Published:Updated:

பழநி கும்பாபிஷேகம்: `மின்னொளியில் ஜொலிக்கும் மலைக் கோயில்!'- யாக பூஜை தொடக்கம்

பழநி முருகன் கோயில்

நேற்று வேள்விச்சாலை பூஜைகள் தொடங்கின. இதற்காக 90 யாக சாலை குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பழநி கும்பாபிஷேகம்: `மின்னொளியில் ஜொலிக்கும் மலைக் கோயில்!'- யாக பூஜை தொடக்கம்

நேற்று வேள்விச்சாலை பூஜைகள் தொடங்கின. இதற்காக 90 யாக சாலை குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Published:Updated:
பழநி முருகன் கோயில்
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 27 -ம் தேதி நடக்கிறது. இதற்காகப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 18 -ம் தேதி முதல் பூஜைகள் தொடங்கின.

இதற்கிடையே படிப்பாதை, யானைப்பாதை, கிரிவலப்பாதை, மலைகோயில் மேல் பிராகாரம் பகுதிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள 3500 சிவனடியார்கள் உழவாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின்னொளியில் ஜொலிக்கும் கோயில்
மின்னொளியில் ஜொலிக்கும் கோயில்

இந்நிலையில் இன்று வேள்விச்சாலை பூஜைகள் தொடங்கின. இதற்காக 90 யாக சாலை குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூலவர் அருள் சக்தியைத் திருக்குடங்களில் எழுந்தருளச் செய்தல் நிகழ்வு நடந்தது. இதற்காக பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து திருக்கோயில் அர்ச்சகர் ஸ்தானிகர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். மேளதாளத்துடன் நீர்த்தம் எடுத்துவரப்பட்டுக் கோயிலைச் சுற்றி வலம்வந்தனர்.

பழநி கோயில்
பழநி கோயில்

பிறகு கிழக்குரத வீதி, பெரிய கடை வீதி, காந்தி மார்க்கெட், சந்நிதி வீதி வழியே மலைக் கோயிலுக்குச் சென்றனர். காலை 6 மணி பாத விநாயகர் கோயில் முதல் உட்பிராகார தெய்வங்களின் அருட்சக்தியை அலங்கரிக்கப்பட்ட திருக்குடங்களில் எழுந்தருளச் செய்தல் சூரிய ஒளியில் இருந்து நெருப்பு எடுத்து வேள்விச் சாலைக்குத் தீயிடல் நடைபெற்றன. 

மாலை கருவறை இறைக் குடங்கள் அலங்கரித்தல் நடைபெற்றது. ஆனந்த விநாயகர், கைலாசநாதர், மலைக்கொழுந்தம்மன், மலைக்கொழுந்தீஸ்வரர், வள்ளி தெய்வானை, சண்முகர், சின்ன குமாரர், தண்டாயுதபாணி சுவாமி, தங்க விமானம், ராஜகோபுரம், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் குடங்களில் எழுந்தருளினர். மேலும் மூலஸ்தான கும்பாபிஷேகம்  நடைபெற்றது.

மேலும் முதல் யாக பூஜை 83 யாக வேள்விக் குண்டங்களில் 150 சிவாசார்யர்கள் வேத மந்திரம் முழங்க நடைபெற்றது. கோயில் படிபாதையில் உள்ள சுவாமிகளின் திருமேனியைச் சுற்றி அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்வு நடந்தது. 

மருந்து சாற்றுதல் நிகழ்வில் பங்கேற்ற பழநி எம்எல்ஏ ஐ.செந்தில்குமார்
மருந்து சாற்றுதல் நிகழ்வில் பங்கேற்ற பழநி எம்எல்ஏ ஐ.செந்தில்குமார்

இன்று மலைக்கோயில் ஏறுவதற்காக 72 பேர் அமரக்கூடிய வகையில் புதிதாக 1 கோடி ரூபாய் மதிப்பிலான மின் இழுவை ரயில் பெட்டிகள் வழங்கப்பட்டன. இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பழநி எம்.எல்.ஏ., ஐ.பி.செந்தில்குமார், அறங்காவலர் குழுத்தலைவர் சந்திரமோகன், கோயில் இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய மின் இழுவை ரயில்
புதிய மின் இழுவை ரயில்

27 -ம் தேதிவரை திருவீதிக் குடமுழுக்கு நினைவரங்கத்தில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானத் திட்டம் நடைபெறுகிறது. அதேபோல 28 -ம் தேதிவரை தினந்தோறும் இரவு 7 மணிக்கு நடைபெறும் தங்கதேர் சுவாமி உலா வருதல் நிகழ்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.