Published:Updated:

பசுபதீஸ்வரரை சூரியன் வழிபடும் அற்புதக்காட்சி; பொன்னொளியில் ஜொலித்த லிங்கம்... பக்தர்கள் தரிசனம்!

பசுபதீஸ்வரர் கோவில்

சிவாலயங்களில் சூரிய பகவான் தன் ஒளிக்கிரணங்களால் ஈசனை வழிபடும் தலங்கள் மிகவும் சிறப்பு மிக்கவை. அப்படி சூரியன் வழிபாடு செய்யும் ஒரு கோயில் பசுபதீஸ்வரர் திருக்கோயில்.

பசுபதீஸ்வரரை சூரியன் வழிபடும் அற்புதக்காட்சி; பொன்னொளியில் ஜொலித்த லிங்கம்... பக்தர்கள் தரிசனம்!

சிவாலயங்களில் சூரிய பகவான் தன் ஒளிக்கிரணங்களால் ஈசனை வழிபடும் தலங்கள் மிகவும் சிறப்பு மிக்கவை. அப்படி சூரியன் வழிபாடு செய்யும் ஒரு கோயில் பசுபதீஸ்வரர் திருக்கோயில்.

Published:Updated:
பசுபதீஸ்வரர் கோவில்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட சௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 5-ம் தேதி முதல் 10-ம் தேதிவரை லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும்.
சூரிய ஒளி
சூரிய ஒளி

இந்த ஆண்டும் அந்த அற்புத நிகழ்வு நடந்து வருகிறது. பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி பட்டு சிவலிங்கம் பொன்னார் மேனியாக ஜொலிக்கும் பேரழகை தரிசனம் செய்ய ஏராளமான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ் மாதத்தில் சித்திரை மாதம் தொடக்கம் என்பதால் இம்மாதத்தில் சூரியபகவான் ஈசனை வழிபடுவதாக ஐதிகம். அதன்படி இன்று காலை சூரிய உதயத்தின்போது ஒளிக்கதிரானது நேரிடையாக லிங்கத்தின் மீது பட்டு ஒளி பரவத்தொடங்கியது. சற்று நேரத்துக்கெல்லாம் சிவலிங்கம் பொன்னொளியில் ஒளிர்ந்தது.

ஈசன் மீது விழும் சூரிய ஒளிக்கதிர்
ஈசன் மீது விழும் சூரிய ஒளிக்கதிர்

இந்தச் சிலிர்ப்பூட்டும் காட்சியை ஏராளமான பொதுமக்கள் தரிசித்து மகிழ்ந்தனர். வருடத்தில் இரண்டு மாதங்களில் இந்த நிகழ்வு நடைபெறும். அதனால் இதனை தரிசனம் செய்ய சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிகழ்வு சித்திரை 10-ம் தேதிவரை நீடிக்கும் என்று கோயில் வழிபாட்டுக் குழுவினர் தெரிவித்தனர். அப்போது சூரிய ஒளியோடு இறைவனைத் தரிசிப்பது அபூர்வமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கும் என்றும் ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக இருப்பவர்கள் இந்த நாள்களில் வந்து இந்த தரிசனத்தைக் கண்டால் அவர்களுக்கு தோஷம் நீங்கும் என்றும் தெரிவித்தனர்.

ஈசனை வழிபடும் பக்தர்கள்
ஈசனை வழிபடும் பக்தர்கள்

இத்தலத்தில் சூரிய பகவானே ஈசனை வலம் வந்து ஈசனை வழிபடுவதாக ஐதிகம். இத்தகைய மகிமை வாய்ந்த தலத்தில் இந்த அற்புத நிகழ்வு இன்று நடைபெற்றது. காலை 6:10 மணிக்கு சூரியன் உதயமானது. அதிலிருந்து ஒளிக்கதிர் நேரடியாக லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது. சுமார் 15 நிமிடம் வரை இந்த தரிசனம் நீடித்தது. இந்த அரிய காட்சியை பக்தர்கள் கண் குளிரக் கண்டு வழிபட்டுச் சென்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism