Election bannerElection banner
Published:Updated:

அதிசார குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

கோகர்ணேஸ்வரர்
கோகர்ணேஸ்வரர்

குருபகவான் பார்வை மற்றும் ஸ்தானத்தால் உண்டாகும் சுபபலன்கள் அதிகரிக்கவும் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு நற்பலன்கள் அதிகரிக்கவும் குரு ப்ரீதி செய்வது சிறப்பு.

6-4-21 அன்று குருபகவான் மகர ராசியில் ஜன்ம குருவாக சஞ்சாரம் செய்துவந்த குருபகவான் அதிசாரமாக கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். குருபகவான் 15-9-21 வரை கும்ப ராசியிலேயே சஞ்சரித்து மீண்டும் மகர ராசிக்குத் திரும்புவார்.

இதுபோன்று ஓராண்டுக்கு முன்பாக குருபகவான் பெயர்ச்சி ஆவதை அதிசார குரு என்கிறார்கள் ஆன்றோர்கள். இந்த அதிசார குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் குருபகவான் கும்பராசியில் சஞ்சரித்துப் பலன்கள் வழங்க இருக்கிறார்.

திருக்கோழம்பம்
திருக்கோழம்பம்

நவகிரகங்களில் குருபகவான் பூரண சுபகிரகம். எனவே இவர் இருக்கும் இடத்தைவிடத் தன் பார்வை பலத்தால் நன்மைகளை அள்ளித் தருவார் என்பது நம்பிக்கை. குருபகவான் தன் 5,7,9 ம் பார்வையாக மிதுனம், சிம்மம் மற்றும் துலாம் ஆகிய ராசிகளைப் பார்த்து நற்பலன்களை அளிக்க இருக்கிறார். குருவின் பார்வை கிடைக்கும் இந்த மூன்று ராசிகளுக்கும் நற்பலன்கள் மிகுதியாக நடைபெறும். மேலும் மேஷத்துக்கு 11-ம் வீட்டிலும் மகரத்துக்கு தன குடும்ப வாக்கு ஸ்தானமான 2-ம் வீட்டிலும் சஞ்சரித்து அவர்களுக்கு மிகுதியான பலன்களை வழங்க இருக்கிறார்.

மேஷம் முதல் கன்னிவரை அதிசார குருப்பெயர்ச்சி பலன்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்

குருபகவான் பார்வை மற்றும் ஸ்தானத்தால் உண்டாகும் நன்மைகள் அதிகரிக்கவும் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு நற்பலன்கள் ஏற்படவும் குரு ப்ரீதி செய்வது சிறப்பு.

குருவுக்கெல்லாம் குருவாக ஜதக் குருவாக விளங்குபவர் சிவபெருமான். சிவபெருமானை வழிபாடு செய்தால் நவகிரகங்களும் நமக்கு நன்மையையே அருளும். அதனால் அதிசார குருப் பெயர்ச்சியினால் நற்பலன்கள் அதிகரிக்க திருக்கோழம்பம் கோகர்ணேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு சங்கல்ப பூஜை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம்.

உமையம்மை, பசுவடிவெடுத்து ஈசனை வழிபாடு செய்த தலம் இது. இத்தலத்தை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடிப்பரவியிருக்கிறார்கள். மகாவிஷணுவிற்கும், பிரம்மாவிற்கும் ஈசன் இங்கு குருவாக இருந்து உபதேசம் செய்ததாகத் தலவரலாறு சொல்கிறது.

அதிசார குரு
அதிசார குரு

இந்தத் தலத்திலுள்ள தீர்த்தத்தின் பெயர் பிரம்ம தீர்த்தம். பிரம்மன் இந்தத் தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.

கோழம்பநாதருக்கு அருள்மிகு கோகர்ணேஸ்வரர் என்ற திருப்பெயரும் உண்டு. இத்தலத்தில் அருள்மிகு சௌந்தரநாயகி சமேதராகக் காட்சி அருள்கிறார். சுவாமிக்கு கோகிலேஸ்வரர் என்றொரு திருநாமமும் உண்டு.

கும்பகோணம் மயிலாடுதுறை மார்க்கத்தில் ஆடுதுறைக்கு அருகே உள்ள இந்தத் திருத்தலத்தில், வாசகர்களின் நலன் வேண்டி சுவாமிக்கு சிறப்பு சங்கல்ப பூஜை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கட்டணமில்லா இந்த சங்கல்ப பூஜையில் நீங்களும் கலந்துகொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் நாளைக் காலை அதிகாலை சுபவேளை நிகழ்ச்சியில் காணலாம்.

அதிகாலை சுபவேளை நிகழ்ச்சி தினமும் காலை 6 மணிக்கு சக்தி விகடன் யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் ஒளிபரப்பாகும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு