Published:Updated:

அற்புதங்கள் நிகழ்த்தும் செரியலூர் கரம்பக்காடு அன்னை முத்துமாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம்!

முத்துமாரியம்மன்

நீண்ட காலத்துக்குப் பிறகு தற்போது, பெரும்பொருள் செலவில் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருப்பணிகள் நடைபெற்றுக் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

அற்புதங்கள் நிகழ்த்தும் செரியலூர் கரம்பக்காடு அன்னை முத்துமாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம்!

நீண்ட காலத்துக்குப் பிறகு தற்போது, பெரும்பொருள் செலவில் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருப்பணிகள் நடைபெற்றுக் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

Published:Updated:
முத்துமாரியம்மன்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீரமங்கலம் அருகில் செரியலூர் கரம்பக்காடு கிராமத்தில் முத்துமாரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

ஏறத்தாழ 300 வருடங்களுக்கு முன்பு இக்கோயில் சிறிய கீற்றுக் கொட்டகையாக இருந்தபோது உருவமற்ற கல்லாக அம்மன் சுயம்புவாக எழுந்தருளினாள். அப்போது அங்கு வசித்த பூர்விக குடிகள் 5 குழுவினருக்கு என ஒவ்வொரு பகுதிக்கும் ஐந்து கரைகள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் பூசித்து வழிபடத் திருவிழா கொண்டாடப்பட்டது. அநேக அற்புதங்களை இந்த அன்னை நடத்தி அருளியதால் இந்த வட்டாரத்தில் இந்த ஆலயம் பிரசித்தமானது.

முத்துமாரி அம்மன் திருக்கோயில்
முத்துமாரி அம்மன் திருக்கோயில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

150 வருடங்களுக்கு முன்பு கீற்றுக் கொட்டகையாக இருந்த கோயில் பின் கருவறைக் கோயிலாகவும், ஓடுகள் வேயப்பட்ட முன்மண்டபம் கொண்ட விரிவான கோயிலாகவும் மாற்றப்பட்டது. இந்த ஊர் மக்கள் மட்டுமின்றி இந்த ஊரைப் பூர்விகமாகக் கொண்டு புலம் பெயர்ந்து சென்றவர்களுக்கும் இந்த அன்னையே குலதெய்வமாகவும் இருந்து வருகிறாள்.

நீண்ட காலத்துக்குப் பிறகு தற்போது, பெரும்பொருள் செலவில் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஸ்ரீகணபதி, ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீகருப்பர் உள்ளிட்ட சந்நிதிகளும் இங்கு எழுப்பட்டுள்ளன. சுபகிருது வருடம், வைகாசி மாத வியாழக்கிழமை 26-ம் நாள் சுக்லபட்ச தசமி திதி, ஹஸ்த நட்சத்திரம், சித்தயோகம் கூடிய வேளையில் (9-6-2022) காலை 9 - 10.30 மணிக்குள் இக்கோயிலின் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேக விழா

வரும் 6-ம் தேதி கணேச பூஜையுடன் தொடங்கும் இந்த விழா 9-ம் தேதி வரை நடைபெறுகின்றது. முத்துமாரியம்மன் திருக்கோயில் திருப்பணி குழு தலைவர் குழ.சண்முகநாதன் தலைமையில் ஊர் மக்களும் அன்பர்களும் இணைந்து இந்த விழாவை நடத்தி வருகின்றனர். முத்துமாரியம்மனின் அருளைப் பெற அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறார்கள்.

பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி சாலையில் கீரமங்கலம் பேரூராட்சியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism