Published:Updated:

திருப்பதி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாப்பூர் கோயில்களில் சிறப்பு ஹோமம், வழிபாடுகள்! #Corona

திருப்பதி
திருப்பதி ( TTD PHOTO )

திருமலையில் கொரோனா அச்சம் நீங்க வேண்டி 26-ம் தேதி தொடங்கிய தன்வந்திரி மகாயக்ஞம் இன்று பூர்ணாகுதியுடம் நிறைவுபெற்றது. மேலும் திருமலை தேவஸ்தானத்துக்கு சொந்தமான சுவிம்ஸ் மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் வந்து குவிவதால், புதிதாக வென்டிலேட்டர்கள் வாங்க உத்தரவிட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக நாடுமுழுவதும் இறைவழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கோயில்களிலும் அந்தந்தக் கோயில் நிர்வாகம் சார்பில் தினமும் தவறாமல் ஆகம முறைப்படி நித்திய பூஜைகள் முறைப்படி நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு நீங்க வேண்டும் என்று பல ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.

திருப்பதி
திருப்பதி
TTD PHOTO

திருமலை திருப்பதி தர்மகிரி வேதி வித்யாபீடத்தில் கொரோனா அச்சம் நீங்க வேண்டி 26 ம் தேதி தொடங்கிய தன்வந்திரி மகாயக்ஞம் இன்று பூர்ணாகுதியுடம் நிறைவுபெற்றது.

மேலும் திருமலை தேவஸ்தானத்துக்கு சொந்தமான சுவிம்ஸ் மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் வந்து குவிவதால், புதிதாக வென்டிலேட்டர்கள் வாங்க உத்தரவிட்டுள்ளது. மக்கள் அதிக அளவில் வருவதால் அவர்களுக்கு வேண்டிய உணவை வழங்கும் பொறுப்பையும் திருமலை தேவஸ்தானம் ஏற்றுக்கொண்டு இன்று 15,000 உணவுப் பொட்டலங்களைத் தயாரித்து அனுப்பியிருக்கிறது.

கொரோனா தடுப்பு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தருமை ஆதின குருமகா சன்னிதானம் 11 லட்சம் நிதி வழங்கினார். மேலும், தருமை ஆதீனத்தின் சார்பாக அதன் 27 திருக்கோயில்களிலும் சிறப்பு யாகங்கள், கூட்டு வழிபாடு, திருமுறைப் பாராயணம் ஆகியவை நடைபெற ஆணை பிறப்பித்தார். இதையொட்டி தருமை ஆதீனத்துக்குட்பட்ட வைத்தீஸ்வரன்கோவில் அருள்மிகு வைத்யநாதசுவாமி திருக்கோயிலில் இன்று காலை 28.3.2020 சனிக்கிழமை கொரோனா வைரஸ் கொடுமையிலிருந்து உலக மக்கள் விடுபட குரு மஹா சன்னிதானம் அருள் உரையின் படி வைத்ய நாத சுவாமிக்கு மஹா ருத்ர ஹோமம் மற்றும் மஹா அபிஷேகம் சிறந்த முறையில் நடைபெற்றது. இதில் குருமஹா சன்னிதானம் கலந்துகொண்டார். நிகழ்வில் கோயில் ஊழியர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

வைத்தீஸ்வரன் கோவில்
வைத்தீஸ்வரன் கோவில்

இதே போன்று கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட வேண்டி பழநி முருகன் கோயிலில் ஸ்கந்த ஹோமம் நடத்தப்பட்டது. 108 மூலிகைப் பொருட்கள் கொண்டு ஹோம குண்டம் வளர்த்து உச்சிகால பூஜையின்போது முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இன்று ம்ருத்யுஞ்ஜய ஹோமம் நடைபெற்றது. இன்று காலை கணபதி பூஜையோடு தொடங்கிய இந்த ஹோமம் நண்பகல் 12 மணியளவில் முடிவுபெற்றது. அதன்பின்பு கபாலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அடுத்த கட்டுரைக்கு