Published:Updated:

எங்கள் ஆன்மிகம்: புண்ணிய தரிசனம்

ஈசன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஈசன்

வழக்கறிஞர் பாரதி நாராயணன்

எங்கள் ஆன்மிகம்: புண்ணிய தரிசனம்

மயத்தின் அடிவாரத்தில் உள்ள நேபாளம், திபெத் போன்ற நாடுகளிலும் இந்தியாவைப் போன்ற ஆலய அமைப்புகள், வழிபாடுகள், மடாலயங்கள் அமைந்துள்ளன. பிரமாண்ட இமயத்தின் மடியில் நான் கண்டுகளித்த சில இடங்களை இங்கு பகிர்ந்துள்ளேன். இமயத்திலும் நம் சமயத்தின் சாயல்கள் கண்டு வியந்துள்ளேன். நீங்களும் காணுங்கள்!

எங்கள் ஆன்மிகம்: புண்ணிய தரிசனம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நேபாளம், திபெத் பௌத்த இன மக்கள் இது போன்ற தேவதைகளை தங்கள் மடாலயங்களில் நிறுவி வழிபடுகின்றனர். திபெத் தாஷில்ஹுன்போ மடத்தில் உள்ள இந்த பௌத்த தேவதைகள் வாழ்வில் சுபிட்சத்தை அளிப்பவை என்று நம்புகிறார்கள்.

எங்கள் ஆன்மிகம்: புண்ணிய தரிசனம்

திபெத் நாட்டின் பொட்டலா அரண்மனை! போதிசத்துவர் அவலோகிதரின் வாழ்விடமாக இருந்த இது தலாய் லாமாக்களின் இருப்பிடமாக இருந்து வந்தது. பொட்டலா மலையின் மீது அமைந்துள்ள இந்த அரண்மனை உலகப் பாரம்பர்யக் களமாக உள்ளது. `புதிய ஏழு அதிசயங்களில் ஒன்று' என்று போற்றப்படும் இங்கு கலைச்செல்வங்கள் மிகுந்து காணப்படுகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
எங்கள் ஆன்மிகம்: புண்ணிய தரிசனம்

தாங்கள் வளர்க்கும் கால்நடைகள், குறிப்பாக `யாக்' எனும் பனிப்பிரதேச எருதுகள் நலமோடு வாழ நேபாள், திபெத் மக்கள் இறந்துபோன யாக்கின் கொம்புகளை நட்டு வழிபாடு செய்வர். மணி கற்களில் தங்கள் விருப்பங்களை எழுதி இந்த கொம்புகளோடு ஊர் மையத்தில் வைத்துவிடுவர். இப்படி வைப்பதால் அந்த ஊரின் கால்நடைகள் நலமோடு வாழும் என்பது நம்பிக்கை.

எங்கள் ஆன்மிகம்: புண்ணிய தரிசனம்

நேபாளம், திபெத் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் மணி கற்கள் எனப்படும் ஒருவகை கற்களில் `ஓம் மணி பத்மே ஹம்' என்று பொறித்து வைப்பர். இப்படி வைத்து வேண்டினால் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது இம்மக்களின் நம்பிக்கை. இமயத்திலிருந்து கிளம்பும் நதிக்கரை ஓரங்களில் இவ்வகை கற்கள் அதிகம் கிடைக்கின்றன.

எங்கள் ஆன்மிகம்: புண்ணிய தரிசனம்

நேபாள நாட்டின் ஜலநாராயணர் கோயிலின் பிராகாரத்தில் அமைந்துள்ள பஞ்சலிங்க மூர்த்தமிது. இங்கு நாராயணர் ஈசனை வேண்டி வரங்கள் பெற்றார் என்று கூறப்படுகிறது. அன்னை பார்வதி இங்கு வேண்டியே திருமண வரம் பெற்றாள் என்பதால் பெண்கள் விசேஷமாக வழிபடும் ஈசன் இவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்கள் ஆன்மிகம்: புண்ணிய தரிசனம்

நேபாளத்தின் காத்மாண்டு மாவட்டத்தில், பூதநீலகண்டம் என்னும் ஊரில் அமைந்த கோயிலே பூதநீலகண்டர் கோயில். இங்கு திறந்தவெளியில் மூலவர் விஷ்ணு, நீர் நிரம்பிய குளத்தின் மையத்தில் ஆதிசேஷன்மீது யோக நித்திரை கொண்டுள்ளார். பாற்கடல் சயன ஜலநாராயணப் பெருமாள் என்னும் இவரே நேபாளத்தின் பெரிய சிற்ப மூர்த்தமாவார். 5 மீட்டர் நீளம் கொண்ட பூதநீலகண்டரின் சிலை, 13 மீட்டர் நீளமுள்ள நீர் நிரம்பிய குளத்தின் நடுவே அமைந்துள்ளது.

எங்கள் ஆன்மிகம்: புண்ணிய தரிசனம்

நேபாளம் பசுபதிநாத் கோயிலின் அருகே அமைந்துள்ள சக்தி பீடக் கோயில் இது. குஹேஷ்வரி என்ற அம்பிகை எழுந்தருளியுள்ள இந்தக் கோயில் இருக்குமிடத்தில் தான் பராசக்தியின் இரு முழங்கால்கள் விழுந்தனவாம். நெவாரி வஜ்ராயனா பௌத்தர்கள் இந்தக் கோயிலை வஜ்ரவராஹியின் அம்சமான வஜ்ரயோகினியின் கருவறை இருப்பிடமாக வணங்குகிறார்கள்.

எங்கள் ஆன்மிகம்: புண்ணிய தரிசனம்

நேபாளத்தின் பசுபதிநாத் கோயில் அருகே காணப்படும் பிரார்த்தனைக் கொடிகள் இவை. வண்ண வண்ணக் கொடிகளால் தங்கள் பிரார்த்தனைகளை அறிவிப்பது இங்குள்ள மக்களின் வழக்கம். இதில் உள்ள ஒவ்வொரு வண்ணமும் ஒரு வேண்டுதலைக் குறிக்கும்.

எங்கள் ஆன்மிகம்: புண்ணிய தரிசனம்

கெண்டுன் துப்பா (1391-1474) என்ற முதல் தலாய் லாமா திபெத்தில் இந்த தாஷில்ஹுன்போ மடத்தை 1447-ம் ஆண்டு நிறுவினார். இது திபெத்தின் ஷிகாட்சே நகரில் உள்ளது. நகரின் மையத்தில் ஒரு மலையில் அமைந்திருக்கும், இந்த மடத்தில் `அனைத்து அதிர்ஷ்டமும் மகிழ்ச்சியும் இங்குள்ளன' என்று பொறிக்கப்பட்டுள்ளது.