தொடர்கள்
திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

நார்த்தாமலை அற்புதங்கள்!

நார்த்தாமலை
பிரீமியம் ஸ்டோரி
News
நார்த்தாமலை

ஓவியங்கள்: ஜெ.பி

புதுக்கோட்டை- திருச்சி சாலையில் புதுக்கோட்டையிலிருந்து சுமார் 19 கி.மீ தொலைவில் உள்ளது நார்த்தான் மலை.

ஆஞ்சநேயர் தூக்கி வந்த சஞ்சீவி மலையின் துகள்களே இங்கு சிறு குன்றுகளாக உருவெடுத்ததாக ஐதிகம். இங்கு மூலிகைகள் நிறைந்துள்ளன. இந்தக் குன்றுகளில் ஒன்று மேல மலை. இதன் மேல் பழியிலி ஈச்சுரம் எனும் சைவ குகைக்கோயிலும் பதினெண் பூமி விண்ணகரம் எனும் வைணவக் குகைக் கோயிலும் விஜயாலய சோழீச்சுரம் எனும் சைவக் கட்டுமானக் கோயில் ஒன்றும் உள்ளன. இவை 9 மற்றும் 10-ம் நூற்றாண்டுகளைச் சார்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

கற்கோயில் - விமானம்
கற்கோயில் - விமானம்

கற்கோயில் - விமானம்

பல்லவர் கால கட்டுமானப் பாணியில் அமைந்துள்ள விமானம், நான்கு அடுக்குகள் கொண்டது. வட்ட வடிவ சிகரம். விமான மாடங்களில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, உமா மகேஸ்வரர் ஆகியோரது சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அர்த்த மண்டப வாயிலில் காணப்படும் வாயிற்காப்போரது சிற்பங்கள் கலையழகு மிக்கவை!

நார்த்தான் மலை ஆலயம்
நார்த்தான் மலை ஆலயம்

நார்த்தான் மலை ஆலயம்

விஜயாலய சோழீச்சுரம் கோயில், தமிழகக் கட்டடக் கலைப் பாணியில் சிறப்பான இடம் பெற்றுள்ளது. வட்ட வடிவிலான ஆலய விமானம், பல்லவர் காலச் சிற்பப் பாணியில் அமைந்துள்ளது. கோயிலின் உட்புற பிராகாரத்தில் பரிவார தேவதைகளுக்கான ஆறு ஒற்றைத் தள ஆலயங்கள் உள்ளன. கோயிலைச் சுற்றி மதில். இது தமிழக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆபரணம் இல்லா அழகிய நந்தி
ஆபரணம் இல்லா அழகிய நந்தி

ஆபரணம் இல்லா அழகிய நந்தி

புதைந்து போயிருந்த பழியிலி ஈச்சுரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த லிங்கம் மற்றும் துவாரபாலகர் சிற்பங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் குகைக் கோயிலுக்கு முன்புறம் உள்ள நந்தி மண்டபம், மேற்கூரை இல்லாமலும், கற்தூண்கள் முழுமை அடையாமலும் காட்சியளிக்கின்றன. இங்குள்ள நந்தி, அலங்காரம் எதுவுமின்றி கம்பீரத்துடன் திகழ்கிறது.

அபூர்வ மிருகங்களின் அணிவகுப்பு
அபூர்வ மிருகங்களின் அணிவகுப்பு

அபூர்வ மிருகங்களின் அணிவகுப்பு

பதினெண் பூமி விண்ணகரம் எனப்படும் வைணவ குகைக் கோயிலின் முன்புறம் உள்ள ஒரு மண்டபம் இது. மேடையின் மூன்று பக்கச் சுவர்களிலும் யானைகள், யாளிகள், காமதேனு ஆகிய சிற்பங்கள். இவற்றுள் ‘ஸ்பிங்கஸ்’ எனப்படும் சிற்பம் குறிப்பிடத்தக்கது. மனித முகமும், சிங்க உடலும் கொண்ட இந்த உருவம், எகிப்திய பாணிச் சிற்பம்.

துவாரபாலகர்
துவாரபாலகர்

துவாரபாலகர்

பழியிலி ஈச்சுரம் குகைக் கோயிலின் முகப்பில் நிற்கும் இந்த துவாரபாலகர் சிற்பத்தில் கிரீடமும், கங்கணங்களும், இடை ஆடையும், உடல் அமைப்பும், கையில் கதாயுதத்தைத் தாங்கி நிற்கும் பாவமும் ரசிக்கத்தக்கவை.

9.12.2007 இதழிலிருந்து...