Published:Updated:

திருமலை திருப்பதி பிரம்மோற்சவம்... பக்தர்கள் கொண்டாட்டம்! #PhotoStory #Tirupathi

திருப்பதி
திருப்பதி ( JAISEKHARQ )

கொரோனா கட்டுப்பாடுகளால் உற்சவங்கள் எதுவும் வழக்கம்போல் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது இந்த ஒரு நாள் பிரம்மோற்சவம் பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே திருப்பதிக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

ஆண்டுதோறும் திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் பத்துநாள்கள் உற்சவமாக பிரம்மோற்சவம் நடைபெறுவதுவழக்கம். அதேபோன்று ரத சப்தமியை முன்னிட்டு ஒரு நாள் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். மலையப்ப சுவாமி பிரம்மோற்சவம் போன்றுஏழு வாகனங்களிலும் ஒரே நாளில் எழுந்தருள்வார். ஒரே நாளில் நடைபெறும் பல வாகனங்களில் பெருமாளை தரிசிக்க முடியும் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

திருப்பதி ஏழுமலையான்
திருப்பதி ஏழுமலையான்

இன்று ரதசப்தமி தினம் என்பதால் காலை 5 மணி முதல் திருமலை, வாகன சேவையால் களைகட்டத்தொடங்கியது. 5.30 மணிக்கு முதலாவதாக சூரியபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். அதன்பின் சின்ன சேஷ வாகனம், கருடவாகனம், ஹனுமந்த வாகனம், சக்கர ஸ்நானம், கல்ப விருட்ச வாகனம், சந்திர பிரபை வாகனம் என வரிசையாக வாகன சேவை நடைபெற்றுவருகிறது.

கொரோனா கட்டுப்பாடுகளால் உற்சவங்கள் எதுவும் வழக்கம்போல் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது இந்த ஒரு நாள் பிரம்மோற்சவம் பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே திருப்பதிக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துவருகிறார்கள். இன்று ஒரு நாள் பிரம்மோற்சவத்தை ஒட்டி மேலும் பல ஆயிரம் பக்தர்கள் திருமலையில் குவிந்திருக்கிறார்கள்.

திருமலையில் இதுவரை நடைபெற்ற சேவைகளின் தரிசனம்  

இந்த நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சேர்மன் சுப்பாரெட்டி மற்றும் ஆலய நிர்வாக அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பக்தர்களுக்காக விரிவான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு