Published:Updated:

சென்னை நகரில் புதைந்து கொண்டிருக்கும் பழைமையான ஆலயம்! #Video

வேளச்சேரி வேதநாராயண பெருமாள் கோயில்
வேளச்சேரி வேதநாராயண பெருமாள் கோயில்

கோயிலின் பாதி மண்ணுக்குள் புதைந்துவிட்ட நிலையில் மேல் கட்டுமானங்களில் செடிகளும் கொடிகளும் வளர்ந்து காணப்படுகின்றன.

சென்னை வேளச்சேரி... பரபரப்பும் நெருக்கடியுமான நகர்ப்புறம். இங்குதான் பழைமையான தண்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. வேதங்களால் இறைவன் வழிபாடு செய்யப்பட்ட தலம் என்கின்றன தலபுராணங்கள். இங்குதான் பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கோயில் நகரின் நடுவில் இருக்கும் ஒரு வீதியில் மண்ணுக்குள் புதைந்துகொண்டிருக்கிறது.

வேளச்சேரி வேதநாராயண பெருமாள் கோயில்
வேளச்சேரி வேதநாராயண பெருமாள் கோயில்

வேளச்சேரியின் மையத்தில் உள்ளது தெலுங்கு பிராமின் தெரு. இதன் நடுவே அமைந்துள்ளது ஶ்ரீவாசுதேவ பெருமாள் கோயில். அஸ்பெஸ்டாஸ் கூரையோடு அமைந்திருக்கும் அந்தச் சிறிய அறையில் கோயில்கொண்டிருக்கிறார்கள் புராதன மூர்த்திகள். அதன் பின்புறம் இருக்கிறது மூர்த்திகள் வாசம் செய்த புராதனக் கோயில்.

கோயிலின் பாதி மண்ணுக்குள் புதைந்துவிட்ட நிலையில் மேல் கட்டுமானங்களில் செடிகளும் கொடிகளும் வளர்ந்து காணப்படுகின்றன. அருகிலேயே ஒரு பழைமைவாய்ந்த பெரிய மரம் வேரோடிக் கோயிலின் கட்டுமானத்தைப் பாதித்திருக்கிறது. கோயிலுக்குள் தற்போது செல்வதற்கு வழியில்லை. உள்ளே செல்லும்பாதைகள் குப்பைகள், பாட்டில்கள், மண் மேடுகளால் மறைந்திருகின்றன.

இது இன்று நேற்று நிகழ்ந்த நிகழ்வல்ல. கடந்த 60 ஆண்டுகளாக அப்படியே இருந்திருக்கிறது என்கின்றன இதுகுறித்த பழைய ஆய்வறிக்கை ஒன்று. சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய கே.வி.ராமன் மற்றும் நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய மெட்ராஜ் மாகாணத்தின் வரலாறு (எர்லி ஹிஸ்டரி ஆஃப் சென்னை ரீஜன்) என்னும் நூலில் இந்தக் கோயில் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும் இந்தக் கோயில் குறித்த விரிவான தகவல்களை மேலே உள்ள வீடியோவில் பாருங்கள்.

அடுத்த கட்டுரைக்கு