Published:Updated:

திருப்பதியில் பிப் 1-ம் தேதி ஒருநாள் பிரமோற்சவம்! -ரத சப்தமிக்கு விரிவான ஏற்பாடுகள் தயார்#Tirupati

திருப்பதி
திருப்பதி

திருமலையின் 4 மாட வீதிகளிலும் பந்தல் போடப்பட்டு பக்தர்களின் வசதிக்காக நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

திருமலை திருப்பதியில் பிரமோற்சவ விழா புரட்டாசி மாதத்தில் 9 நாள்கள் கோலாகலமாக நடைபெறும். விழாவின்போது ஒவ்வொருநாளும் சேஷ வாகனம், கருட வாகனம், சூரிய, சந்திர வாகனங்களில் வேங்கடேசப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிப்பார்.

Tirupaty
Tirupaty

அதில் எல்லோராலும் கலந்துகொள்ள முடியாது. அப்படியே கலந்துகொண்டாலும் ஏழு நாள்கள் திருமலையில் தங்கி சுவாமி தரிசனம் செய்வது கடினம்.

ஆனால், அந்தக் குறையைப் போக்கும்விதமாக ரதசப்தமியன்று வேங்கடேசப்பெருமாள் 7 வாகனங்களில் திருமலையின் நான்கு மாட வீதிகளில் வலம் வருகிறார்.

Tirupaty
Tirupaty

கிடைப்பதற்கரிய இந்த வாய்ப்பு வருகிற பிப்ரவரி 1-ம் தேதி சனிக்கிழமை பக்தர்களுக்குக் கிடைக்க இருக்கிறது. 7 நாள் வைபவத்தை ஒரே நாளில் தரிசித்து மகிழலாம்.

இதற்காகத் திருமலையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருமலையின் 4 மாட வீதிகளிலும் பந்தல் போடப்பட்டு பக்தர்களின் வசதிக்காக நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

Tirupaty
Tirupaty

ரதசப்தமி நாளில் வேங்கடேசப் பெருமாளின் வீதி உலா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இதில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான மக்கள் வருகை தர இருக்கின்றனர். இதற்குரிய ஏற்பாடுகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.

பின் செல்ல