சர்ப்பங்கள் தாங்கள் பாவ விமோசனம் பெறும் பொருட்டு, ஆல மர விழுதை நாராகக் கிழித்து, அகத்திப் பூ மாலை தொடுத்து இறைவனுக்குச் சாற்றி சிவனருள் பெற்ற தலம்.

இன்று வரை இத்தலத்தில் எவரையும் பாம்புகள் தீண்டியதில்லை; இங்கே ஆலம் விழுதுகள் தரையைத் தொடுவது இல்லை; அகத்தி பூப்பதில்லை எனும் நம்பிகை மொழிகள் வழக்கிலுள்ள தலம்.

ஜாதகத்தில் கர்மவினைகளுக்கு ஏற்ப தோஷங்களைத் தரும் கிரகங்களில் ராகு-கேதுவுக்கு முக்கியப் பங்கு உண்டு. நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது கிரகங்களை வழிபடவும் உரிய பரிகாரங்கள் செய்யவும் அந்தந்த கிரகங்களுக்கு உரிய தலங்களைத் தனித்தனியே தரிசிக்கச் செல்வார்கள் பக்தர்கள். அவ்வகையில் ராகுவும் கேதுவும் ஒருசேர ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம்.

இவ்வளவு மகத்துவங்கள் மிக்க தலம் எது தெரியுமா?

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே அமைந்துள்ள திருப்பாம்புரம் தலம்தான் அது. நம் வாழ்வில் நல்ல திருப்பங்களை அருளக்கூடிய இத்தலத்தில் அழகுற அமைந்திருக்கும் அருள்மிகு வண்டுசேர் குழலி சமேத அருள்மிகு பாம்புரநாதர் திருக் கோயிலில்தான் ராகுவும் கேதுவும் ஒருசேர அருள்பாலிக்கிறார்கள்.இறைவனுக்கு சேஷபுரீஸ்வரர் என்ற திருப் பெயரும் உண்டு.

காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 59-வது சிவத்தலம் இந்தத் திருப்பாம்புரம். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்,சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்றது; சுமார் 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்தது.

ஆதிசேஷனும் இங்கே வந்து வழிபட்டுள் ளார். அவர் மட்டுமல்ல, அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்களும் வழிபட்ட தலமிது என்கின்றன ஞானநூல்கள். ஆகவே, சர்ப்ப தோஷங்களை நீக்கியருளும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது, திருப் பாம்புரம்.

அதுசரி, ஆதிசேஷன் இத்தலத்தைத் தேடி வருவதற்கான காரணம் என்ன? காரணம், நம்மில் பெரும்பாலானோர் அறிந்த திருக்கதை தான்!

ஆதிசேஷனும் வாயு பகவானும்!

ஒருமுறை, வாயு பகவானுக்கும் ஆதி சேஷனுக்கும் இடையில், ‘தங்களில் யார் வலிமை உள்ளவன்?’ என்ற போட்டி ஏற்பட்டது. வாயு பகவான் மலைகளை எல்லாம் தம் வலிமையால் புரட்டி வீச முற்பட்டார். அப்போது வாயு பகவான் மலைகளை பெயர்க்க முடி யாதபடி தம் வலிமையால் ஆதிசேஷன் தடுத்து நின்றார்.

இதனால் இருவருக்கும் பெரும் போர் மூண்டது. இருவருமே சம பலம் காட்டி நின்றதால், வெற்றியடைய முடியாத வாயு பகவான், அனைத்து உயிர்களுக்கும் வழங்கும் பிராண வாயுவை நிறுத்திவிட, உயிர்கள் அனைத்தும் சோர்வடைந்தன.

எனவே, இந்திரன் உள்ளிட்ட தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கி நின்றார். (மேரு மலையை மையமாக்கி இருவருக்கும் போட்டி நடந்ததாகவும் வாயுபகவான் விசையுடன் காற்றை வீசச் செய்து மேருவின் சிகரங்கள் சிலவற்றை சிதறடித்தார் என்றும் ஒரு திருக்கதை சொல்லப்படுவது உண்டு).

தானே வெற்றி பெற்றதாக வாயு பகவான் உற்சாக மிகுதியில் மலைகளைப் புரட்டி வீசினார். அதனால் கோபமுற்ற ஈசன், வாயு பகவானையும் ஆதிசேஷனையும் பேயுருவாக மாறும்படி சபித்தார். இருவரும் தங்கள் குற்றம் உணர்ந்து வணங்கி, தங்களைப் பொறுத்தருள வேண்டினர்.

அவர்களுக்கு விமோசனத்துகான வழிகாட்டலை வழங்க திருவுளம் கொண்டார் சிவபெருமான். வாயு பகவான் வைகை நதிக்கு வடக்கிலும், மதுரைக்குக் கிழக்கிலும் பூஜை செய்து விமோசனம் பெறலாம் எனவும், ஆதிசேஷன் பாம்புரத்தில் தம்மை 12 ஆண்டுகள் பூஜித்து விமோசனம் பெறலாம் என்றும் சிவபெருமான் அருள்பாலித்தார். அதன்படி, ஆதிசேஷன் திருப்பாம்புரத்துக்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி, வழிபட்டு விமோசனம் பெற்றாராம்.

ராகு-கேது அருள் பெற்ற கதை!

ராகுவும் கேதுவும் ஒருசேர அருள்பாலிக்கும் தலம் என்று பார்த்தோம் அல்லவா? அதற்கான தாத்பரியம் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

ஒரு முறை சிவவழிபாடு செய்து கொண் டிருந்தார் பிள்ளையார் பெருமான். பூக்களால் அர்ச்சித்தும், மந்திரங்களால் தொழு தும் பிள்ளையார் தம் தந்தையை வழிபட்டுக் கொண்டிருக்க, சிவனாரின் கழுத்திலிருந்த சர்ப்பமோ, அவர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வம் கொண்டது.

அதன் எண்ணத்தைச் சிவம் அறியாமல் போகுமா? சர்ப்பத்தின் கர்வத்தைப் போக்க எண்ணினார். ‘நாக இனம் முழுதும் தங்கள் சக்தியை இழக்கும்!’ என்று சாபமிட்டார்.

இதையறிந்த நாகக்கூட்டமும், பாம்புக் கிரகங்களான ராகுவும் கேதுவும் ஈசனைச் சரணடைந்து, பிழையைப் பொறுத்தருள வேண்டினர்.

‘‘நீங்கள் அனைவரும் பாம்புரத்தில் உள்ள என்னை சிவ ராத்திரியில் பூஜித்து விமோசனம் பெறலாம்!’’ என்று அவர்களுக்கு வழிகாட்டினார் சிவப்பரம்பொருள். அவ்வாறே மகா சிவராத்திரி நாளில் திருப்பாம்புரத்தை அடைந்த ராகு-கேது முதலான நாகங்கள், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புர நாதரை வணங்கி வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.

நாக இனம் மட்டுமா? பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், அக்னி, கங்கை, சந்திரன், சூரியன், தட்சன், சுனீதன் என்னும் வடநாட்டு மன்னன், கோச்செங்கட்சோழன் ஆகியோரும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டு அருள்பெற்றிருக்கிறார்கள்.

வட நாட்டு மன்னன் சுனீதனுக்கு வலிப்பு நோய் வந்து வாட்டியது. வசிஷ்ட முனிவரின் கூற்றுப்படி (மாயவரம்) மயிலாடுதுறை காவிரியில் நீராடி, பின்னர் பாம்புரம் வந்து தீர்த்தத்தில் மூழ்கிக் கரையேற அவன் நோய் நீங்கியது. அதனால் இந்தத் தலத்தில் அந்த மன்னன் ஓராண்டு தங்கி, நிருத்த மண்டபம், அம்மன் கோயில் திருப்பணி, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றைக் கட்டினான் என்று தகவல் உண்டு.

அதேபோல் கோச்செங்கட் சோழன் முற்பிறவியில் செய்த வினையால், வெண்குஷ்டம் என்னும் நோய் பீடித்து உடல் வெண்ணிறமாகித் தளர்ந்தார். இவரும் பெரியோர்களின் அறிவுரைப் படி திருப்பாம்புரம் வந்து தீர்த்தத்தில் மூழ்கி, ஈசனை வணங்கி பூஜை செய்து, நோய் நீங்கப் பெற்றாராம்.

அதனால் மகிழ்ந்து மூன்று ஆண் டுகள் இங்கே தங்கியிருந்து உயர்ந்த கோபுரங்கள், மண்டபங்கள், படித் துறைகள், நந்தவனம், கோயில் வீதி என நற்காரியங்கள் செய்தாராம்.

அருள்மிகு திருப்பாம்புரநாதர் திருக்கோயில் மிக அழகுற கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்று நிலைகளையுடைய ராஜ கோபுரம் வாயில் திகழ, அதன் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் உள்ளது.

திருக்கோயில் தரிசனம்...

கோயிலுக்குள் நுழைந்தால் கொடிமரத்து விநாயகரை தரிசிக்கலாம். தொடர்ந்து பலிபீடம்-நந்தியெம்பெருமான். இறைவனின் சந்நிதி யானது மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என மூன்று பகுதிகளைக் கொண்டு திகழ்கிறது. மகா மண்டபத்தின் தென்புறம் சோமாஸ்கந்த சந்நிதி. இதே மண்டபத்தில் நடராஜப் பெருமானையும் தரிசிக்கலாம்.

கருவறையில் பாம்புரேஸ்வரர் லிங்க வடிவமாக அருள்கிறார். ஆதிசேஷன் (உற்சவர்) ஈசனைத் தொழுத வண்ணம் காட்சி தருகிறார்.

ஸ்வாமி சந்நிதிக்கு வட புறமாக அமைந் துள்ளது அருள்மிகு வண்டார்குழலி அம்பாள் சந்நிதி. கையில் ருத்திராட்ச மாலை துலங்க, அபய-வரத ஹஸ்தம் காட்டியபடி அருள்கிறாள் இந்த அம்பிகை. திரு முகத்தில் துலங்கும் சாந்தமும் மலர்ச்சியும் அன்னையின் அறக் கருணைக்குச் சான்று.

ஈசான மூலையில் தனிச் சந்நிதியில் ராகுவும் கேதுவும் ஓர்உடலாகி சிவனை நெஞ்சில் இருத்தி யடி அருள்கிறார்கள். ராகு-கேது தோஷம், நாக தோஷங்கள் நீங்க இந்தச் சந்நிதியில் சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன.

இந்தத் திருக்கோயிலின் பிரேம்குமார் குருக்களிடம் பேசினோம்.

“இத்தலத்தில் ராகுவும், கேதுவும் ஏக சரீரமாக இருந்து இறைவனை பூஜித்து அருள் பெற்றதால் ராகு - கேதுத் தலம் என்றழைக்கப்படுகிறது. இதற்கு தென்காளகஸ்தி என்ற பெயரும் உண்டு.

இத்தலத்தை வழிபடுவதால் திருக்குடந்தை, திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம் மற்றும் காளகஸ்தி ஆகிய ஐந்து தலங்களை வழிபட்ட பலன் உண்டு.

இந்த ஆலயத்தில் வழிபட்டால் ராகு, கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், காள சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், பிதூர் தோஷம் முதலான சகல தோஷங்களும் விலகி சந்தோசமான வாழ்வு அமையும். திருமணத் தடை நீங்கும்.

மேலும் பாம்பு புற்றை இடித்து வீடு கட்டியவர்கள், கனவில் சர்ப்பத்தைக் கண்டு அதனால் மனச் சஞ்சலத்துக்கு ஆளாகும் அன்பர்கள் ஆகியோர் அவசியம் வந்து வழிபட்டு நிவாரணம் பெறலாம்.

வரும் ஆவணி மாதம் 16-ம் நாள் (1.9.2020 ) செவ்வாய்க் கிழமை மதியம் 2:16 மணிக்கு (20:24 நாழிகை) ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும்; கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சுக ராசிக்கும் இடம் பெயர்கின்றனர்.

இந்தப் பெயர்ச்சியை ஒட்டி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகார பூஜைகள் செய்து வாழ்வில் வளம் பெறலாம்’’ என்றார்.

சர்ப்ப விஷத்தைக் காட்டிலும் கொடும் பாதிப்பைக் கொடுக்கும் பெரும்பிணித் தொற்று விரைவில் தணிந்து உலகம் நலமுற திருப்பாம்புர நாதரை நாமும் மனதார வணங்கிப் பிரார்த்திப்போம். வாய்ப்பு கூடிவரும்போது தவறாமல் திருப்பாம்புரம் சென்று வழிபட்டு, வாழ்வில் நல்ல திருப்பங்கள் நிகழ வரம்வாங்கி வருவோம்.

ராகு-கேது பரிகார வழிபாடு

ராகு காலத்தில் ராகு-கேது அருளும் சந்நிதியில் அபிஷேகம்- அர்ச்சனை செய்வோர் தோஷங்கள் விலகி நலம் பெறுகின்றனர். ராகு- கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு எழுந்தருளி இருக்கும் சுவாமி, அம்பாள் மற்றும் ராகு- கேது பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

ராகு- கேதுவுக்கு நீலம் மற்றும் பல வண்ண ஆடையைச் சாற்ற வேண்டும். சங்குபுஷ்பம், மல்லிகை, நீல மந்தாரை, இலுப்பைப்பூ, செவ்வரளி, நாகலிங்கப்பூ ஆகிய மலர்கள் ராகு- கேது பகவானுக்குப் பிடித்தவை. அர்ச்சனை முடிந்த பின் உளுத்தம் பருப்புப் பொடி, மற்றும் கொள்ளுப் பொடி, அன்னம் நிவேதனம் செய்து, தானம் செய்ய வேண்டும்.

பக்தர்கள் கவனத்துக்கு...

தலம்: திருப்பாம்புரம்

ஸ்வாமி: அருள்மிகு திருப்பாம்புரநாதர்

அம்பாள்: அருள்மிகு வண்டுசேர் குழலி

விருட்சம்: வன்னி மரம்

தீர்த்தம்: ஆதிசேஷ தீர்த்தம்

தலச் சிறப்பு: ராகு-கேது ஒரே சந்நிதியில் அருளும் தலம். நாகங்கள் வழிபட்டு அருள்பெற்ற ஆலயம். சர்ப்பதோஷங்களை நீக்கும் தலம் இது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் இத்தலத்தைப் பாடிப் போற்றியுள்ளனர். மகாசிவராத்திரி விழாவும், ராகு- கேதுப் பெயர்ச்சி விழாவும், மாசி மகமும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சிவராத்திரி இரவு மூன்றாம் சாமத்தில் ஆதிசேஷன் வீதியுலா புறப்பாடு சிறப்பு அம்சமாகும்.

எப்படிச் செல்வது?: கும்பகோணம் - காரைக்கால் பேரூந்து மார்க்கத்தில், கற்கத்தி எனும் ஊரில் இறங்கி, தெற்கே 3. கி.மீ. தொலைவு பயணித்தால் திருப்பாம்புரத்தை அடையலாம். மயிலாடுதுறை - திருவாரூர் ரயில் மார்க்கத்தில் பேரளம் சந்திப்பில் இறங்கினால், அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இவ்வாலயத்திற்கு மினி பஸ், ஆட்டோ மூலம் செல்லலாம்.