Published:Updated:

திருவரங்கம்!

திருவரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
திருவரங்கம்

பார்த்தன்

திருவரங்கம்!

பார்த்தன்

Published:Updated:
திருவரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
திருவரங்கம்

பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் (திருவரங்கம்), 108 வைணவத் தலங்களுள் முதன்மையானது. வைணவர்கள், ‘கோயில்’ அல்லது ‘பெரிய கோயில்’ என்று குறிப்பிட்டால் அது ஸ்ரீரங்கத்தையே குறிக்கும். ஆழ்வார்கள் 11 பேரால் பாடப்பெற்ற வைணவத் தலம் இது மட்டுமே. திருவரங்கத்தில் பாயும் காவிரி நதி, பரமபதமான ஸ்ரீவைகுண்டத்துக்கு வெளியே ஓடும் ‘விரஜா’ நதிக்கு ஒப்பானது.

திருவரங்கம்
திருவரங்கம்

ங்குள்ள மூலவர் ரங்கநாதர் என்றும் பெரிய பெருமாள் என்றும் திருநாமங்கள் உடையவர். உற்சவ மூர்த்தி ரங்கராஜர், நம்பெருமாள் என்றும் அழகிய மணவாளன் என்றும் போற்றப்படுகிறார். ஸ்ரீரங்கம், நவகிரகங்களில் ஒன்றான சுக்கிர க்ஷேத்திரமாகவும் கருதப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொன்வேய்ந்த அழகிய விமானத்தின் கீழ் காயத்ரி மண்டபத்துக்கு முன்பு கருவறையில் ஆதிசேஷன் மீது அரங்கன் பள்ளி கொண்டிருக்கிறான். அரிதுயில் எனும் ஆனந்த கோலத்தில் அரங்கன் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறான். வலக்கை திருமுடியைத் தாங்க, இடக்கை மலர்ப்பாதத்தைச் சுட்டிக்காட்ட தெற்கு முகமாக இலங்கையை நோக்கியபடி அருள்பாலிக்கிறார் மூலவர் ஸ்ரீரங்கநாதர்.

திருவரங்கம்
திருவரங்கம்

ரங்கநாதரைச் சுற்றி இருக்கும் ஏழு (ஸப்த) பிராகாரங்களும் ஏழு (ஸப்த) லோகங்களாகக் கருதப்படுகின்றன. ஏழாம் பிராகாரம் மாட மாளிகை பிரதட்சணம் எனப்படுகிறது. இந்த பிராகாரத்தின் தெற்கு வாயிலாக இருந்த மொட்டை கோபுரம் அகோபில மடம் 44-வது பட்டம் அழகிய சிங்கர் ஜீயரால் கட்டப்பட்டது. இந்த கோபுரத்தின் உயரம் 236 அடி. உலகிலேயே அதிக உயரமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருவரங்கத்தில் இருக்கும் ‘ரங்க விமானம்’ ஆதியில் தானாகவே உருவானது. இந்த விமானம் பொன்னால்வேயப்பட்டு ‘ஓம்’ என்கிற பிரணவ வடிவில் அமைந்துள்ளது.

பல ஆயிரம் ஆண்டுகள் பிரம்மா, மகா விஷ்ணுவை நோக்கி தவமிருந்து, பாற்கடலி லிருந்து பெறப்பட்டது ரங்க விமானம். நான்கு வேதங்களையும் பிரம்மா இந்த விமானத்தின் முன் ஓதியிருக்கிறார். ரங்க விமானத்தில் அர்ச்சா ரூபமாக அவதரித்த ஸ்ரீரங்கநாதரை இக்ஷவாகு மன்னர் தன் குலதெய்வமாக அயோத்தியில் வைத்து பூஜை செய்து வந்தார்.

இக்ஷவாகு வம்ச குலத் தோன்றலான ராமபிரான், சீதையை மீட்க உதவிய விபீஷணனுக்கு ரங்கநாதர் விக்கிரகத்தைப் பரிசாக அளித்தார். விபீஷணன் இலங்கைக்கு எடுத்துச்செல்லும் வழியில் தர்மவர்மா என்னும் சோழ மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க மூர்த்தத்தை காவிரி நதியின் கரையில் தன் அரசான இலங்கையை நோக்கி அருள்தரும் முகமாக பிரதிஷ்டை செய்ததாக ரங்க மகாத்மியம் கூறுகிறது.

தாயார் ரங்கநாயகி சந்நிதிக்குச் செல்லும் வழியில் அரங்கனுக்கே வைத்தியம் செய்யும் விதமாக ஸ்ரீமன் நாராயணனே தன்வந்திரியாகக் காட்சியளிக்கிறார். கையில் அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் இவற்றுடன் தரிசனம் தரும் இவரை வழிபட்டால் தீராத நோயும் தீருகிறது.

ஸ்ரீரங்கம் ஆலயத்தின் நிர்வாகம், கோயிலொழுகு ஆகியவற்றை ச் சீர்படுத்திய பெருமை ஸ்ரீராமாநுஜரையே சாரும். 120 ஆண்டுகள் வாழ்ந்து வைணவ சம்பிரதாயத்துக் குத் தொண்டுபுரிந்த ஸ்ரீராமாநுஜர் கி.பி 1137-ம் ஆண்டில் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தார்.

திருவரங்கம்
திருவரங்கம்

ஸ்ரீராமாநுஜர் தன் உடலோடு சந்நிதி கொண்டது இங்குதான் என்பர். இங்கு ஸ்ரீராமாநுஜர் பத்மாசன கோலத்தில் தரிசனம் தருகிறார். இன்றும் அவரது சிகை மற்றும் நகங்கள் தரிசனம் செய்யக் கிடைக்கின்றன. வருடத்துக்கு இரு முறை பச்சை கற்பூரம், குங்குமப்பூ போன்றவை விழுதாக அரைத்து அவருக்குப் பற்றாக உடலில் பூசப்படுகின்றன.

ங்கிருக்கும் சக்கரத்தாழ்வார் சந்நிதியில் வழிபட்டால் நம்மை வாட்டும் எதிர்மறை எண்ணங்கள், நோய் நொடிகள் நீங்குவதாக நம்பப்படுகிறது.

கி.பி.1331-ல் மாலிக்காபூர் படையெடுப்பின் போது அரங்கன் விக்கிரகம் பக்தர்களால் வெளியே எடுத்துச் செல்லப்பட்டது. அரங்கன் திரும்பவும் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தது 1371-ம் ஆண்டு.

ருடத்தின் 365 நாள்களில் 322 நாள்கள் உற்சவம் காணும் பெருமாள், ஸ்ரீரங்கத்துப் பெருமாள்தான். ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி அன்று ரத்னாங்கி அணிந்து உலா வரும் நம்பெருமாளை, படி தாண்டாத தாயார் தனது கோயிலிலிருந்து ஐந்து குழிகளிலும் தன் ஐந்து விரல்களை வைத்து மூன்று வாயில்கள் வழியாகக் கண்டு மகிழ்வாராம். அதைக் குறிக்கும்விதமாக தாயார் செல்லும் வழியில் ஐந்து குழிகள் தரையில் உள்ளன.

ல்லா பெருமாள் கோயில்களிலும் மூலவருக்கு ஆனி ஜ்யேஷ்டாபிஷேகத்தன்று மட்டுமே தைலக் காப்பு சாத்தப்படும். ஆனால், ஸ்ரீரங்கத்தில் மட்டும் இத்துடன் ஆவணி பவித்ரோற்சவத்தின் இறுதி நாளிலும் தைலக்காப்பு சாத்தப்படும். எனவே, ஸ்ரீரங்கநாதருக்கு மட்டும் இருமுறை தைலக்காப்பு.

லகத்தின் எந்த மூலையில் இருந்தும் திருவரங்கம் இருக்கும் திசையை நோக்கி வணங்கினாலே போதும்; இந்தத் தலத்துக்கு நேரில் வந்து, இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி திருவரங்கனை தரிசித்த பலன் கிடைக்கும் என்பார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism