Published:Updated:

திருவருள் தருவது தீபம்!

தீபம்
பிரீமியம் ஸ்டோரி
News
தீபம்

கிரகங்கள் தொடங்கி ஓருயிர் ஜீவன்கள் வரை இயங்குவது உஷ்ணத் தினால் என்கிறது அறிவியல்.

தீபம் என்றால் ஆதி உருவைத் தீயில் காண்பது என்று பொருள். `தீபம்’ என்ற சொல்லே மனத்தில் நேர்மறை எண்ணத்தை உருவாக்கும் உற்சாகச் சொல்லாகிறது. அதுதான் தீபத்துக்கான மகத்துவம்.

சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன சம்பதாசத்புத்தி ப்ரகாசாய தீபஜ்யோதிர் நமோநம:

தீபம் ஏற்றுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும் எனச் சொல்கிறது இந்த ஸ்லோகம்.

நம் பாரதத்தின் ஆன்மிகக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது தீபவழிபாடு. விரிவான வழிபாடுகள் தெரியவில்லை என்றாலும், காலை-மாலை இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் ஸித்திக்கும் என்கின்றன ஞான நூல்கள்

விளக்கின் ஒளியை, மெய்ஞ்ஞானம் அளிக்கும் அந்த பெரும் சுடரை அருட்பெரும்ஜோதி என வழிபட்டவர் வள்ளலார். சகல மக்களும் வழிபடும் ரூபம் ஜோதி. நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளை அடையாளமாக உணர்த்துவதே தீபத்தின் பெருமை. தீப ஒளி எங்கும் நிறைவது போல், இறைவனும் விளக்கேற்றி வழிபடுவோர் மனங்களில் நிறைந்து விடுகிறார்.

கண்ணும் ஒளியும் சேரும் இடத்திலேயே காட்சி தெரிகிறது. ஜீவனும் பரமாத்மாவும் இணையும்போது ஆன்ம காட்சி விரியும். ஒரு விளக்கில் ஒளி விரியும்போது, அந்த இடத்தில் ஓர் அளப்பரிய ஆன்ம சக்தியும் விரிவடைகிறது. ஆகவே, விளக்கைச் சுற்றி எழும் அதீத ஆற்றலோடு உச்சரிக்கப்படும் வார்த்தைகளும் மந்திரங்களும் வலிமை பெறுகின்றன என்கின்றன சாஸ்திரங்கள்.

திருவருள் தருவது தீபம்!

கிரகங்கள் தொடங்கி ஓருயிர் ஜீவன்கள் வரை இயங்குவது உஷ்ணத் தினால் என்கிறது அறிவியல். சகலமும் இயங்குவது உஷ்ணத்தால் என்பதால், உஷ்ணம் கூடிய ஒளி நிறைந்த தீப வழிபாடு மகத்தான வழிபாட்டு முறையாக உலகெங்கும் இருந்து வருகிறது.

உத்தராயனம் தொடங்கும் தை மாதம் ஞானோதயம் தொடங்கும் காலம் என்கிறது ஆன்மிகம். கார்த்திகை மாதத்தில் உயர்ந்த இடங்களில் தீபத்தை ஏற்றி வைத்து வழிபடுவது வழக்கமென்றால், தை மாத பூச நன்னாளில் நீர் நிலைகளில் விளக்கு வைத்து வழிபடுவது நம் வழக்கம். தைப் பூச நாளில்தான் முதல் முறையாக நீர் தோன்றியது என்றும் அதைக் குறிப்பிடவே இம்முறை வந்தது என்றும் கூறுவார்கள்.

மொத்தத்தில் உயிர்களின் அச்சத்தை, அறியாமையை அகற்றும் அற்புத வழிபாடு தீப வழிபாடு. தொன்றுதொட்டு நம் முன்னோர் கடைப்பிடித்த முதன்மை வழிபாடும்கூட. நாமும் அனுதினமும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவோம்; இறையாகிய பேரொளியின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்.

அங்ஙனம் விளக்கேற்றும்போது மும்மூர்த்தியரையும், முப்பெருந் தேவியரையும் திருவிளக்காகவும் அதன் ஒளிச்சுடராகவும் கண்டு, `தீபஜோதியே நமோ நம:’ எனப் போற்றி வழிபடுவதால் நன்மைகள் பெருகும்.

- கே.சுபா, சென்னை-55