Published:Updated:

பச்சைப்பட்டில் அத்திரவரதர்... 1 கோடியை நெருங்கும் பக்தர்களின் எண்ணிக்கை!

சி.வெற்றிவேல்
JAYAVEL B

அத்திவரதரை இன்னும் நான்கு நாள்கள் மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால், காஞ்சிபுரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அடுத்த நான்கு நாள்களும் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்திவரதர்
அத்திவரதர்

காஞ்சிபுரம், அத்திவரதர் வைபவத்தின் 43-ம் நாளான இன்று பெருமாள் மஞ்சள் மற்றும் பச்சை நிறப் பட்டாடை அணிந்து பக்தர்களுக்குக் காட்சியருள்கிறார். இதுவரை சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால், 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

அத்திவரதர்
அத்திவரதர்

அத்திவரதரை இன்னும் நான்கு நாள்கள் மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் காஞ்சிபுரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அடுத்த நான்கு நாள்களும் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பொது தரிசனம் செய்ய பக்தர்கள் எட்டிலிருந்து பத்து மணி நேரமும், வி.ஐ.பி டோனர் பாஸ் வைத்திருப்பவர்கள் ஐந்து மணி நேரமும், வி.வி.ஐ.பி பக்தர்கள் இரண்டு மணிநேரமும் காத்திருந்து அத்திவரதரை தரிசித்துச் செல்கிறார்கள்.

அத்திவரதர்
அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருப்பதால் வாகனங்கள் அனைத்தும் வாலாஜாபாத்திலேயே தடுத்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படுகின்றன. வி.வி.ஐ.பி பாஸ் வைத்திருப்பவர்களின் வாகனங்கள் மட்டுமே காஞ்சிபுரத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. சுமார் 12,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், அத்திவரதர் மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வரும் 17-ம் தேதி எழுந்தருள்வதையொட்டி அதிகாரிகள் அந்தக் குளத்தைப் பார்வையிட்டனர். தொட்டியில் தேங்கியிருந்த தண்ணீர் இறைக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது.

அனந்தசரஸ் குளம்
அனந்தசரஸ் குளம்

ஆகஸ்ட் 16 -ம் தேதியோடு தரிசனம் முடிவடையும் நிலையில் 17 -ம் தேதி அத்திவரதர் மீண்டும் தண்ணீரில் வைக்கப்படுவார் என்கின்றனர் கோயில் நிர்வாகத்தினர்.