திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

உதவலாம் வாருங்கள்

தலங்கள்... தகவல்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
தலங்கள்... தகவல்கள்!

வாசகர்களின் ஆன்மிகப் பகிர்வுகள்!

ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த ஆன்மிகத் தகவல்கள் மற்றும் வாசகர்களின் சந்தேகங்களுக்கு வாசகர்களே தகவல் பகிரும் பகுதி இது. ஆன்மிகம் தொடர்பான உங்களின் சந்தேகங்கள், தேவைப்படும் தகவல்களை நீங்கள் கேள்வியாகக் கேட்கலாம். அத்துடன் இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு, துல்லிய விவரங்களை - பதில்களை நீங்கள் அறிந்திருந்தால் அவற்றையும் பகிரலாம்.

உதவலாம் வாருங்கள்

வாசகர்களின் கேள்விகள்!

னக்குக் `கார்த்திகை கவசம்' எனும் புத்தகம் தேவைப் படுகிறது. இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும் என்ற விவரம் - முகவரி அறிந்தவர்கள் பகிருங்களேன். எவரிடமேனும் இந்தப் புத்தகம் இருப்பின், நகல் எடுத்து அனுப்பிவைத்தாலும் பயனுள்ளதாக இருக்கும்.

- எம்.உஷாராணி, பெங்களூரு

பாடல் ஒன்று முழுமையாக எனக்குத் தேவைப்படுகிறது.

சிவம் எங்கே சக்தி எங்கே சிவசக்தி எங்கே எங்கே
சிந்தனை செய் மனமே இங்கே சிந்தனை செய் மனமே

இந்த வரிகள் மட்டுமே நினைவில் உள்ளது. இந்தப் பாடல் முழுமையாக எங்கு கிடைக்கும். எவரிடமேனும் இருந்தால் பகிர்ந்து உதவுங்களேன்.

- ஆர்.சண்முகசுந்தரம், கோவை-11

யிலாடுதுறை மாவட்டம், 35 மகாராஜபுரம் வட்டம், ஆனந்தக்குடி கிராமத்தில் இருந்த சிவாலயம் முற்றிலும் அழிந்துள்ளது. இதனை தொல்லியல்துறை ஆய்வாளர் ஆய்ந்து, கோயிலின் சிற்ப வடிவங்கள் மற்றும் கட்டுமானம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆலயம் பல்லவர் காலத்தைச் சேர்ந்தது என்று அறிக்கை அளித்துள்ளார்கள். 100 ஆண்டுக்கு முந்தைய வருவாய்த் துறை வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயில் என்ன பெயரில் இருந்தது என்று தெரிந்தவர்கள் விவரம் தெரிவிக்க வேண்டுகிறேன்.

- எம்.பிச்சைபிள்ளை, மயிலாடுதுறை

சிவ வடிவங்களில் உன்னதமானது ஶ்ரீதட்சிணாமூர்த்தி திருவடிவம். அபூர்வமாக சில தலங்களில் ஶ்ரீதட்சிணாமூர்த்தி தேவியுடன் அருள்வார் என அறிந்தேன். இதுபோன்ற அமைப்பில் தென்முகக் கடவுள் அருளும் தலங்கள் பற்றிய விவரம் தேவை.

- அ.திருமலை, திருச்சி-3

உதவலாம் வாருங்கள்

மகான் தரிசனம்!

சக்தி விகடன் 2.11.21 தேதியிட்ட இதழில், `மகான் பாடகச்சேரி சுவாமிகளின் சரிதத்தை விளக்கும் புத்தகம் எங்கு கிடைக்கும் என்ற விவரம் தேவை. எவரிடமேனும் புத்தகம் இருந்தால், நகல் எடுத்து அனுப்பிவையுங்களேன்' என்று சேலம் வாசகி எம்.அன்னபூரணி கேட்டிருந்தார். அவருக்குக் கீழ்க்காணும் விவரத்தை சென்னை வாசகி லதா நாராயணன் பகிர்ந்துள்ளார்.

`கும்பகோணம் ஶ்ரீநாகேஸ்வர ஸ்வாமி கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்வித்தவர் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள். அவர், எப்போதும் கழுத்தில் ஓர் உண்டியலைக் கட்டித் தொங்க விட்டிருப்பார். அதில் ‘காலணா’ போடச் சொல்வார். இப்படிப் பணம் சேர்த்தே அந்த நாகேஸ்வர ஸ்வாமி கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்தினாராம்.

மகான் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் 1876-ம் வருடம் மே மாதம் 9-ம் தேதி கந்தசாமி அர்த்தனாரி தம்பதியின் மகனாக கோவை மாவட்டம், மஞ்சம்பாளையம் கிராமத்தில் அவதரித்தார். இவர் குரல் கொடுத்தால் பல நாய்கள் எங்கிருந்தோ வந்து சேரும். இவர் தரும் விருந்தினைச் சாப்பிட்டுவிட்டு இவர் சொன்னதும் மாயமாய் மறையும் என்பார்கள். இந்த மகான் நடத்திய பைரவ பூஜையில் பல பக்தர்கள் இப்படியான அரிய காட்சிகளைக் கண்டு சிலிர்த்துள்ளார்கள்.

ஓரிடத்தில் தங்காமல் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்த மகான் இவர். `நான் மறைந்தாலும் என்னை நம்பியிருப்பவர்களுக்கு நான் என்றும் துணையாக இருப்பேன். என்னை நம்பாதவர்களுக்கும், நம்பிக்கை வரும் பொருட்டு உதவிகள் செய்து வருவேன்... என்று அன்பர்களிடம் கூறி வந்த பாடகச்சேரி சுவாமிகள் ஆற்றிய அரும்பணிகள் ஏராளம்.

மகான் ஶ்ரீபாடகச்சேரி சுவாமிகள் தேச சஞ்சாரம் செய்து, சென்னை திருவொற்றியூரில் சமாதியானார்.

மகான் ஶ்ரீபாடகச்சேரி சுவாமிகளின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய நூல்களின் நகலை மதுரை திருமங்கலம் வாசகர் டி.சுந்தரமூர்த்தி அனுப்பிவைத்துள்ளார். அவை வாசகி அன்னபூரணிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

க்தி விகடன் 2.11.21 தேதியிட்ட இதழில், `உத்தரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய சித்தர்களின் ஜீவசமாதி ஆலயங்கள் அமைந்திருக்கும் தகவல்கள் தேவை' என சிதம்பரம் வாசகர் வி.பரணிகுமார் கேட்டிருந்தார். அவருக்குக் கீழ்க்காணும் விவரத்தை சென்னை வாசகர் `சிம்ம வாஹினி' டி.ஜி.நாராயணராவ் பகிர்ந்துள்ளார்.

`அருப்புக்கோட்டையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் புலியூரில் புலியூரான் சித்தர் கோயில் உள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரானந்தரை தரிசிக்கலாம். மதுரை திருப்பரங்குன்றம் காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் மச்சமுனியை வழிபடலாம். மதுரைக்கு வடமேற்கில் 30 கி.மீ. தூரத்தில் குட்லாம்பட்டி எனும் இடத்தில் ஆனந்த நடராஜ சுவாமிகளை தரிசித்து வழிபடலாம்.'