Published:Updated:

சக்தி விகடன் நடத்தும் காரியத் தடை நீக்கும் ஶ்ரீஅகோர கணநாத மூலமந்திர ஹோமம்!

மாமரத்துப் பிள்ளையார்
மாமரத்துப் பிள்ளையார்

நினைத்தது நிறைவேற... காரியத்தடை விலக... வேண்டும் வரங்களை அருளும் ஸ்ரீ கணநாத ஹோமம்! வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நீங்களும் சங்கல்பிக்கலாம்... வீட்டில் இருந்தபடியே...

இதழ் பணி மட்டுமல்லாமல் இறைப் பணியையும் தொடர்ந்து செய்து வருகிறது உங்கள் சக்தி விகடன். கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதுமே முடங்கிக் கிடக்கிறது. வெளியே நடமாட முடியவில்லை. கோயிலுக்குக் கூட சென்று வழிபடமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. இந்தச் சூழலில் உலக நன்மைக்காகவும் வாசகர்கள் மற்றும் பக்தர்களின் நலனுக்காகவும் சக்தி விகடன் ஸ்ரீ நாராயணி நிதி லிமிடெட் உடன் இணைந்து `ஶ்ரீ அகோர கணநாத மூலமந்திர ஹோமம்’ கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் வெகுசிறப்பாக நடத்தவிருக்கிறது.

கணநாத ஹோமம்
கணநாத ஹோமம்

கோயில் அறங்காவலர் டி.சீனிவாசன் மற்றும் குருக்கள் முத்துக்குமார சிவாசார்யர் ஆகியோர் இதற்கான பணிகளைச் சிறப்பாகச் செய்துவருகிறார்கள். நினைத்ததை நிறைவேற்றும், காரியத்தடை நீக்கும் ஸ்ரீ அகோர கணநாத மூலமந்திர ஹோமத்தை வாசகர்களும் பக்தர்களும் தங்கள் இருப்பிடத்தில் இருந்துகொண்டே, கலந்துகொண்டு நலமும் வளமும் பெறலாம் என்பது சிறப்பு.

தென்முகமாகத் திருமுகம் காட்டி வீற்றிருக்கும் கணபதிக்கு விசேஷமாகச் செய்யப்படும் ஹோமம் இந்த அகோர கணநாத ஹோமம். கூடுவாஞ்சேரி மாமரத்துக் கோயிலில் உள்ள கணபதியானவர் அகோரம் எனும் தென்முக திசையை நோக்கி வீற்றிருப்பதால் இங்கு இந்த ஹோமம் செய்வது வெகு விசேஷம்.

சக்தி விகடன் நடத்தும் காரியத் தடை நீக்கும் ஶ்ரீஅகோர கணநாத மூலமந்திர ஹோமம்!

காஞ்சி மகாமுனிவர் அவர்கள் உத்தரவின்பேரில் வைதீக ஸ்ரீ ஸ்ரீரங்கம் எஸ்.வி.ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் அவர்களால் வெளியிடப்பட்ட விக்னேஸ்வர மஞ்சரி என்ற புத்தகத்தில் உள்ள இந்த மூலமந்திர ஹோமம் தற்போது பக்தர்களுக்காக விசேஷமாகச் செய்யப்படுகிறது.

இந்த யாகத்தினால் விளையும் நன்மைகள் அளவில்லாதது. காரியத்தடை விலகும். நினைத்தது நிறைவேறும். மகாமாரி என்னும் கிருமிகளால் உருவாகும் கடும் தொற்று நோய்கள் அண்டாமல் காக்கும், நோய்கள் அணுகினால் விரைவில் குணமாகவும் இந்த ஹோமம் வழிவகை செய்யும். பீடை, தோஷம், தரித்திரம், பகை ஆகியன ஒழியும்.

நிகழ்ச்சி நிரல்

காலை 8.30 மணிக்கு மஞ்சள் பிள்ளையார் செய்து கணநாதரை ஆவாஹனம் செய்வித்தல்.

பிறகு ஸ்வாமிக்கு புஷ்பாஞ்சலி செய்து வழிபடுதல்

அடுத்து லோக, குடும்ப க்ஷேமத்துக்காக மகாசங்கல்பம் செய்தல். தனித்தனியாகப் பெயர், நட்சத்திரம் சொல்லி நீங்களே சங்கல்பம் செய்யலாம்.

கோயிலில் நடைபெறும் கலச பூஜையை வீட்டிலிருந்தே நீங்கள் காணலாம்.

முன்பதிவு செய்வதற்கு...

பிறகு 9 மணி அளவில் நடைபெறும் இந்த அகோர கணநாத மூலமந்திர ஹோமத்தை வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் (Zoom meeting ) கண்டு தரிசிக்கலாம்.

பின்னர் சுயம்பு கணபதிக்கு நடைபெறும் மஹா அபிஷேகம் கண்டு தரிசிக்கலாம்.

பிறகு ஹோம பூர்ணாகுதியும் அதன் பிறகு ஸ்வாமிக்கு கலசாபிஷேகமும் நடைபெறும். பின்னர்  ஸ்வாமிக்கு அலங்காரம் நடைபெறும் நேரத்தில் ஹோமம் குறித்த விளக்கவுரை முத்துக்குமார குருக்களால் அளிக்கப்படும். பிறகு பக்தர்களுக்கு தீபாராதனை காட்டி ஆசி வழங்கும் நிகழ்ச்சியோடு ஹோமம் நிறைவு பெரும்.

எந்தவிதக் கட்டணமும் இன்றி இணையத்தின் வழியே இந்த ஹோமத்தைக் கண்டு தரிசிக்கலாம். சகல பயங்களையும் நீக்கி, அளவில்லாத பயன்களை அளிக்க வல்ல இந்தப் புண்ணிய நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

இடம் - கூடுவாஞ்சேரி மாமர சுயம்பு விநாயகர் திருக்கோயில். (கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது)

நாள் : 26.5.2020 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை.

ஶ்ரீஅகோர கணநாத மூலமந்திர ஹோமத்தில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய... https://bit.ly/sakthihomam

அடுத்த கட்டுரைக்கு