Published:Updated:

சனி பயம் நீக்கும் சர்வேஸ்வரன்!

சர்வேஸ்வரன்
பிரீமியம் ஸ்டோரி
சர்வேஸ்வரன்

சிவனருளால் யம தர்மனும் சனீஸ்வரரும் அவதரித்த தலம் இந்தத் திருக்கொடியலூர்.

சனி பயம் நீக்கும் சர்வேஸ்வரன்!

சிவனருளால் யம தர்மனும் சனீஸ்வரரும் அவதரித்த தலம் இந்தத் திருக்கொடியலூர்.

Published:Updated:
சர்வேஸ்வரன்
பிரீமியம் ஸ்டோரி
சர்வேஸ்வரன்

`எங்கும் எதிலும் சிவமயம் என்று வாழும் அன்பர்களை யம பயம் அண்டாது' என்பது ஆன்றோர் வாக்கு. காலனைக் காலால் உதைத்து தன் பக்தனைக் காத்த சிவபெருமான் யம பயத்தை அகற்றுவார்.

இதற்குச் சாட்சியாய்த் திகழும் திருக்கடவூரை நாம் எல்லோரும் அறிவோம். இன்னொரு தலமும் உண்டு. அதன் பெயர் - திருக்கோடியலூர்.

திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகில் உள்ளது திருக்கொடியலூர். இவ்வூரில் ஸ்ரீஆனந்த வல்லி சமேதராக ஸ்ரீஅகத்தீஸ்வரர் அருளும் கோயிலுக்குச் சென்று வழிபட்டால், கால பயம் இருக்காது; சனி பகவான் குறித்த அச்சமும் உண்டாகாது என்கிறார்கள் பக்தர்கள். காரணம்?

சனி பயம் நீக்கும் சர்வேஸ்வரன்!

சிவனருளால் யம தர்மனும் சனீஸ்வரரும் அவதரித்த தலம் இந்தத் திருக்கொடியலூர். சூரியன், அவரின் மனைவியரான உஷா, சாயா தேவி ஆகிய மூவரும் கூடி வழிபட்ட ஊர் என்பதால், இத்தலம் ‘கூடியலூர்’ என்றழைக்கப் பட்டது. அதுவே காலப் போக்கில் ‘கொடியலூர்’ என்று மருவியதாம்.

ஸ்ரீஹயக்ரீவரின் வழிகாட்டல்படி அகத்தியர் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார் ஆகவே, இத்தல இறை வன் ‘அகத்தீஸ்வரர்’ என்றழைக்கப்படுகிறார்.

சனி தோஷமும், யம பயமும் பீடிக்கும் காலகட்டமே ஒருவருக்கு வாழ்வில் மிகவும் கஷ்டமான காலமாகும். அதுபோன்ற தருணத் தில், திருக்கொடியலூரில் அனுக்கிரக மூர்த்திகளாக விளங்கும் யமதர்மனையும், சனிபகவானையும் தரிசித்தால் நன்மைகள் உண்டாகும் என்பது ஐதிகம்.

சனி பயம் நீக்கும் சர்வேஸ்வரன்!

“சூரியனின் மனைவியரான உஷாதேவியும், அவளுடைய நிழலான சாயாதேவியும் இத்தல இறைவனிடம் புத்திர பாக்கியம் வேண்டி வழிபட்டனர். அதற்கு இறைவன் `உங்கள் கணவரோடு பூலோகம் சென்று திருமீயச்சூர் தீர்த்தத்தில் நீராடி, திருக்கொடியலூரில் என்னை வழிபட்டு வாருங்கள். அதன் பலனாக உங்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைக்கும்' என்று அருளினார்.

அதன்படியே சூரியன், உஷாதேவி, சாயா தேவி மூவரும் திருமீயச்சூரில் புனிதநீராடிவிட்டு, இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டனர். அதன் பயனாக உஷாதேவிக்கு யமதர்மனும், சாயாதேவிக்கு சனீஸ்வரனும் பிறந்தனர்.

சனி பயம் நீக்கும் சர்வேஸ்வரன்!

ஒருமுறை, தன்னைச் சனி பீடிக்கப் போகிறார் என்பதை அறிந்த இந்திரன், `நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம்' என்று கேட்டான். உடனே சனி பகவான், `என் பார்வையிலிருந்து எவரும் தப்ப முடியாது' என்று பதிலளித்தார்.

`அப்படியானால் என்னைப் பிடிக்கும் நேரத்தைச் சொல்லிவிடு' என்று இந்திரன் கேட்டுக்கொள்ள, அவனுக்குக் குறிப்பிட்ட நேரத்தைச் சொன்னார் சனி. அவரின் பாதிப்பி லிருந்து தப்ப வழி தெரியாமல் தவித்த இந்திரன், அகத்தியரைச் சந்தித்து அபயம் வேண்டினான்.

சனி பயம் நீக்கும் சர்வேஸ்வரன்!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவனிடம், ` சனிபகவானும், யமதர்மனும் பிறந்து வளர்ந்து வழிபட்ட தலம் திருக்கொடிய லூர். நானும் அங்கே சிவபூஜை செய்திருக் கிறேன். அங்கு சென்று, ஈசனுக்கு அபிஷேகிக்கப் படும் புனிதநீரானது வெளியேறும் கோமுகத் துவாரத்தில், பெருச்சாளியின் உருவில் மறைந்து இரு. சனி உன்னை அணுக மாட்டான்' என்றார் அகத்தியர்.

அதன்படியே இந்திரன் இங்கு வந்து மறைந்துகொண்டார். அபிஷேக நீர் பட்டு, அதன் பலனாக சனியின் உக்கிர பார்வையிலிருந்து காப்பாற்றப்பட்டார்.

சனி பயம் நீக்கும் சர்வேஸ்வரன்!

ஆனால் இந்திரனின் ஆணவம் அவனைச் சும்மா இருக்க விடவில்லை. சுய உருவத்தில் வெளிவந்தவன், சனி பகவா னிடம் `பார்த்தாயா! உன் பிடியிலிருந்து தப்பித்துவிட்டேன்' என்று ஆணவத்துடன் கூறினான்.

சனி சிரித்தபடியே `தேவர் தலைவனான நீங்கள் மாற்றுருவில் அவ்வாறு மறைந்து கிடக்கக் காரணமே நான்தான்' என்றார்.

சனியின் பிடியிலி ருந்து எவரும் தப்ப இயலாது என்பதை உணர்ந்த இந்திரன், தேவர்கள் அனைவரை யும் அழைத்துக் கொண்டு திருக்கொடியலூர் வந்து தீர்த்தம் உருவாக்கினான்.

சனி பயம் நீக்கும் சர்வேஸ்வரன்!

அதன் நீரால் அகத்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, அபிஷேகத் தீர்த்தத்தை தேவர்கள் மீது தெளிக்கச் செய்தான். அதன் மூலம் சனீஸ்வர தோஷம் தீவிரமாகத் தாக்காதவண்ணம் அனைவரும் அருள்பெற்றனர்.

இன்றைக்கும் இத்திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து அபிஷேக தீர்த்தத்தைத் தங்கள்மீது தெளித்துக் கொண்டு, இங்கு அருள்பாலிக்கும் சனிபகவானை வழிபடுகின்றனர். இதனால் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்பது நம்பிக்கை.

சனி பயம் நீக்கும் சர்வேஸ்வரன்!

மங்கள சனீஸ்வரர் அவதரித்த தலம் என்பதால், மற்ற சனீஸ்வர தலங்களை விடவும் அதிகம் முக்கியத்துவம் பெற்ற தலமாகப் புராணங்களால் இவ்வூர் போற்றப்படுகிறது.

ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, ஜன்மச் சனி, கண்டச் சனி போன்ற சனிக்கிரக பாதிப்பு உள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட் டால், தொஷங்களின் பாதிப்புகள் குறையும்.

மேலும் தொழிலில் வளர்ச்சி அடைய விரும்புகிறவர்கள், நிரந்தர வேலை இல்லா தவர்கள், வம்சா வழியாக வரும் நோய்களால் அவதியுறுவோர், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப் படுகிறவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீஅகத்தீஸ்வரரை வழிபட்டு, அபிஷேக தீர்த்தத்தைத் தெளித்துக் கொண்டு பலன் பெறுகிறார்கள்.

சனி பயம் நீக்கும் சர்வேஸ்வரன்!

இக்கோயிலின் தென்புறத்தில் யமதர்ம ராஜனும், வடபுறத்தில் சனி பகவானும் அருள்கிறார்கள். அத்துடன் சனிபகவானின் நேர் எதிரில் பைரவர் அருள்கிறார். இந்த அமைப்பு வேறெங்கும் காண்பதற்கரிய சிறப்பு என்கிறார்கள்.

இத்தலத்தின் வழிபாட்டுச் சிறப்புகள் பற்றி கோயிலின் சிவாசார்யர் முத்துக்குமார குருக்களிடம் பேசினோம்.

“வியாழன்தோறும் யமதர்மனுக்கும், சனிக் கிழமைகளில் சனி பகவானுக்கும் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.அதேபோல் தேய்பிறை அஷ்டமி, பிரதோஷ வழிபாடும் நடைபெறுகின்றன. இங்கு வந்து வழிபட்டால், இழந்த பொருள்களையும், இன்பத்தையும் திரும்பப் பெறலாம் என்பது நம்பிக்கை. குழந்தைப்பேறு அருளும் சிறப்புத் தலமாகவும் திகழ்கிறது. இத்தலத்தை தரிசித்தால் சனிதோஷமும், யம பயமும் நீங்கும் வளமான வாழ்வும்; தீர்க்க ஆயுளும் உண்டாகும்” என்றார் முத்துக்குமார குருக்கள்.

சனி பயம் நீக்கும் சர்வேஸ்வரன்!

‘திருநள்ளாறை விட்டாலும், திருக்கொடிய லூரை விடாதே’ என்பது சொல்வழக்கு. எனவே நீங்களும் ஒருமுறை திருக்கொடியலுர் சென்று வழிபடுங்கள்; உங்கள் வாழ்வு செழிக்க வரம் பெற்று வாருங்கள்.

எப்படிச் செல்வது ?: மயிலாடுதுறையிலிருந்து 25 கி.மீ தொலைவிலுள்ளது பேரளம். இங்கிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் திருக்கொடியலூர் உள்ளது. பேரளத்திலிருந்து மினி பஸ், கார் மற்றும் ஆட்டோ வசதி உண்டு.