இதழ்ப்பணியோடு உங்களோடு கரம்கோத்து ஆன்மிகப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது உங்கள் சக்தி விகடன். சிதிலமடைந்த ஆலயங்களைத் தேடிக்கண்டுபிடித்து புனரமைக்க உதவும் `ஆலயம் தேடுவோம்', புதர்மண்டிய கோயில்களைச் சுத்தம் செய்யும் `உழவாரப் பணி’ என்று தொடர்ந்து செயலாற்றிவருகிறது சக்தி விகடன். அந்த வகையில் தொடங்கப்பட்டதுதான் `சக்தி யாத்திரை’.

இறையருளோடு கூடிய ஆன்மிக அனுபவத்தை வாசகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று தொடங்கப்பட்ட ஆன்மிகப் பயணங்களே `சக்தி யாத்திரை’. சென்ற ஆண்டில் தொடங்கி மார்கழி மாலவன் தரிசனம், காஞ்சியிலிருந்து தென்காசி வரையிலான முருகன் தலங்கள், சிலிர்ப்பூட்டும் ஷீர்டி பயணம் என்று பல்வேறு யாத்திரைகளுக்கு வாசகர்களை அழைத்துச் சென்று மிகச்சிறந்த இறையனுபவத்தை வழங்கியிருக்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதன் தொடர்ச்சியாகத் தற்போது `சக்தி யாத்திரை - மார்கழி தரிசனம்' தொடங்கவிருக்கிறது. மகத்துவம் வாய்ந்த மார்கழியில் தரிசிக்க வேண்டிய மாலவன் ஆலயங்களுக்கும், நடராஜர் ஆலயங்களுக்கும் யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறோம்.

மாதங்களில் சிறந்தது மார்கழி. வாழ்வில் ஏற்றங்களை அருளும் வைகுண்ட ஏகாதசித் திருநாளையும் நல்ல திருப்பங்களைத் தந்தருளும் திருவாதிரைத் திருநாளையும் தன்னகத்தே கொண்ட புண்ணிய மாதமாம் மார்கழியில் திருமால் திருத்தலங்களை தரிசித்தால், சர்வ மங்கலங்களும் உண்டாகும். நடராஜர் ஆலயங்களை தரிசித்து வழிபட்டால், தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியான, அற்புத பலன்களை வாரி வழங்கும் அபூர்வ க்ஷேத்திரங்களை நேரில் தரிசிக்கும் வாய்ப்பை வாசகர்களுக்கு அளிக்கவிருக்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சக்தி யாத்திரையானது 3.1.2020 அன்று அதிகாலை திருவல்லிக்கேணி - அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தொடங்கி 5.1.2020 அன்று செப்பறை ஸ்ரீ நடராஜர் தலத்தில் நிறைவடையவிருக்கிறது. இடையே திருவடிசூலம் - ஸ்ரீவாரு வேங்கடாசலபதி கோயில், ஊட்டத்தூர் - ஸ்ரீசுத்த ரத்தினேஸ்வரர் ஆலயம், திருப்பட்டூர் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருவெள்ளறை - ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் கோயில், திருவரங்கம் - ஸ்ரீரங்கநாதர் கோயில், நம்பிமலை - நம்பி கோயில் ஆகிய தலங்களை தரிசிக்கவிருக்கிறோம்.
தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலமான மார்கழியில், தலையெழுத்தை மாற்றும் பிரம்மனுக்கு மஞ்சள் காப்பு, திருவரங்க சிறப்பு தரிசனம், நம்பி மலையில் நட்சத்திர சங்கல்பம், திருவடிசூலத்தில் பூலோகத்தில் தரிசிக்க முடியாத பாற்கடல் மற்றும் பரமபத தரிசனம்.- வழிபாட்டுச் சிறப்புகள்
பயணமெங்கும் நம்முடன் பயணித்து புராணக் கதைகளையும், தல வரலாற்றையும் நம்முடன் பேசியபடி வருகிறார் சொல்லின் செல்வர் பி.என்.பரசுராமன். நம்பி மலை அற்புதங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார் முத்தாலங்குறிச்சி காமராசு. சிலிர்ப்பான சிறப்பான இறையனுபவத்தைப் பெற எங்களோடு இணைந்துகொள்ள அழைக்கிறோம் வாருங்கள்...