Published:Updated:

குடமுழுக்கு சிறப்பாக நடைபெற ராஜராஜ சோழன் சமாதியில் சிறப்பு பூஜை!

உடையாளூர்
உடையாளூர்

உடையாளூரில் உள்ள ராஜராஜ சோழன் சமாதியில் அமைந்துள்ள லிங்கத்துக்கு 21 வகையான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற வேண்டும் என உடையாளூரில் ராஜராஜ சோழன் சமாதி இருப்பதாகச் சொல்லப்படும் இடத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

உடையாளூரில்
உடையாளூரில்

கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் மாமன்னன் ராஜராஜ சோழன் சமாதி இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த இடத்தில் சுமார் 3 அடி உயரத்தில் லிங்கம் ஒன்று அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் பெரிய கோயிலில் கொண்டாடப்படும் சதயவிழாவில் சமூக ஆரவலர்கள் இங்கு சிறப்பு பூஜைகள் செய்து வணங்குவர். அத்துடன் விஷேச தினங்களில் அருகில் உள்ள பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.

மேலும், தமிழகம் முழுவதிலுமிருந்து கும்பகோணம் வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் உடையாளூருக்கு வந்து ராஜராஜ சோழன் சமாதியைப் பார்த்துவிட்டுச் செல்கின்றனர். இந்த நிலையில் பெரியகோயில் குடமுழுக்கு வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காமல் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற வேண்டும் எனக் கோயில் வளாகத்தில் இரண்டு தினங்கள் அஸ்திரயாகம் நடைபெற்றது.

உடையாளூரில்
உடையாளூரில்

இந்த நிலையில், இந்து தமிழர் கட்சி மற்றும் ராஜராஜ சோழன் பக்தர்கள் சார்பில் உடையாளூரில் உள்ள ராஜராஜ சோழன் சமாதியில் அமைந்துள்ள லிங்கத்துக்கு 21 வகையான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ``இன்று ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரமான சதய நட்சத்திர தினம். எனவே, இந்தச் சிறப்பு தினத்தில் பெரிய கோயில் குடமுழுக்கு எந்த விதமான அசம்பாவிதமும் நிகழாமல் சிறப்பாக நடைபெற வேண்டும் என மாமன்னனின் சமாதி அமைந்துள்ள இந்த இடத்தில் சிறப்பு பூஜைகள் செய்தோம்'' என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பின் செல்ல