திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

நாழிகை நேரம் இருந்தால் போதும்!

நரசிம்மர்
பிரீமியம் ஸ்டோரி
News
நரசிம்மர்

ஓவியங்களும் தகவல்களும்: ஜெ.பி.

ஒரு நாழிகை நேரம் (24 நிமிடங்கள்) தங்கியிருந்தால் மோட்சம் தரும் திருத்தலம் கடிகாசலம் எனப்படும் சோளிங்கர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணத்திலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். சுமார் 2000 வருடங்களுக்கு முன் சொளிங்கரில் வேதப் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டதாகவும் சாளுக்கிய அரசன் மயூரவர்மன் இங்கே கல்வி பயின்றதாகவும் கல்வெட்டுகள் கூறுகின்றன. `நாளை என்பதில்லை நரசிம்மனிடத்தில்’ என்பார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். நம் பிரச்னைகள் எதுவாயினும் உடனடியாக தீர்த்து வைத்து அருள்பவர் ஶ்ரீநரசிம்மர். அவ்வகையில் தற்போது உலகைச் சூழ்ந்திருக்கும் பிணி எனும் பெரும் பிரச்னை தீர, சோளிங்கர் ஶ்ரீநரசிம்மரிடம் சரணடைவோம். சொளிங்கர் தலத்தின் சிறப்புகள் இங்கே உங்களுக்காக...

பெரிய மலை
பெரிய மலை

பெரிய மலை

சுமார் 750 அடி உயரமுள்ள பெரிய மலையில் யோக நரசிம்மர் ஆலயம், சுமார் 200 அடி நீளமும் 150 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது. தரைப்பகுதியி லிருந்து கோயிலுக்கு 1,305 படிகள்.

பிரம்ம தீர்த்தம்
பிரம்ம தீர்த்தம்

பிரம்ம தீர்த்தம்

லையடிவாரத்தில் அமைந்துள்ள வட்ட வடிவமான திருக்குளம். 25 படிகள் கொண்ட இதன் கரையில் வரதராஜ ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தத் திருக்குளத்தில் நீராடினால் பாவங்கள் பறந்தோடும் என்பது ஐதிகம்.

யோக நரசிம்மர்
யோக நரசிம்மர்

யோக நரசிம்மர்

சோளிங்கரில் கிழக்கு நோக்கி யோகாசன நிலையில் அருளும் ஶ்ரீயோக நரசிம்மர் சாளக்கிராம மாலை அணிந்துள்ளார். மேலிரு கரங்களில் சங்கு-சக்கரம், கீழிரு கரங்கள் யோக நிலையில். யோக பீடத்தில் தசாவதாரங்கள் காட்சியளிக்கின்றன. இந்தக் கோயிலில் சுமார் 50 அடி உயரத்துடன் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. பெருமாளுக்கும் தாயாருக்கும் தனித்தனி சந்நிதிகள். மூன்று பிராகாரங்கள்.

சக்கர தீர்த்தம்
சக்கர தீர்த்தம்

சக்கர தீர்த்தம்

ஞ்சநேய ஸ்வாமி ஆலயத்திலுள்ள இந்தத் தீர்த்தத்தை அனுமத் தீர்த்தம், ராம தீர்த்தம் என்றும் சொல்வர். இயற்கையான சுனை மண்டபங்கள் மற்றும் நடைமேடையால் அழகூட்டப்பட்டிருக்கிறது. பேய், பிசாசு, பில்லி-சூன்யம் பாதிப்புக்குள்ளானவர்கள் இங்கு நீராடி அனுமனை வணங்கினால், பாதிப்புகள் நீங்கும்.

யோக ஆஞ்சநேயர்
யோக ஆஞ்சநேயர்

யோக ஆஞ்சநேயர்

சுமார் 350 அடி உயரமுள்ள சிறிய மலையில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீஆஞ்சநேயர், சங்கு-சக்கரம், ஜபமாலை சகிதம் மேற்கு நோக்கி யோக நரசிம்மரை தரிசித்தவாறு யோக நிலையில் காட்சி தருகிறார். இவரை தரிசிக்க 406 படிகள் ஏற வேண்டும். இந்தக் கோயிலும் கோபுரம், சந்நிதிகள், பிராகாரங்கள் எனக் கட்டப்பட்டுள்ளது.