Published:Updated:

கடவுளர்கள் எழுந்தருளும் சப்பர வீதி உலா பாதுகாப்பானதா?!

சப்பர வீதி உலா விபத்து

தேர் வடிவமைக்க முடியாத சிறிய கோயில்களிலும் மடங்களிலும் சுவாமி உலா வர தற்காலிக சப்பரங்கள் அமைக்கப்படும். சப்பரம், தெய்வத் திருமேனி தாங்கி என்றும் சொல்லப்படுகிறது. பாரம்பர்யமான சப்பரங்கள், பல்லக்கு போன்றே இருக்கும்.

கடவுளர்கள் எழுந்தருளும் சப்பர வீதி உலா பாதுகாப்பானதா?!

தேர் வடிவமைக்க முடியாத சிறிய கோயில்களிலும் மடங்களிலும் சுவாமி உலா வர தற்காலிக சப்பரங்கள் அமைக்கப்படும். சப்பரம், தெய்வத் திருமேனி தாங்கி என்றும் சொல்லப்படுகிறது. பாரம்பர்யமான சப்பரங்கள், பல்லக்கு போன்றே இருக்கும்.

Published:Updated:
சப்பர வீதி உலா விபத்து
திருவிழாக்கள் இல்லாமல் எந்த ஆலய வழிபாடுகளும் நிறைவு பெறுவதில்லை. ஆண்டுக்கு ஒருமுறையேனும் ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமான விழாக்கள் நடைபெறுவது நம் தொன்றுதொட்ட வழக்கம். விழாக்கள் என்றாலே வீதி உலா செல்வதும் முக்கியமானது.

கோயிலுக்குள் வந்து வழிபட இயலாத மக்கள் குறிப்பாக முதியவர்கள், நோயாளிகள், நிறைமாத கர்ப்பிணிகள் என சகலரும் தங்கள் வீட்டின் வாசலில் நின்றே தெய்வ தரிசனத்தைக் காணவென்றே வீதி உலா புறப்பாடுகள் தோன்றின.

ஆழித்தேர்
ஆழித்தேர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு அரசன் தேரில் சென்று தன் குடிமக்களைக் காண்பது போல, தெய்வங்களும் தேரிலோ, சப்பரத்திலோ, வாகனங்களிலோ, யானை முதலான ஜீவராசிகள் மீதோ, பல்லக்கிலோ, தெப்பத்திலோ சென்று பக்தர்களைக் காண்பதும் வழிபாட்டில் கடைப்பிடிக்கப்படும் ஒரு வழக்கம். இதில் தேர் என்பது பிரமாண்டமான அமைப்பு. வசதி உள்ள கோயில்களில் மட்டுமே தேர் செய்யப்பட்டு, அந்த தேரில் கடவுளர் வீதி உலா வருவது வழக்கம். அதனாலேயே தேர் 'நகரும் கோயில்' என்று போற்றப்படுகிறது. நம் கலாசாரத்தில் தேர் எத்தனை முக்கியமானது என்பதை பல இலக்கியங்களும் புராணங்களும் சொல்கின்றன. தேரின் அழகால் கவரப்பட்டு நாளடைவில் தேர் வடிவில் ஆலய விமானங்களும் கருவறைகளும் கூட உருவாகின. வழிபாட்டு சித்திரக் கவிதைகள் (திருவெழுகூற்றிருக்கை போன்றவை) ரத பந்த அமைப்பில் எழுதப்பட்டன. வசதிகள் பெருகவும், வெள்ளித்தேர், தங்கத்தேர் கூட பல ஆலயங்களில் உருவாகின. ஆனால் அவை கோயிலின் உள்ளேயே பாதுகாப்பாக வலம் வரும்.

ரத ஸ்தாபன சாஸ்திரம்
ரத ஸ்தாபன சாஸ்திரம்

மரத்தால் ஆன தேர் மட்டுமே வீதி உலா வரும். சிறியதோ, பெரியதோ, தேர்கள் எல்லாம் சாஸ்திரத்தின்படியே உருவாக்கப்படும். அவை எந்த வடிவத்தில் அமைய வேண்டும் என்பதற்கு ரத ஸ்தாபன சாஸ்திரம், மய மதம், மானசாரம் போன்ற சிற்ப சாஸ்திர நூல்கள் வழிகாட்டுகின்றன. அதன்படியே தேர் உருவாக வேண்டும். உலகின் முதல் தேர் என்று கொண்டாடப்படும் திருவாரூர் ஆழித்தேர் உருவானபோதே ரத ஸ்தாபன சாஸ்திரம் மயனால் உருவானது என்று புராணங்கள் சொல்கின்றன. எந்தக் கடவுளுக்கு உருவாகிறதோ அதற்கேற்ப தேரின் சிற்பங்கள், பீடம், சக்கரங்கள் அமையும். தேர்கள் உறுதியான இலுப்பை மரத்தாலேயே செய்யப்பட வேண்டும். பெரும்பாலும் அந்த ஆலய வடிவமும், தேரின் வடிவமும் ஒத்திருக்க வேண்டும். அவ்வளவு ஏன், அந்தத் தேரில் எத்தனை பேர் ஏறலாம், யார் யார் ஏறலாம் என்பது வரை நிர்ணயித்து ஆகம விதிகளும் சாஸ்திரங்களும் உண்டு. கட்டுப்பாடான வரையறைக்குள், முறையான வழிகாட்டலின்படி பாதுகாப்பாகவே தேர் வீதியுலா வரும். அதனால் பெரும்பாலும் தேர் உலாவின்போது எந்த அசம்பாவிதங்களும் உண்டாவதில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேர் வடிவமைக்க முடியாத சிறிய கோயில்களிலும் மடங்களிலும் சுவாமி உலா வர தற்காலிக சப்பரங்கள் அமைக்கப்படும். சப்பரம், தெய்வத் திருமேனி தாங்கி என்றும் சொல்லப்படுகிறது. பாரம்பர்யமான சப்பரங்கள், பல்லக்கு போன்றே இருக்கும். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் விழாவில் நாயன்மார்கள் வருவது இது போன்ற சப்பரங்களில்தான். இவற்றால் எந்த ஆபத்தும் இல்லை. இந்தச் சப்பரத்தில் சுவாமியைத் தவிர வேறு யாரும் இருப்பதில்லை. சிறிய சப்பரங்களை 4 அல்லது 8 பேர் சேர்ந்து தோளில் தூக்கி வருவார்கள். இந்த வகை சப்பரங்களே பயன்படுத்த வேண்டும் என்பதே ஆலய விதி.

சப்பரங்கள்
சப்பரங்கள்

ஆனால், தேர் போலவே வடிவத்தில் சப்பரங்கள் செய்வது பிற்காலத்தில் வழக்கமானது. ஒரு மாட்டு வண்டியைக் கூட சப்பரமாக மாற்றி விடலாம். நான்கு சக்கரங்கள் கொண்ட சட்டத்தின் மீது மர பீடம் அமைத்து சப்பரம் செய்வதும் உண்டு. அந்தப் பீடத்தின் மீது சுவாமி எழுந்தருளுவார். இப்படி நகரக்கூடிய சக்கரங்கள் அமைந்த ஒருவகைச் சித்திர இருக்கை மீது சுவாமியை எழுந்தருளச் செய்து, அந்தச் சப்பரத்தின் மீது உயரமாக மூங்கில்கள், மலர்கள், துணிகள், வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்கரித்து உலா வருவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேரை வடம் கொண்டு பொதுமக்கள் இழுப்பதைப் போல இல்லாமல், பெரும்பாலும் சப்பரங்களைச் சிலர் கூடி தள்ளியும் இழுத்தும் வருவார்கள். பல இடங்களில் புல்டோசர், டிராக்டர், டெம்போ வைத்தும் இழுத்து வருவது உண்டு. சப்பரத்தின் மின் வசதிக்காக ஜெனரேட்டர் வண்டியும் கூட வருவது உண்டு. இந்த சப்பர உலாவில் எந்தக் கட்டுப்பாடுகளும் கடைபிடிக்காததால் அளவுக்கு மேல் ஆட்கள், சப்பரத்தில் ஏறி அமர்வதும் நிற்பதும் நடப்பது உண்டு. பல இடங்களில் பாரம் இழுக்கும் வண்டியில்தான் சப்பரம் உருவாகி கண்டபடி உலா இழுக்கப்பட்டு வருகிறது.

தேர்த் திருவிழா என்றால், அதற்கு முன்பு அது ஓடும் மாட வீதிகளைக் கண்காணித்து செப்பனிடும் வேலைகள் நடைபெறும். ஆனால் இந்தச் சப்பர உலாவில் அதுபோன்ற விஷயங்கள் இல்லை. உயரமான சப்பரம் மின் கம்பியில் உரசியே தஞ்சாவூர் களிமேடு அப்பர் சுவாமி உலாவில் விபத்து உண்டானது.

சப்பர விபத்து
சப்பர விபத்து

ஆர்வ மிகுதியால் அலங்காரத்தை அதிகப்படுத்தியும், ஆட்கள் அதிகம் எறியும் பல சப்பரங்கள் குடை சாய்ந்து, காயங்களும் மனவேதனைகளும் உண்டாகுகின்றன. கண்டபடிக்கு சப்பரங்கள் செய்து, அதையும் எந்த விதிப்படியும் இயக்காமல் இப்படி ஆபத்துக்கள் தொடர்வது முறையல்ல. எந்தக் கொண்டாட்டத்தையும் பாதுகாப்போடு நியதிக்கு உட்பட்டு செய்ய வேண்டும் என்பதே இந்த விபத்துக்கள் சொல்லும் பாடம்.

ஊர் நலமோடு இருக்கவும், ஊர் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கவுமே சுவாமி வீதி உலா தொடங்கியது. தேரும் சப்பரங்களும் ஓடின. அந்த சப்பரங்களே உயிருக்கு ஆபத்தாக அமையுமானால் அது நல்லதில்லையே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism