Published:Updated:

நவம்பர் 16-ல் தொடங்குகிறது சபரிமலை மண்டலபூஜை!

நவம்பர் 17-ம் தேதி கார்த்திகை மாதம் துவங்குவதையொட்டி சபரிமலை மணிகண்டன் சந்நிதானபீடத்தில் மண்டலபூஜை ஆரம்பமாகிறது.

சபரிமலை
சபரிமலை

கார்த்திகை மாதம் என்றதும் நம் அனைவரின் நினைவுக்கு வருவது சபரிமலையும் அங்கு திரளாகக் குவியும் மாலைபோடும் பக்தர்களுமே.

சபரிமலை
சபரிமலை

ஒவ்வோர் ஆண்டும் இங்கு கார்த்திகை மாதத் தொடக்கத்தில் மண்டலபூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மண்டலபூஜை வருகிற நவம்பர் 16-ம் தேதியன்று தொடங்குகிறது. நவம்பர் 17-ம் தேதி கார்த்திகை மாதம் துவங்குவதையொட்டி மலையில் மணிகண்டன் சந்நிதானத்தில் மண்டலபூஜை ஆரம்பமாகிறது.

அதிகரிக்கும் காற்றுமாசு - வாரணாசியில் சாமி சிலைகளுக்கும் முகக் கவசம்!

ஒரு மண்டலம் என்பது 48 நாள்கள். குருஸ்வாமியிடம் மாலை அணிந்துகொண்டு, ஒவ்வொரு நாளும் கடுமையான அன்ன நீராகார விரதம் இருந்து, நிதமும் ஐயப்பன் திருநாமம் உச்சரித்து, உடலும் உள்ளமும் தூய்மை பெறுவதற்காக வேண்டித் தவமிருந்து அதன் பயனாய் சபரிமலை பதினெட்டாம்படி ஏறி சரண கோஷத்துடன் ஐயப்பன் திருவடி தரிசனம் பெற்றுத் திரும்புவார்கள், பக்தர்கள்.

சபரிமலை
சபரிமலை
அதிகரிக்கும் காற்றுமாசு - வாரணாசியில் சாமி சிலைகளுக்கும் முகக் கவசம்!

சபரிபீட மண்டலபூஜையைத் தொடர்ந்து தர்மசாஸ்தா, ஆரியங்காவு, பந்தளம், அச்சன்கோயில் உள்ளிட்ட கேரளத்தின் முக்கிய ஐயப்ப தலங்களிலும், கேரளம் தவிர பல்வேறு இடங்களில் உள்ள ஐயப்பன் திருக்கோயில்களிலும் அன்றைய தினம் மண்டலபூஜைகள் தொடங்குகின்றன.

சபரிமலை மண்டல பூஜை காலத்தின் தினசரி காலபூஜை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மண்டலபூஜை காலம் முழுவதும் அதிகாலை 3 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படும். நிர்மால்ய தரிசனம், நெய்யபிஷேகம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சபூஜை முடிந்து நடை சாத்தப்படும். மீண்டும் மாலையில் நடை திறக்கப்பட்டு புஷ்பாபிஷேகமும் அத்தாழ பூஜையும் முடிந்து ஹரிவராசனம் பாடி இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும்.

சபரிமலை
சபரிமலை

எளியோர்க்கு எளியவனாய் அடைவோர்க்கு அதிபனாய் சகலமும் நிகழ்த்துகிற சபரிகிரி வாசனை சரணம் ஓங்கப் போற்றுவோம்!