
திருவண்ணமலையில் ஆயுஷ்ஹோமம் நீங்களும் சங்கல்பிக்கலாம்!
தீபத் திருநாளில் திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசிப்பது பெரும் புண்ணியம். அத்துடன், நீண்ட ஆயுள் பலத்தையும் பிணி யில்லா பெருவாழ்வையும் வரமாகப் பெற்றுத் தரும் ஹோம வழிபாடும் இணைவது, அற்புதம் அல்லவா? ஆம்! தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் தீப தரிசனம் - ஹோம வழிபாடு - வீடுதேடி ஹோமப் பிரசாதம் என சிலிர்ப்பூட்டும் வாய்ப்பு நம் வாசகர்களுக்கு!

அகிலம் போற்றும் அண்ணாமலையில் அம்மணி அம்மாள் ஆலயத்தில், தீபத் திருநாளுக்கு மறுநாள் கார்த்திகைப் பெளர்ணமி அன்று சிறப்புற நடைபெறவுள்ளது ஆயுஷ்ஹோமம். இதுபற்றிய விவரம் அறியுமுன் அம்மணி அம்மாளின் மகிமையை முதலில் அறிந்துகொள்வோம்.
அது ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலம். மைசூர் மன்னரின் அரண் மனை வாசலில் அந்தப் பெண்மணி நின்றார். வாயில் காப்போன் அந்தப் பெண்ணை ஏறெடுத்துப் பார்த்தான். எளிய உடை... துறவியைப் போன்ற தோற்றம். காவல்காரன் “ஏய்... எங்கே போகிறாய்... போ அந்தப் பக்கம்” என்று கோபமாகத் தடுத்தான்.
அந்தப் பெண்மணியோ புன்னகையோடு, “அப்பா நான் மன்னரைச் சந்தித்து ஈசன் குடிகொண்டிருக்கும் ஓர் பேராலயத்தின் திருப்பணிக்காகப் பொருள்வேண்டி வந்திருக்கிறேன். என்னைத் தடுக்காதே...” என்று சொன்னார்.
“ஆஹா... நீ... திருப்பணி செய்யப் போகிறாயா... உன்னைப் பார்த் தாலே தெரிகிறது... யாசகம் கேட்கத்தான் போகிறாய்... யாசகம் எல்லாம் கிடையாது. போ அந்தப் பக்கம்” என்று கிண்டலாகக் கூறி அவளை விரட்டினான்.
அந்தப் பெண்மணி சிரித்துக்கொண்டார். அங்கிருந்து நகர்வது போல் நகர்ந்தாள். ஆனால் தன் லகிமா ஆற்றலால் அரண்மனைக்குள் மன்னர் முன்பு அந்தக் கணமே தோன்றினாள். திடீரென்று ஒரு பெண்மணி தன் முன் தோன்றுவதைக் கண்ட மன்னன் வியந்து போனான். “அம்மா... தாங்கள் யார் ... எப்படி உள்ளே வந்தீர்கள்” எனக் கேட்க, அந்தப் பெண்மணி புன்னகையோடு பதில் சொன்னார்.
“மன்னா, நான் திருவண்ணாமலையில் இருந்து வருகிறேன். என் லகிமா சக்தியினால் உள்ளே வந்தேன். அண்ணாமலையார் திருக் கோயிலின் வடக்கு கோபுரம் இன்னும் கட்டி முடிக்கப்படாமல் இருக்கிறது. அந்தத் திருப்பணியைத் தற்போது தொடங்க எண்ணு கிறேன். தாங்களே பொருளுதவி தந்து உதவ வேண்டும்” என்று சொல்ல மன்னன் குழம்பினான். “உங்களை நான் எப்படி நம்புவது?” என்று கேட்டான்.
உடனே அந்தப் பெண்மணி, “இப்போதே வாயில் காவலனை அழைத்துவரச் சொல்லுங்கள்” என்று சொல்ல மன்னன் உத்தர விட்டான். வாயில் காவலன் உள்ளே வந்ததும் மன்னர் அருகே தான் வாசலில் தடுத்த பெண்மணி உள்ளே நிற்பதைக் கண்டு வியப்படைந்தான்.
“மன்னா, இந்தப் பெண்மணி வாசலிலேதான் இருக்கிறார்கள். இப்போதுகூடப் பார்த்துவிட்டு வந்தேன். உள்ளே எப்படி வந்தார்...” என்று குழப்பத்தோடு பேசினான்.
“அப்படியா எங்கே... வா. எனக்கு அந்தப் பெண்ணைக் காட்டு” என்று சொல்லி மன்னன் வாயில் காப்போன் பின் நடந்தான். வாயிலை அடைந்ததும் காவல்காரன்,
“மன்னா அதோ பாருங்கள்” என்று கை காட்டிய இடத்தில் அந்தப் பெண்மணி நின்றுகொண்டிருந்தாள். மன்னர் குழம்பிப் போனார். இங்கே அந்தப் பெண் இருக்கிறார் என்றால் உள்ளே இருப்பவர் யார்...”
இந்தப் புதிருக்கு விடை தெரிய அந்த அம்மாளை வணங்கி அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான் மன்னன். அவைக்குள் இவர்கள் புகுந்த கணம் அதுவரை அங்கிருந்த பெண்மணி மறைந்து போனார். மன்னருக்கு எல்லாம் விளங்கிவிட்டது. வந்திருப்பவர் சாதாரணப் பெண்மணியல்ல. சித்தபுருஷர் என்று. ஒரே நேரத்தில் இரண்டு மூன்று இடங்களில் இருக்கும் லகிமா ஸித்தி படைத்தவர் என்பதைப் புரிந்துகொண்டான். அந்த அம்மாள் கேட்டதற்கும் அதிகமான செல்வத்தைக் கொடுத்து சகல மரியாதைகளோடு திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்தார்.
திருவண்ணாமலையில் அதுவரை கட்டி முடிக்கப்படாமல் இருந்த வடக்கு கோபுரம் பிரமாண்டமாக எழுந்தது. சுமார் 171 அடியுடன் இன்றும் கம்பீரமாக நிற்கும் அந்தக் கோபுரத்தை எழுப் பிய அந்தப் பெண்மணியின் பெயர்தான் அம்மணி அம்மாள். அந்த கோபுரமும் அம்மணியம்மாள் கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது.
அம்மணி அம்மாளின் அவதாரமே மிகவும் ரகசியம் நிறைந்தது தான். ஆயிஅம்மாள் -கோபால்சாமி தம்பதிக்கு, சிவனருளால் கானகத்தில் கிடைத்த குழந்தை அம்மணி அம்மாள். தெய்விகமானது இவரின் வாழ்வு. ஒருமுறை திருவண்ணாமலைக்கு வந்து அண்ணா மலையாரை தரிசித்த கணத்தில் அவரின் மனமெங்கும் சிவமே நிறைந்தது. இனி திருவண்ணாமலையை விட்டு நீங்குவதில்லை என்றும் துறவே இனி தன் வாழ்வு என்றும் முடிவு செய்தார்.
ஆனால், பெற்றோர் அவரைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினர். அம்மணி அம்மாளோ அதை மறுத்து கோமுட்டிக் குளத்தில் குதித்துவிட்டார். அருகிலிருந்தவர்கள் அதிர்ந்துபோயினர். எவ்வளவு தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பெற்றோர் மிகவும் கலங்கினர். ஆனால், இறை வனின் கருணையால் அம்மணி அம்மாள் 3-ம் நாள் குளத்தில் இருந்து எழுந்துவந்தார். அன்று முதல், அவர் நிகழ்த்திய அற்புதங்கள் அநேகம்.
அம்மணி அம்மாள் ஜவ்வாது மலையில் மிருகங்கள் கோடையில் தண்ணீர் இன்றி வாடியிருப்பதைக் கண்டு வருந்தினார். காட்டுக் குள்ளேயே ஒரு குளத்தை வெட்டி அவற்றின் தாகத்தைத் தீர்த்தார். இன்றும் அந்தக் குளத்தை அம்மணியம்மாள் குளம் என்றே அழைக் கிறார்கள். இவரே அண்ணாமலையாரின் கட்டளைப்படி கோயிலின் வடக்குக் கோபுரத்தைக் கட்டி முடித்தார். பல அற்புதங் களோடு எழுந்தது வடக்குக் கோபுரம்.
தான் வந்த பணி அனைத்தையும் செவ்வனே முடித்த திருப்தியில் திருவண்ணாமலையிலேயே ஜீவன் முக்தி அடைந்தார் அம்மணி அம்மாள். கிரிவலப் பாதையில் தைப்பூச தினத்தன்று சமாதியாகிக் கோயில் கொண்டார்.
அம்மணி அம்மாள் சித்தர் பீடம் (சமாதிக் கோயில்), கிரிவலப் பாதையில், ஈசானியக் குளத்துக்கு அருகில் - ஈசான்ய லிங்கம் சந்நிதிக்கு எதிரில் உள்ளது. இந்த அன்னையின் ஆலயத்துக்கு வந்து வேண்டிக் கொள்பவர் களுக்கு, சகல வேண்டுதல்களும் நிறைவேறு கின்றன; தீராத நோய்களும் தீர்கின்றன. குறிப்பாகக் குடும்பத்தில் இருந்த வருத்தங்கள் நீங்கி அன்பும் அந்நியோன்யமும் பெருகும்; தடைகள் நீங்கி விரைவில் திருமண வரம் கைகூடும் என்கிறார்கள் பக்தர்கள்.
இத்தகு மகிமைகள் கொண்ட அம்மணி அம்மாள் சந்நிதியில் கார்த்திகை மகாதீபத் திருவிழாவை முன்னிட்டு, டிசம்பர் 7 புதன் அன்று வாசகர்கள் நலன் வேண்டியும் அவர்களின் குடும்பத்தார், நட்பு மற்றும் சுற்றத்தார் நன்மை பெற வேண்டியும் சக்தி விகடன் சார்பில் ஆயுஷ் ஹோமம் நடைபெற வுள்ளது.
அம்மணி அம்மாளின் குருவருளும் ஈசனின் திருவருளும் பொங்கிப் பெருகும் திவ்ய சந்நிதியில் நடைபெறும் இந்த ஹோமத்தில் வாசகர்களும் தங்கள் பிரார்த்தனையைச் சமர்ப்பித்துச் சங்கல்பம் செய்யலாம். இதன் பொருட்டுப் பதிவு செய்யும் வாசகர்களுக்கு, ஹோமப் பிரசாதம் அனுப்பிவைக்கப்படும்.

வாசகர்களின் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.
அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்), அம்மணி அம்மாள் விபூதிப் பிரசாதம் ஆகியவை அனுப்பிவைக்கப் படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).
நேரில் தரிசிக்க இயலாத வாசகர்கள் இணை தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
முன்பதிவு விவரங்களுக்கு தொடர்புக்கு: 97909 90404