள் அருள்பாலிப்பார்'' என்று நாம் கூற, தலையசைத்து ஆமோதித்தபடியே, செல்போனில் வந்த அழைப்பை ஏற்று, உரையாட லில் மூழ்கிப்போனார் நாரதர்.

- உலா தொடரும்...