Published:Updated:

சிவராத்திரியன்று சிம்மக்னரை தரிசிக்க வேண்டுமா?

சிம்மக்னர்

இரண்யன் வதம் முடிந்தது, இருப்பினும் நரசிம்ஹரின் உக்கிரம் மூவுலகையும் தகித்தது, தேவர்களின் பிரார்த்தனைகளும் எடுபடவிலை! அவரை யார் சமாதானப்படுத்துவது?

சிவராத்திரியன்று சிம்மக்னரை தரிசிக்க வேண்டுமா?

இரண்யன் வதம் முடிந்தது, இருப்பினும் நரசிம்ஹரின் உக்கிரம் மூவுலகையும் தகித்தது, தேவர்களின் பிரார்த்தனைகளும் எடுபடவிலை! அவரை யார் சமாதானப்படுத்துவது?

Published:Updated:
சிம்மக்னர்

புருஷரில் உத்தமன் புருஷோத்தமன் என்பது போல, பக்தியில் சிறந்தவன் பிரகலாதன் என்கிறது பிரகலாத சரிதம். சதா சர்வகாலமும் நாராயணா எனும் நாமம் உச்சரித்த பிரகலாதனைக் காக்க, தந்தை இரண்யனை வதம் செய்வதற்கு திருமால் எடுத்த அவதாரமே “நரசிம்ம அவதாரம்”.

இரண்யன் பெற்ற வரமோ: உள்ளும் இல்லாத, வெளியிலும் இல்லாத இடத்தில், பகலும் இல்லாத, இரவும் இல்லாத பொழுதில், மனிதனும் அல்லாத, மிருகமும் அல்லாத ஒன்றினால் மட்டுமே தனக்கு மரணம் சாத்தியமாகும் என்பதாகும்.

சிம்மக்ன மூர்த்தி

இரண்யன் வதம் முடிந்தது, இருப்பினும் நரசிம்ஹரின் உக்கிரம் மூவுலகையும் தகித்தது, தேவர்களின் பிரார்த்தனைகளும் எடுபடவிலை! அவரை யார் சமாதானப்படுத்துவது?

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்! ரெளத்திர மூர்த்தியான ருத்திரன் மட்டுமே நரசிம்ஹரை சாந்தப்படுத்த முடியும் என்றாகி ஈசன் சிம்மக்ன மூர்த்தியாக அவதரித்தார்!!

அவ்வடிவத்தை...

நன்னாலிரண்டு திருவடியும், நனி நீள் வாலும் முகம் இரண்டும்

கொன்னார் சிறகும் உருத்திரமும் கொடும்பேரார்ப்பும் எதிர் தோற்றி... எனக் காஞ்சி புராணம் போற்றுகிறது. ஆம்... அவரே திருபுவன நாயகன்!

சிம்மக்னர்
சிம்மக்னர்

சிவராத்திரியன்று சிம்மக்னரை தரிசிக்க வேண்டுமா?

சென்னையைக் கடந்து, திருத்தணிக்கருகே தெலுங்கு தேசத்தின் எல்லையில், நகரியின் ஒரு பாகமான கீளப்பட்டு கிராமத்தில், அமைந்திருக்கும் அருள்மிகு திருபுரசுந்தரி சமேத சந்திரமவுளீஸ்வரர் ஆலய வளாகத்தில், 10 அடி உயரம், 16 ஆடி அகலத்தில் பிரமாண்டமான சிம்மக்னரை தரிசிக்கலாம் (தொடர்புக்கு: 6304692951 / 9444259362)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்ன சிறப்பு?

ஏறத்தாழ ஒரு மாதம் காலம், கீளப்பட்டு கிராமத்தின் திரு.கணேசன் அவர்கள் தலைமையில், 5 நபர் நண்பர் குழுவினர், கடலில் கிடைக்கக்கூடிய 15 கிலோ சோழிகள், 30 கிலோ கடல் கிளிஞ்சல்கள், 5 கிலோ கோமதி சக்கரங்கள், 80 கிலோ யானமுள்ளி சங்குகள் என 100 கிலோ எடையுள்ள பொருட்களைக்கொண்டு சிம்மக்னரை வடிவமைத்துள்ளனர். காணக் கண்கோடி வேண்டும் மக்களே!! உங்கள் துயர் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி பொங்கிட சிம்மக்னரை தரிசித்து ஈசன் அருள் பெறுங்கள்! வாழ்க வளமுடன்!

- எம்.எஸ். நாகராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism