Published:Updated:

அகோரிகள் வழிபட்ட கோலவிழி அம்மன்... மயிலையின் காவல் தெய்வம் முண்டகக் கண்ணியம்மன்! #Video

மயிலையின் முக்கியமான கோயில்களில் ஒன்று முண்டகக் கண்ணி அம்மன் கோயில்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மயிலை... சென்னை நகரின் ஆன்மிக மையம். இங்குதான் புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயில், கேசவப்பெருமாள் கோயில், திருவள்ளுவர் கோயில், சாயிபாபா கோயில் ஆகியன உள்ளன. மேலும் இந்தப் பகுதியின் புகழ்பெற்ற பழைமையான ஆலய்ம் முண்டகக் கண்ணி அம்மன் கோயில் மற்றும் கோலவிழி அம்மன் கோயில். மயிலாப்பூர் கிராமத்தின் காவல் தெய்வங்களாக இருந்து காத்தருளும் இந்த தேவியர் கோயில்கள் இந்த ஆடிமாதத்தில் மிகவும் சிறப்போடு திகழ்பவை.

ரேணுகா தேவியின் அவதாரங்களுள் ஒன்றாகவும், சப்த கன்னிகைகளுள் ஒருவராகவும் கருதப்படும் முண்டகக்கண்ணி அம்மன், இந்தத் தலத்தில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலத்தில், அன்னையின் கருவறை ஓர் எளிய தென்னங்கீற்றுக்கொட்டகைதான். இங்கு, கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் அம்மனை, 'விரிந்த பெரிய விழிகளைக் கொண்டவள்' என்ற பொருளில் 'முண்டகக் கண்ணியம்மன்' என்கின்றனர்.

கோலவிழி அம்மன்!
கோலவிழி அம்மன்!

முண்டகக்கண்ணி அம்மனை வழிபடும் பெண்கள், அவரைத் தாயாகவே ஏற்று வேண்டிக்கொள்கிறார்கள். கோயிலில் எப்போதும் பெண்கள் கூட்டத்தை அதிகமாகக் காணமுடியும். அம்மனும் பெற்ற தாயைவிட வாஞ்சையுடன் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகிறாள். கோயிலில், அம்மன் சந்நிதிக்கு எதிரே மிகப்பெரிய அரசமரம் ஒன்று உள்ளது.

அதன்கீழ், நாக கன்னிகளின் விக்கிரகங்கள் காணப்படுகின்றன. இந்த நாக கன்னிகளுக்கு பால் ஊற்றி, அரசமரத்தை மூன்று முறை சுற்றிவந்து வணங்குகிறார்கள் பக்தர்கள். இதேபோன்று, அம்மன் சந்நிதிக்குப் பின்புறம் விழுதுகள் இல்லாத அபூர்வ கல்லால மரமும் புற்றுடன்கூடிய மூன்றடி கல்நாகமும் இருக்கின்றன. இந்தக் கல்லால மரம்தான் தலமரமாக வணங்கப்படுகிறது. அந்தப் புற்றில் நாகம் ஒன்று வாழ்வதாகவும் தினமும் இரவு நேரத்தில், அந்த நாகம் கோயிலுக்குள் வந்து அம்மனை வழிபடுவதாகவும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

முண்டகக் கண்ணியம்மன்
முண்டகக் கண்ணியம்மன்

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது கோயில் இருக்கும் பகுதி, குளமாக இருந்ததாம். அப்போது, அந்தக் குளக்கரையில் பழைமையான ஆலமரம் ஒன்றும் இருந்தது. அந்த ஆலமரத்தடியில்தான் அன்னை சுயம்புவாக வெளிப்பட்டாள் என்கின்றனர். இங்கு, மூலவராக வீற்றிருக்கும் அம்மனுக்கு உருவம் இல்லை. தாமரை மொட்டு போன்று காட்சியளிக்கும் சுயம்பின் உச்சிப் பகுதியில், சந்தனத்தைக் குழைத்து உருவம் செய்து வழிபடுகிறார்கள். சந்தன உருவத்தில் குங்குமம் வைத்து, தலைக்குப் பின்புறத்தில் நாக கிரீடம் சூட்டிப் பார்க்கும்போது அம்மன் அமர்ந்த நிலையில் காட்சியளிப்பதைப் போன்றே இருக்கும்.

இத்தகைய சிறப்புகள் உடைய முண்டகக்கண்ணி அம்மன் பற்றியும் அகோரிகள் பூஜை செய்ததாகச் சொல்லப்படும் கோலவிழி அம்மன் பற்றியும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு