‘திருவாரூரில் பிறக்கவும் காசியில் இறக்கவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்’ என்பது முன்னோர்களின் வாக்கு. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலே வாழும் வாழ்க்கை நிறைவான ஒன்றாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கை இந்த மண்ணுலகில் வாய்ப்பது இறையருளால் மட்டுமே கைகூடும்.

66,000 கோடி லிங்கங்கள் நிறுவி 16,000 ஆண்டுகள் பூஜை செய்தே அத்தகைய இறையருளைப் பெற வேண்டும் என்பது ஐதிகம். மண்ணுலக வாழ்வில் சாத்தியமற்ற இந்த பூஜாபலனை நமக்கு தரிசன மாத்திரத்திலேயே தரவல்ல ஈசனின் திருத்தலம் ஒன்று உண்டு. அதுவே நீடூர். நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள இந்தத் தலத்தில் இறைவன் சோமநாதராக அருள்பாலிக்கிறார். இங்கு உறையும் அம்மை ‘வேயுறு தோளியம்மை’ என்னும் இனிய திருநாமத்தோடு கொலுவீற்றிருக்கிறாள்.

‘நிலையார் மணிமாட நீடூரானை’ என்று அப்பர் பெருமானும், ‘எவ்வி மல்லிகையே கமழ் நீடூர்’ என்று சுந்தரரும், ‘விளங்கும் வளமைத் திருநீடூர்’ என்று சேக்கிழார் பெருமானும், மச்சபுராணமும் போற்றிப் புகழும் திருத்தலம் இது.

இக்கோயில் ஊழிக்காலத்தும் அழியாது நீடித்திருக்கும் ஊர் என்பதால் ‘நீடூர்’ எனப் பெயர் பெற்றது என்கின்றனர்.

ஒருமுறை இந்தத் தலம் வந்த இந்திரன், சிவபூஜை செய்யும் நேரம் நெருங்கிவிடவே காவிரிக்கரையில் இருந்த மண்ணை எடுத்து லிங்கம் செய்து பூஜை செய்து வழிபட்டான். பின்பு இறைவனை தன் இனிய கானத்தால் துதித்தான்.

இந்திரனின் கானத்தால் மகிழ்ந்த ஈசன் இந்திரன் முன்பு தோன்றி திருநடனக்காட்சி அருளினார். இதனால், இந்தத் தல இறைவனுக்கு, ‘கான நர்த்தன சங்கரன்’ என்ற திருநாமமும் ஏற்பட்டது.

தன்மசுதன் என்ற அசுரன், தான்செய்த பாவத்தால் நண்டாகப் பிறந்தான். தன் நிலைமாற வேண்டிக் காத்திருந்தவனுக்கு நாரத முனிவரின் தரிசனமும் உபதேசமும் கிடைத்தன.

நாரதர், நற்கதி ஏற்பட நீடூர் சோமநாதரை வழிபட அறிவுறுத்தினார். அதன்படி அவன் சோமநாதரை வழிபட, ஈசன் அருள்செய்து லிங்கத்துள் ஐக்கியமாகுமாறு அருள்பாலித்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது படைக்கும் திருத்தொண்டைச் செய்துவந்த முனையடுவார் நாயனார் முக்தி அடைந்த தலம் இது.

நீடூர் சோமநாதர் காணொளி தரிசனம்

வழிபாட்டுச் சிறப்புகள்: மண்ணுலக வாழ்வுக்குத் தேவையான சகல செல்வங்களையும் அருளும் தலம் இது. தேவர்களும் பிரமன், திருமால், பத்ரகாளி முதலிய தெய்வங்களும் சிவனை வழிபாடு செய்த தலம் இது.

இந்திரன் இங்குள்ள ஈசனிடம் வேண்டிக் கொண்டதற்கு இணங்க, இங்கு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அடுத்துவரும் 12 ஆண்டு களில் சேரத்தக்க பொருள் செல்வங் களையும், புகழ், அனுபவப் பேரறிவு, அட்டமா ஸித்திகள், வீடுபேறு எனும் அருள் செல்வங் களையும் அருளும் பேரருராளனாக சோமநாதர் விளங்குகிறார்.

இங்கு கோயில்கொண்டிருக்கும் அம்மையை சூரியன் வழிபட்டு அருள்பெற்றதால் அன்னைக்கு ‘ஆதித்ய அபய வரதாம்பிகை’ என்ற திருநாமமும் உண்டு. அம்மனின் சந்நிதிக்கு முன் உள்ள மண்டபத்தில் சனி பகவானுக்குச் சந்நிதி உள்ளது. அம்மனையும் சனி பகவானையும் ஓரிடத்தில் இருந்து தரிசனம் செய்ய இயலும். அவ்வாறு தரிசனம் செய்பவர்களுக்கு சனி தோஷம் நீங்கும் என்பது ஐதிகம்.

சகல கிரகங்களையும் தன் அருள்பார்வையால் வழிநடத்தும் அன்னையை வணங்கினாலே நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பதால் இங்கு நவகிரக சந்நிதி இல்லை.

நண்டு இறைவனை வணங்கி நற்கதி அடைந்த தலம். ஆதலால், நீடூர் கடக ராசிக்காரர்களுக்குரிய பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. கடக ராசிக்காரர்கள் இங்குவந்து ஈசனை வழிபடத் துன்பங்கள் தீர்ந்து நற்பலன்கள் மிகுதியாகும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் ஆனந்த தீர்த்தம், செங்கழு நீரோடை, சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், இந்திர தீர்த்தம், பத்ரகாளி தீர்த்தம், முனிவரர் தீர்த்தம், பருதிகுண்டம், வருண தீர்த்தம் என்னும் நவ தீர்த்தங்களில் நீராடி ஈசனை வழிபட பிறவிப் பிணி தீரும் என்கிறது தலபுராணம்.

எப்படிச் செல்வது?: நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது நீடூர்.

வேதங்கள் போற்றும் தலம் வேதாரண்யம்.இங்குள்ள ஆலயத்தின் மேற்குக் கோபுர வாயிலில் ஒற்றைக் காலைத் தூக்கியபடி காட்சியளிக்கிறார் விநாயகர்.

ஸ்ரீராமர், சேதுவில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, பூஜித்த பிறகு பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கியது. ஆனால் வீரஹத்தி தோஷம் தொடர்ந்தது. அந்த தோஷத்தில் இருந்து விடுபட ராமன் வேதாரண்யம் வந்து சிவலிங்க வழிபாடு செய்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த வீரஹத்தி பேயை விநாயகப்பெருமான் காலைத் தூக்கி விரட்டினாராம்! இந்த விநாயகரை வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி நலம் பெறலாம்.

- ஆர். பிருந்தா, மதுரை-20