Published:Updated:

பஞ்சமுக வாத்தியம் திருவாரூர் ஸ்ரீ தியாகராஜருக்கு இசைக்கப்படுவது ஏன்?

மறந்துபோன இசைக்கருவிகளில் ஒன்றாகிவிட்ட பஞ்சமுக வாத்தியம்.

பஞ்சமுக வாத்தியம்
பஞ்சமுக வாத்தியம்

மறந்துபோன இசைக்கருவிகளில் ஒன்றாகிவிட்ட பஞ்சமுக வாத்தியம் இன்றைக்கும் திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் கோயிலில் தினந்தோறும் இசைக்கப்படுவது பெருமைக்குரியதாகும்.

 திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் கோயில்
திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் கோயில்

பிறப்பிலிருந்து இறப்பு வரை தமிழரின் வாழ்வியல் முறைமை அனைத்துமே ஏதேனும் ஒரு வகையில் இசையுடன் பிணைந்தே இருந்து வந்துள்ளது. பல்வேறு வகை இசைக்கருவிகளை தமிழர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். தோல், நரம்பு, காற்று என அவற்றின் இயக்க முறைமை பொறுத்து வகைப்படுத்துவர். இதில் பஞ்சக குடமுழா அல்லது பஞ்சமுக வாத்தியம் என்பது ஐந்து முகங்களைக் கொண்ட ஒருவகை தோல் இசைக் கருவியாகும். இதன் அடிப்பாகம் தகுந்த சீரிசை உருவாக்கும் வண்ணம் தாமிரம் மற்றும் வெண்கலம் கலந்த கலவையால் உருவாக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு முகமும் வெவ்வேறு ஒலியெழுப்புவது இதன் தனிச் சிறப்பாகும். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு ஒரு பக்கம் திறந்த ஆர்கன் குழாய் போன்று செயல்படும். கழுத்தின் உயரத்துக்கேற்ப சப்தத்தின் அதிர்வெண் வேறுபடும்.

கோயில்களில் சிவபெருமானின் நிருத்த சிற்பங்களுக்கு கீழ் அமர்ந்திருக்கும் பூத கணங்களில் ஒன்று குடமுழா வாசித்துக் கொண்டிருக்கும். ஐந்திணைகளில் மருத நிலத்துக்குரிய கருப்பொருளாக குடமுழா உள்ளது. நிருத்தம் என்பது ஒரு வகை நடனம் பஞ்சமுக வாத்திய கருவி பற்றிய குறிப்புகள் சங்ககாலம் தொட்டே இலக்கியங்களில் காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில் மாதவியின் நடனத்தின்போது யாழ், குடமுழா, மத்தளம் ஆகியவை இசைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

பஞ்சமுக வாத்தியம்
பஞ்சமுக வாத்தியம்

இத்தகைய சிறப்புமிக்க பஞ்சமுக வாத்தியகருவியை சிவபெருமான் வாசிக்கும் சிற்பம் திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் கோயிலில் காணப்படுகிறது. இக்கோயிலில் இன்றைக்கும் தினமும் பஞ்சமுக வாத்தியம் இசைக்கப்படுகிறது.

ஸ்ரீ தியாகராஜ பெருமானே இவ்விசைக்கருவியை வாசிப்பதாக ஐதிகம்.