Published:Updated:

குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜையில் சக்தி விகடன் வாசகர்கள்!

ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி சந்நிதியில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், இன்று அதிகாலை குருப்பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

குருபெயர்ச்சி
குருபெயர்ச்சி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஸ்ரீவள்ளலார் கோயில் எனப்படும் ஸ்ரீஞானாம்பிகை உடனாகிய ஸ்ரீவதான்யேஸ்வர சுவாமி திருக்கோயில் உள்ளது.

குருபெயர்ச்சி
குருபெயர்ச்சி

`` கொள்ளும் காதன்மை பெய்துறுங்கோல்வளை

உள்ளம் உள்கி உரைக்கும் திருப்பெயர்

வள்ளல் மாமயிலாடு துறையுறை

வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே" என்று அப்பர் பெருமானால் போற்றப்பட்ட திருத்தலமாகும். இங்கு ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி ரிஷபத்தின் மேல் எழுந்தருளி காட்சி தருகிறார். ஸ்ரீமேதா என்பதற்கு ஞானம் என்பது பொருளாகும்.

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி

ரிஷபதேவருக்கு ஞானம் வழங்கியதால் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி என்றழைக்கப்படுகிறார். குரு அனுக்கிரக தலமான இங்கு, குருப்பெயர்ச்சி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Vikatan

இன்று ( 29.10.2019) அதிகாலை 3.40 மணிக்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு குரு இடம் பெயரும்போது தங்கக் கவசம் சாற்றப்பட்ட ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்திக்கு தீபாராதனை காட்டி, பஞ்சமுக சகஸ்ரநாம அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. குருவே சிவம் என்ற நூலை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட, மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவைத் தலைவர் வழக்கறிஞர் இராம.சேயோன் பெற்றுக்கொண்டார்.

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி

அதன்பின் சக்தி விகடன் வாசகர்களுக்கான சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்க விரும்பிய வாசகர்களின் பெயர், ராசி, நட்சத்திரம் சொல்லி சங்கல்பம் செய்தார் கந்த குருக்கள். அனைவருக்குமான அர்ச்சனை செய்து விபூதி பிரசாதம் தந்தார். அனுக்கிரக ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி அருள்பாலித்த விபூதி பிரசாதம் ஒவ்வொரு வாசகரின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. `குரு பார்க்கின் கோடி நன்மை' என்பது சோதிடமொழி. சகல சௌபாக்கியங்களை அருளும் குருவருளை குருப்பெயர்ச்சியான இன்றைய நாளில் பெறுவோமாக!