Published:Updated:

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் தரிசனம்; 2 தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி!

திருவண்ணாமலை கோயில்
News
திருவண்ணாமலை கோயில்

திருவண்ணாமலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக மத்திய, மாநில அரசுகளின் சார்பில் அவ்வப்போது தேவைக்கேற்ப சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், திருவண்ணாமலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கும் சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய்த்தொற்றுப் பரவலைத் தொடர்ந்து கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு 10.1.2022 முதல் கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துக் கொள்கிறேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகை தருபவர்கள், கட்டாயமாக 2 தவணை கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதற்கான ஆதாரமாக சான்று அல்லது கைபேசியில் பெறப்பட்ட குறுஞ்செய்தியை காண்பித்தால் மட்டுமே திருக்கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் நோய்த்தொற்றுப் பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்று அதிகளவில் பரவாமல் இருக்க உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.